என் மலர்
கள்ளக்குறிச்சி
- கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 2025-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னை யில்தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த காசநோய் கண்டறியும் வாகனம், மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டவர்கள், வயதான வர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடைய வர்கள், புற்று நோயால் பாதிக்க ப்பட்ட வர்களுக்கு எக்ஸ்ரே பரி சோதனை மேற் கொள்ளப்படும். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.
இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலு வலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரி மத்திய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும் ரூ.69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனத்தினையும், ரூ.4,478 மதிப்பீட்டிலான 70 லிட்டர் கொள்ளளவு உள்ளகுளிர்காப்பு பெட்டியினையும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானிய த்திலும் வழங்கப் படுகிறது.
அதன்படி, இன்று சங்கராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் களில் பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தலா ரூ.73,721 மதிப்பிலான குளி ர்காப்பு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை 40 சதவீத மானியத்துடன் ரூ.44,233 மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது, உதவி இயக்கு நர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலு வலர்கள் உடன் இருந்தனர்.
- உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
- பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திருக் கோவிலூர் கோட்டாட்சி யர் ஆர்.டி.ஓ. யோக ஜோதி ஆய்வு மேற்கண்டார். அப்போது பள்ளி வாக னங்களை மேல் கூரை டயர் அனைத்தும் சரி வர உள்ளதாக இருக்கிறதா அவசர கால கதவுகள் உள்ளதா முதலுதவி மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும் விபத்து ஏற்படும் நேரத்தில் முதலுதவி எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி ஆய்வு மேற்கொண்டு ஓட்டுனர்களுக்கு மெதுவாக செல்ல வேண்டும் மாணவர்களை தவிர வேறு யாரும் ஏற்றிச் செல்லக் கூடாது.
மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் கண்டிப்பாக ஓட்டுநர்கள் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆர்.சி. புக் இன்சூரன்ஸ் முறையாக அந்தந்த வாகனங்களில் இருக்க வேண்டும் என்று கூறியதோடு பெற்றோர்கள் உங்களை நம்பி தான் மாணவர்களை அனுப்பி வைக்கிறார்கள் அது கருத்தில் கொண்டு பேருந்து பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர் வேல் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு கலைச்செல்வன், தீயணைப்பு நிலைய அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் ஓட்டுநர்கள் ஆய்வின் போது இருந்தனர்.
- சங்கராபுரத்தில் அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா நடைபெற்றது.
- பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தொடக்கவிழா சங்கராபுரம் தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் சீனிவாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர், பொது செயலாளர் டாக்டர் பார்த்திபன், பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் நெடியவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் மாவட்ட சங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இதைத் தொடர்ந்து மாநில பொது செயலாளர் சந்திரகுமார், செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் தொகுப்பூதியம், தற்காலிக, நீண்டகால ஒப்பந்தம், சிறப்பு கால முறை ஊதியம் ஆகிய அடிப்ப டையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள், சத்துணவு பணியாளர்கள், செவிலி யர்கள், ஊர்புற நூலகர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போன்ற ஊழியர்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றம் செய்து தர முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்வது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் கள். இதில் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர், அரியபெருமானூர் மற்றும் அகரக்கோட்டாலம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிர மிப்பு செய்யாமல் தடுக்கும் வகையில் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி ஓடை புறம்போக்கு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் புதிய குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.தொடர்ந்து அரிய பெருமானூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சங்கன் பாண்ட் அமைக்கும் பணி, பணியாளர்களின் வருகை பதிவேடு, பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
அப்போது பணியா ளர்கள் பணிக்கு வராமல் பணிக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய கூடாது எனவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பணிதள பொறுப்பாளர் மற்றும் அதிகாரிகளிம் அறிவுறுத்தினார். இதேபோல் அகர க்கோட்டாலம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டுள்ள தடுப்பணையும், ரூ.9.97 லட்சம் மதிப்பிலான பொதுக்கிணறு வெட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு சேர்மன் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ரங்கராஜன், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள்கலந்து கொண்டனர்.
- சங்கராபுரம் அருகே மணிலா பயிர்களை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
- மகசூல் 15 சதவீதம் கூடுதலாவும் கிடைக்கும் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் மணிலா பயிர்களை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது மணிலா விதை உற்பத்தியில் அதிக மகசூல் மற்றும் தரமான விதைகள் உற்பத்தி செய்ய மணிலா பயிரில் 2-வது களை எடுக்கும் போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்கவேண்டும், பூ பூக்கும் தருணத்தில் 2 கிலோ நிலக்கடலை ரிச் பூஸ்டர் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் அதிக பூக்கள் பிடித்து முழுமையாக காய்கள் கிடைக்கும், மகசூல் 15 சதவீதம் கூடுதலாவும் கிடைக்கும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கொசப்பாடி, நெடுமானூரில் உள்ள பயிர்களையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ணகுமாரி, துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல், ஆரோக்கியசாமி, முகமது நாசர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
- தியாகதுருகம் பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி எச்சரிக்கை விடுத்தாார்.
- அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பகுதியில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையொட்டி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முறையாக உர உரிமம் பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? உரம் இருப்புப் பதிவேட்டில் உள்ளவாறு உரக்கடையில் இருப்பு உள்ளதா? மேலும் விற்பனை முனையக் கருவியில் உள்ளவாறு உரங்கள் இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை விற்பனை செய்யும் போது அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லரை விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் கடைகளுக்கு முன்பாக ரசாயன உரங்களின் விலை பட்டியலை வைக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு, வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
- சங்கராபுரத்தில் மேற்கு ஒன்றிய பா.ஜனதா பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் கொசப்பாடி, எஸ்.வி.பாளையம் மற்றும் பல கிராமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பூத் கமிட்டி கிளை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். இதில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் பாஸ்கரன், கோவிந்தன், கொசப்பாடி கிளை தலைவர் மதி மற்றும் எஸ்.வி.பாளையம் கிளை தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சியில் பள்ளி பஸ்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி பஸ் ஆய்வு முகாம் நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பள்ளி பஸ்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களில்படிகள், அவசர கால கதவு, முதலுதவி பெட்டகம், தீயணைப்புகருவி, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 வகையான காரணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பேருந்தினை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 490 பள்ளி பஸ்கள் உள்ளது. இதில் 326 பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 24 பஸ்கள் மறுஆய்விற்கு உட்படுத்திடமாறு பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டது எனவும், மீதமுள்ள பஸ்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறினார். முன்னதாக தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ விபத்தின் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.
- ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரெத்தின மாலா கணக்குகளை ஆய்வு செய்தார். தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மேல் தேக்க தொட்டி, மற்றும் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சரி செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகத்தில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையொட்டி ஆடுகளை வாங்குவதற்கு உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் பலரும் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் வியாபாரிகளும் ஆடுகளை போட்டிபோட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் ஆடு குறைந்த விலையாக ரூ.6000 ரூபாயும் அதிகபட்சமாக ரூ.23,000 வரை விற்பனை ஆனது. ஆட்டுக்குட்டி ரூ. 2000 முதல் ரூ.6000 வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை யொட்டிவழக்கமாக சந்தைக்கு வரும் ஆடுகளை விட கூடுதலான ஆடுகள் சந்தைக்கு வந்தன. இதனால் சுமார் 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கூறினார்.
- தியாகதுருகத்தில் கழிவு நீர் ஏரியாக புக்குளம் ஏரி மாறியது.
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பேரூராட் சிக்கு உட்பட்ட புக்குளம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புக்குளத்தில் சுமார் 250 -ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தியாகதுரு கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தப்படும் கழிவுநீர் பிரதான கால்வாய் மூலம் புக்குளம் பெரிய ஏரியை சென்றடைகிறது. இதனால் புக்குளம் பெரிய ஏரி கழிவுநீர்கள் நிரம்பி கழிவு நீர் ஏரியாக மாறி உள்ளது. இவ்வாறு ஏரியில் கழிவு நீர் தேங்கியதால் புக்குளத்தில் உள்ள தக்க கிணற்றில் நீர் ஊற்றுகள் மூலம் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் புக்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்ட மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாயும், மாலை நேரங்களில் தக்க கிணற்றிலிருந்து அத்தியாவசிய தேவைக்கான வழங்கப்படும் நீர் ஆகியவை ஒரே குழாய் லைனில் வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிலருக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர். மேலும் தக்க கிணற்றில் இருந்து நீர் மாதிரி பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. புக்குளம் பகுதியில் உள்ள கால்நடைகள் பெரிய ஏரியில் உள்ள கழிவு நீரை குடிப்பதால் கால்நடைகளுக்கு வாய் மற்றும் மடிப்பகுதியில் புற்றுநோய் ஏற்படுவதாகவும், கோமாரி நோய் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றன.
மேலும் புக்குளத்தில் உள்ள சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத அவல நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவு நீர் ஏரியில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தியாகதுருகம் பகுதியில் இவ்வாறு ஏரி மற்றும் குளம் பகுதியில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், எனவே பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் நலனைகருத்தில் கொண்டு தியாகதுருகம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டுள்ளார்.
- இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் மாவட்ட தொழில்நெறி மற்றும் வழிகாட்டுதல் அலுகலகம் சார்பில் 01.07.2022-ல் தொடங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு (தோல்வி) பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்ற வர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.09.2022 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் நிறைவடைந்தி ருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப் படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.09.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தோல்வியுற்றோர்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 , மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றோர்களுக்கு ரூ.400 பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000 வீதம் வழங்கப்படுகிறது. உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களில் இலவசமாகவோ அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கமும் செய்து, 31.08.2022 வரை விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் 01.07.2022 உடன் தெடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 31.08.2022 தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், கள்ளக்குறிச்சியில் உள்ள 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






