search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power cord"

    • பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
    • மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பகுதியில், பொது மக்களின் தேவைக்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை லேசான காற்று அடித்தது. அப்போது புதூர் பகுதிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செல்லும், உயர் மின் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார், விரைந்து சென்று மின் கம்பி அறுந்து விழுந்த இடத்தில், யாரும் செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மின்துறை எச்சரிக்கை
    • இடி, மின்னல் இருக்கும்போது டி.வி, கம்ப்யூட்டர், போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி, கயிறு, ஆடு, மாடு, வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளை களை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

    மழைக் காலத்தில் இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள், மரங்கள் அருகே நிற்கக்கூடாது.

    மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், தொடாமல் உடனடியாக மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது டி.வி, கம்ப்யூட்டர், போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    மின்சாதனங்களின் வயர்களை இணைப்பில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகளை தொடக்கூடாது.

    கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்ற, இறக்கக்கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

    தீயணைப்பு துறைக்கு தகவல் தர வேண்டும். வீட்டில் சுவர்களில் மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்கந்தரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்ச்சை அணைத்து விடவும். மின் விபத்துகள் ஏற்பட்டால் 1800 4251 912 என்ற கட்டணமில்லா தொலை ழ்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
    • சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(28) கட்டிடத் தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரோட்டோர மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த பாலமுருகன் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் இவர் மீது மோதாமல் சென்றன.

    மின் கம்பி கழுத்தின் பின்பகுதி மற்றும் முன்பகுதியில் சிராய்த்து பலத்த காயம் ஏற்பட்ட பாலமுருகனை அக்கம்- பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற நிலையில்,அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.இது குறித்து பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை, மின்வாரிய அதிகாரிகள் போதிய பராமரிப்பு செய்யாமலும், உரிய காலத்தில் அவைகளை மாற்றாமல் இருந்ததுமே இந்த விபத்துக்கு காரணம் என்றும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என்றும் தற்போது நடந்துள்ள சம்பவத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • தியாகதுருகம் அருகே பராமரிப்பு இன்றி தேக்குமரங்கள் காய்ந்து போனது.
    • அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடம் அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 5- ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, தேக்கு, நாவல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் தேங்கியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் காய்ந்து போனது. மீதமுள்ள மரக் கன்றுகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் எனவும் மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு நடுவே மிகவும் தாழ்வான நிலையில் மின்கம்பி செல்கிறது.

    இது எதிர்பாராத விதமாக யாரேனும் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பிகளை இழுத்து கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×