என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Circle Collector Sridhar inspects development projects in Kallakurichi"

    • கள்ளக்குறிச்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
    • கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் பகுதி யில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின்தகனமேடை கட்டிட பணிகளையும், ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் ஏமப்பேர் பகுதியில் உள்ள குளத்தில் மதகு மற்றும் நீர் வெளியேறும் வாய்க்கால், பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகளையும், ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிட கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என நகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியா ளாகள் உடனிருந்தனர்.

    ×