என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்-  4 பேர் மீது வழக்கு
    X

    சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்கு

    • சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ்டம் சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி. அவரது மகன் பிரபு(32). இவரது மனைவி சுஜாதா(28), இவர்களுக்கு கிருத்திஷா என்ற மகள் உள்ளார். கணவன், மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்நிலையில், சுஜாதா தனது அக்கா மகன் சதீஷ்(38) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த பிரபு மற்றும் அவருடன் வந்த கொளஞ்சி(52), இவரது மனைவி சரோஜா(45), பாலன் மனைவி விஜலட்சுமி(28) ஆகியோர் சதீஷிடம் எப்படி பேசலாம் எனக் கேட்டு, சுஜாதாவை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் பிரபு, கொளஞ்சி, சரோஜா, விஜயலட்சுமி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×