search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அறுந்து கிடக்கும் மின்சார கம்பிளை தொட வேண்டாம்
    X

    கோப்பு படம்.

    அறுந்து கிடக்கும் மின்சார கம்பிளை தொட வேண்டாம்

    • மின்துறை எச்சரிக்கை
    • இடி, மின்னல் இருக்கும்போது டி.வி, கம்ப்யூட்டர், போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை செயற்பொறியாளர் கனியமுதன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி, கயிறு, ஆடு, மாடு, வீட்டு விலங்குகளை கட்டக்கூடாது. மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளை களை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.

    மழைக் காலத்தில் இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள், மரங்கள் அருகே நிற்கக்கூடாது.

    மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், தொடாமல் உடனடியாக மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இடி, மின்னல் இருக்கும்போது டி.வி, கம்ப்யூட்டர், போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

    மின்சாதனங்களின் வயர்களை இணைப்பில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகளை தொடக்கூடாது.

    கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்ற, இறக்கக்கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

    தீயணைப்பு துறைக்கு தகவல் தர வேண்டும். வீட்டில் சுவர்களில் மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்கந்தரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்ச்சை அணைத்து விடவும். மின் விபத்துகள் ஏற்பட்டால் 1800 4251 912 என்ற கட்டணமில்லா தொலை ழ்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×