என் மலர்
காஞ்சிபுரம்
- அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.
- சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோதும் எதுவும் இல்லை. மீண்டும் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மின்சார மோட்டார் இருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்த மோட்டார் சற்று கனமாக இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர். அதில் தங்கத்தை உருளை போல் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
- காஞ்சிபுரத்தில் தொழிலாளி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஞானசேகர் (வயது 58). இவர் வாடகை வீட்டில் தனது மனைவி ஹேமலதா என்பவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும் திருமணமாகி சென்ற நிலையில் கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்குமிடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே கோபமடைந்த ஞானசேகரின் மனைவி தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருந்த வந்த ஞானசேகரன் மனஉளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் உரிமையாளர் கீழே இறங்கி வெளியே செல்லும்போது ஞானசேகரனின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஞானசேகரன் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து ஞானசேகரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி.
- வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி. இதன் தலைவராக கோபி, துணைத்தலைவராக ஆறுமுகம் உள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஊராட்சி தலைவர் கோபி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் அனைத்தும் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பிறப்பித்து உள்ளார்.
இதேபோல் காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சி தலைவியாக இருந்தவர் வேண்டா சுந்தரமூர்த்தி. இவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய அதிகாரத்தையும் நிறுத்தி வைப்பதாக கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
- போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாயபாரத், ஆரோக்கிய அருண், இருதயராஜ்.
இவர்களில் சகாயபாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றினார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக இருந்தார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொது மக்கள் மற்றும் போலீசாரிடம் பணத்தை வசூல் செய்தனர். இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.
மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்த இருதயராஜ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
- கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
- ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
சென்னையில் 2-விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் மாலையில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஏகனாபுரம் கிராமமக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் நேற்று 250- வது நாளை எட்டியது. இதையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வன்னியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். ஏகனாபுரம் கிராம மக்களின் போராட் டம் 250 நாளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
- பாஜக சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
- கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார். மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர்.
- மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாய பாரத், ஆரோக்கிய அருண், இருதய ராஜ்.
இவர்களில் சகாய பாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக உள்ளார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர். மேலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரும் நிறுவனங்களின் விற்பனை உரிமம் எடுப்பது, மற்றும் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.
ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்காததால் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கட்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ் சகோதரர்களான சகாயபாரத், ஆரோக்கிய அருண் ஆகியோர் குடும்பத்துடன் சேர்ந்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி நிதி மோசடி செய்த வழக்கில் போலீஸ் சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் போலீசார் உட்பட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது.
- வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள திம்ம ராஜம் பேட்டை ஊராட்சி, சீயமங்கலம் காலனியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்தனர். இதையடுத்து நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவர் வெங்கடேசின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
இந்நிலையில் நள்ளிரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடிசை வீடு முழுவதும் பரவியது. இதில் வெங்கடேசும், சரவணனும் சிக்கிக்கொண்டனர். அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயில் இருந்து தப்பி முயன்றனர். இதில் சரவணன் லேசான தீக்காயத்துடன் தப்பி வெளியே வந்தார். ஆனால் வெங்கடேஷ் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த தும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் பலியான வெங்கடேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரவணன் உடனடியாக வீட்டில் இருந்து வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடிபோதை தகராறில் வாலிபரை நண்பரே பீர்பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியதர்ஷனை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் வினித்குமார் (வயது24) வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் முக்கண்ணி அம்மன் கோயில் தெரு பகுதியில் மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்களில் ஒருவரான பிரியதர்ஷன் என்பவர் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து வினித் குமாரின் கழுத்தில் பலமாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த நண்பர்கள் வினித்குமாரை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வினித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே அங்கிருந்த பிரியதர்ஷன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியதர்ஷனை தேடி வருகின்றனர்.
குடிபோதை தகராறில் வாலிபரை நண்பரே பீர்பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவர் இறந்த சோகத்தில் காமாட்சி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
- காமாட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மடம் தெருவை சேர்ந்தவர் காமாட்சி (42). இவரது கணவர் செல்வம். இவர் கடந்த 29-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கணவர் இறந்த சோகத்தில் காமாட்சி மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற காமாட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உயிரிழந்த காமாட்சியின் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
- இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி 69,820 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் என மொத்தம் 123 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு 4027.240 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று இடைத்தரகர்கள் தலையீடு தெரியவந்தால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
- மதுக்கடைகள் மூடப்படும் தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்:
மகாவீர் ஜெயந்தியையொட்டி வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.






