என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி விழிப்புணர்வு பேரணி"

    • சங்கராபுரம் அருகே மாணவர் சேர்க்கையை வழியுறுத்தி கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • பொதுமக்கள் மத்தியில் கல்விக்காக அரசு அளித்துவரும் நலத்திட்டங்கள், அரசு வழங்கும் உதவித் தொகை, பள்ளியின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் அளிக்க வேண்டிய பங்களிப்பு ஆகிய வற்றை விரிவாக விளக்கி கூறினார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவ–ட்டம் சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை கல்வி விழிப்பு–ணர்வு பேரணி நடை–பெற்றது. பேரணிக்கு பள்ளியின் தலைமையா–சிரியர் இலட்சுமிபதி தலைமை தாங்கினார்.

    பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரலேகா, துணைத்தலைவர் சித்ரா, உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். பள்ளி ஆசிரியர்கள் சிட்டிபாபு, மகாலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியை தொடங்கி–வைத்து பொதுமக்கள் மத்தியில் கல்விக்காக அரசு அளித்துவரும் நலத்திட்டங்கள், அரசு வழங்கும் உதவித் தொகை, பள்ளியின் வளர்ச்சிக்கு பொதுமக்களின் அளிக்க வேண்டிய பங்களிப்பு ஆகிய வற்றை விரிவாக விளக்கி கூறினார்கள். பொது மக்களில் சிலர் அவரோடு கலந்துரையாடினர். மேலும் பள்ளி நடைமுறையில் சில ஆலோசணைகளை வழங்கி–னார். உதவியாசிரியர் சிட்டிபாபு நன்றி கூறினார்.

    ×