search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்
    X

    புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்

    • சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் உரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆரூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பாட்டை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×