என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலி
    X

    ஆடுகள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    கள்ளக்குறிச்சி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலி

    • கள்ளக்குறிச்சி அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலியானது.
    • இறந்த ஆடுகளின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் மர்ம விலங்குகள் கடித்து உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர தனது விவசாய நிலத்தில் 15 ஆடுகள் கட்டி வைத்திருந்தார். நேற்று இரவு ஒரே நேரத்தில் அனைத்து ஆடுகளும் கத்தியது. அப்போது அந்த பகுதியில் கிடை போட்டு இருந்த மற்ற விவசாயிகள் அங்கு சென்று பார்த்தனர்.

    ஆடுகள் பலி

    அப்போது 15ஆடுகள் இறந்து கிடந்தது. இறந்த ஆடுகளின் தொடை மற்றும் கழுத்து பகுதியில் மர்ம விலங்குகள் கடித்து உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் விவசாயிகள் ஏராளமானோர் திரண்டனர்.

    இதுபற்றி விவசாயிள் கூறுகையில் ஒரே மாதிரியாக ஆடுகள் இறந்து கிடப்பதை பார்க்கும் போது கல்வராயன்மலை பகுதியில் இருந்து இறங்கி வந்த சிறுத்தை புலிகள் கடித்து இருக்கலாம். எனவே வனத்துறையினர் இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×