என் மலர்
கள்ளக்குறிச்சி
- தியாகதுருகம் அருகே பராமரிப்பு இன்றி தேக்குமரங்கள் காய்ந்து போனது.
- அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடம் அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் கடந்த 5- ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, தேக்கு, நாவல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் தேங்கியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் காய்ந்து போனது. மீதமுள்ள மரக் கன்றுகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் எனவும் மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு நடுவே மிகவும் தாழ்வான நிலையில் மின்கம்பி செல்கிறது.
இது எதிர்பாராத விதமாக யாரேனும் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பிகளை இழுத்து கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது,
- மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தார்.
இதில் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்து வருவேன், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன், முதியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பேன், மேலும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறையில் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதை தடுத்திட பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது சமூக பாதுகாப்பு நல அலுவலர் தீபிகா மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அஜிதா பேகம் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
- ரிஷிவந்தியம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது.
கள்ளகுறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அலமேலு (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைசேர்ந்த கோவிந்தன் என்பவருடைய குழந்தைகள்அடுப்பு அருகே விளையாடியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த அலமேலு அந்த குழந்தைகளை தள்ளி சென்று விளையாடுமாறு கூறியுள்ளார்.
இதைகேட்டு ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும்அவருடைய மனைவி உமா ஆகியோர் அலமேலுவை திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதை தடுக்க முயன்ற அலமேலு உறவினர் முனியம்மாளையும் கோவிந்தன், உமா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கோவிந்தன், உமா ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தியாகதுருகம் அருகே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 41) இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கவுசல்யா( 21) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கவுசல்யா 2-வது திருமணம் செய்து கொண்ட மனவருத்தத்தில் இருந்ததார். சம்பவத்தன்று முடியனூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த கவுசல்யா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு 2 வயதில் யோகேஸ் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கள்ளக்குறிச்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
- கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் பகுதி யில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின்தகனமேடை கட்டிட பணிகளையும், ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் ஏமப்பேர் பகுதியில் உள்ள குளத்தில் மதகு மற்றும் நீர் வெளியேறும் வாய்க்கால், பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகளையும், ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிட கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என நகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியா ளாகள் உடனிருந்தனர்.
- கள்ளக்குறிச்சி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலியானது.
- இறந்த ஆடுகளின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் மர்ம விலங்குகள் கடித்து உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர தனது விவசாய நிலத்தில் 15 ஆடுகள் கட்டி வைத்திருந்தார். நேற்று இரவு ஒரே நேரத்தில் அனைத்து ஆடுகளும் கத்தியது. அப்போது அந்த பகுதியில் கிடை போட்டு இருந்த மற்ற விவசாயிகள் அங்கு சென்று பார்த்தனர்.
ஆடுகள் பலி
அப்போது 15ஆடுகள் இறந்து கிடந்தது. இறந்த ஆடுகளின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் மர்ம விலங்குகள் கடித்து உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் விவசாயிகள் ஏராளமானோர் திரண்டனர்.
இதுபற்றி விவசாயிள் கூறுகையில் ஒரே மாதிரியாக ஆடுகள் இறந்து கிடப்பதை பார்க்கும் போது கல்வராயன்மலை பகுதியில் இருந்து இறங்கி வந்த சிறுத்தை புலிகள் கடித்து இருக்கலாம். எனவே வனத்துறையினர் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
- சங்கராபுரம் அருகே மாணவர் சேர்க்கையை வழியுறுத்தி கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பொதுமக்கள் மத்தியில் கல்விக்காக அரசு அளித்துவரும் நலத்திட்டங்கள், அரசு வழங்கும் உதவித் தொகை, பள்ளியின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் அளிக்க வேண்டிய பங்களிப்பு ஆகிய வற்றை விரிவாக விளக்கி கூறினார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளகுறிச்சி மாவ–ட்டம் சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை கல்வி விழிப்பு–ணர்வு பேரணி நடை–பெற்றது. பேரணிக்கு பள்ளியின் தலைமையா–சிரியர் இலட்சுமிபதி தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரலேகா, துணைத்தலைவர் சித்ரா, உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் சிட்டிபாபு, மகாலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை தொடங்கி–வைத்து பொதுமக்கள் மத்தியில் கல்விக்காக அரசு அளித்துவரும் நலத்திட்டங்கள், அரசு வழங்கும் உதவித் தொகை, பள்ளியின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் அளிக்க வேண்டிய பங்களிப்பு ஆகிய வற்றை விரிவாக விளக்கி கூறினார்கள். பொது மக்களில் சிலர் அவரோடு கலந்துரையாடினர். மேலும் பள்ளி நடைமுறையில் சில ஆலோசணைகளை வழங்கி–னார். உதவியாசிரியர் சிட்டிபாபு நன்றி கூறினார்.
- காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.
- கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, வடபொன் பரப்பி, பகண்டை கூட்டு ரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக் டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர், குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலை–யங்களில் வைத்து விசாரிக்க வேண்டும்.
கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக ஆஸ்பத்தி–ரிக்கு அழைத்துச் செல்ல–வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடு–பவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவரும் கடைபிடிக்க–வேண்டும் என பேசினர்.
இதில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கரா–புரம் இன்ஸ்பெக்டர் பால–கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், முருகன், சூர்யா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
- சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் உரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆரூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பாட்டை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 24 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்
- கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணு பிரியா (வயது 24) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, இதேபோல் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்ந ஆசைத்தம்பி மனைவி சொர்ண புஷ்பம் என்பவர் அணிந்திருந்த 13 பவுன் நகை, வேறு ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து மூன்று பெண்களும் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன்படி போலீசார் இந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பொதுமக்கள் முறையாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண்களிடம் நகையை திருடிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சின்னசேலம் அருகே புனித அந்தோணியார் தேர்ப்பவனியில் அனைத்து சமய பக்தர்கள் பங்கேற்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கீழைநாட்டு பதுவா புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கீழைநாட்டு பதுவா புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து பங்குதந்தை ஆரோக்கிய–தாஸ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ் ஆகியோ–ரது ஏற்பாட்டின் பேரில் மறை மாவட்ட அருட்தந்தையர்களால் நவநாள் திருப்பலி, புதுசிறப்பு பிரார்த்தனை மற்றும் குணமளிக்கும் வழிபாடு தினந்தோறும் நடைபெற்று வந்தது.
மேலும் மாலை நேரத்தில் முக்கிய தெருக்கள் வழியாக புனித அந்தோணி–யார்சொரூபம் பவனியாக வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவளி நேற்று நடை–பெற்றது.இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு ஆண்டு பெருவிழா திருப்ப–லியை புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டம் பேராயர் பிரான்சிஸ் நடத்தி வைத்தார்.
இதையடுத்து இரவு 11 மணிக்கு வண்ண மின்விளக்குகளால் . அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து5 ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆடம்பரதேர்பவனி அதற்கு முன்பாக புனித சூசையப்பர் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேர்கள் பவனியாகசென்றது.
அப்போது புனித அந்தோணி யாரின் மகிமை–கள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன. ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. இதில் சின்னசேலம் பகுதி மட்டுமின்றி கள்ளக்கு–றிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவ–ண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மத வேறுபாடு–கள் இன்றி ஆயிர–க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சங்கராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் முகமது நபி பற்றி அவதூறாக கருத்துகளை கூறிய நுபுல் சர்மா மற்றும் நவின் ஜிண்டால் ஆகியோரை கைது வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தொகுதி தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜ்தீன், தொகுதி பொருளாளர் ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சையத் தாஹிர் அலி வரவேற்றார். மாவட்ட தலைவர் முகமத் ரபி, மாவட்ட செயலாளர் தர்பார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் நகர தலைவர் ஆசாத் அலி, கள்ளகுறிச்சி நகர செயலாளர் அத்னான், நிர்வாகிகள் அப்துல்லா, இஸ்மாயில் மற்றும் தேவபாண்டலம், மூங்கில்துறைப்பட்டு, வடசேமபாளையம் மற்றும் மூரார்பாளையத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






