என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருக்கழுகுன்றத்தில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பாண்டூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது ராஜி, குப்பன் ஆகியோர் சாராயம் விற்பது தெரிந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 200 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    வாலாஜாபாத் அருகே சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்கல்பட்டு:

    வாலாஜாபாத் அருகே உள்ள குருவன்மேடு பகுதியை சேர்ந்தவர் அருள். இவரது மகன் சூர்யா (வயது 16). ஜே.சி.பி. எந்திரம் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வந்தான்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சூர்யா திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குருவன் மேடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சூர்யா கொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.

    மர்ம கும்பல் அவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

    இது தொடர்பாக சூர்யாவுடன் பழகிய நண்பர்கள் சிலரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

    இதனை அறிந்த சூர்யா இதுபற்றி அந்த நபரிடம் கூறியுள்ளார். இந்த மோதலில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    அத்திவரதரை காண்பதற்காக விடிய விடிய காத்திருந்த பக்தர்களை போலீசார் பகுதி பகுதியாக பிரித்து வைத்து அனுப்பினர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

    அத்திவரதரை 31 நாட்கள் சயன கோலத்திலும், 17 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் வாழ்நாளில் ஒரு முறையாவது அவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர்கள் கூட்டம் தினமும் அலைமோதியது.

    அத்திவரதரின் சயன கோல தரிசனம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர்.

    கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    ஆகம விதிகளின்படி கடைசி நாளான நாளை (சனிக்கிழமை) கண்டிப்பாக அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்பதால் கடைசி நாள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 48 நாட்களாக இருந்த அத்திவரதர் தரிசனம் 47 நாளாக குறைந்தது.

    அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்தவர்கள், நின்ற கோலத்திலும் பார்த்து விட ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 16 நாட்களும் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சயன கோல தரிசனத்துக்கு திரண்ட பக்தர்களை விட நின்ற கோலத்தில் அத்திவரதரை காண்பதற்கே அதிக கூட்டம் திரண்டது.

    இறுதி நாளைக்கு முந்தைய தினமான நேற்றும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று 4½ லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 5 மணிக்கு மேல் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதன் பின்னர் பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு பிறகு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு “ஆடி கருட சேவை” நடைபெற்றது.

    3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்களுடன் புதிதாக சாமி தரிசனம் செய்ய வந்தவர்களும் சேர்ந்து கொண்டனர். இதனால் நேற்று இரவு காஞ்சிபுரம் மக்கள் வெள்ளத்தில் திணறியது.

    இரவு 8 மணிக்கு பிறகு பொது தரிசனத்தில் மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. தரிசன பாதைகள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் பொது தரிசனம் வழியாக மட்டுமே சென்றதால் வரிசையில் காத்திருந்த பலருக்கு விரைவான சாமி தரிசனம் கிடைத்தது. இரவு 8 மணியில் இருந்து தொடர்ச்சியாக நள்ளிரவு 2 மணி வரையில் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த 6 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அலை மோதியது. இதன் பிறகு நடை சாத்தப்பட்டது.

    இன்று அத்திவரதர் தரிசனத்துக்கு கடைசி நாள் என்பதால் இறுதி நாள் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன.

    கடைசி மற்றும் 47-வது நாளான இன்று அத்தி வரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கடைசி நாள் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் கூட்டம்

    அத்திவரதரை காண்பதற்காக விடிய விடிய காத்திருந்த பக்தர்களை போலீசார் பகுதி பகுதியாக பிரித்து வைத்து அனுப்பினர்.

    காஞ்சிபுரம் காந்தி ரோடு, டி.கே.நம்பி சாலை உள்ளிட்ட இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரிசையில் கூட்டமாக காத்திருந்த பக்தர்கள், தங்களுக்கான தரிசன நேரம் வந்ததும் அத்தி வரதரை ஓடோடி சென்று வழிபட்டனர்.

    இன்று அத்திவரதரை தரிசிக்காவிட்டால் இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே என்று கூறிக்கொண்டே கோவிலுக்குள் பொது தரிசன வரிசையை நோக்கி ஓடினர். அங்கும் கூட்டம் அலைமோதியது. கடும் நெரிசலும் ஏற்பட்டது.

    இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அத்திவரதர் தரிசனத்திலேயே பக்தர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்று காலையில் எப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    இதனால் பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணறினர். பெண்கள் பலர் கை குழந்தைகளுடன் வந்திருந்தனர். வயது முதிர்ந்த பெரியவர்களும் தரிசனத்துக்காக முண்டியடித்தனர்.

    அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்த போது 31 நாட்களில் 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர். நின்ற கோலத்தில் தரிசனம் தந்த கடந்த 16 நாளிலும் 50 லட்சம் பேர் திரண்டு வழிபட்டுள்ளனர்.

    47 நாட்களில் அத்திவரதரை 1 கோடி பேர் வரையில் தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் குறுகிய காலமே நின்ற கோலத்தில் காட்சி தந்த அத்திவரதரை அதிகம் பேர் வழிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கைகளை செலுத்தினார்கள். இதன்மூலம் ரூ.8 கோடி வசூலாகி உள்ளது.

    இதுதவிர பக்தர்கள் காணிக்கையாக நகைகளையும் செலுத்தி உள்ளனர்.

    கடைசி நாளான இன்றும் நள்ளிரவு வரை அத்தி வரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதன் பிறகு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்று விடும். இதனை தொடர்ந்து நடை சாத்தப்பட்டு அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். நாளை (17-ந் தேதி) அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார்.

    இதன் பின்னர் அத்திவரதரை 40 ஆண்டுகள் கழித்தே வெளியில் எடுப்பார்கள். அத்திவரதரை இப்போது தரிசனம் செய்யாதவர்கள் இனி 2059-ம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.
    காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    காஞ்சீபுரம் :

    108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

    46-வது நாளான நேற்று அத்திவரதர் ஏலக்காய் மாலை, துளசி மாலை, ரோஜாப்பூ மாலை, தாமரை பூமாலை என்று மலர் அலங்காரத்தில் வெண்பட்டு அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கர நாற்காலியில் வந்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். ஆடி கருடசேவையையொட்டி நேற்று நண்பகல் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. வரிசையில் காத்திருந்தவர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு 2 மணிவரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.

    அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. வெளியூரில் இருந்த வந்த பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள். கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதையடுத்து நாளை (சனிக்கிழமை) சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தபோது ஆண்குழந்தை பிறந்து உள்ளதால் குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என்று பெயரிட்டு உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
    காஞ்சிபுரம்:

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை வழிபடுவதை பக்தர்கள் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார்கள். இதனால் அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகிறார்கள்.

    நேற்று காலை வேலூர் மாவட்டம் பாணர்வரம் கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது மனைவியான நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விமலா ஆகியோர் அத்தி வரதரை வழிபட வந்து இருந்தனர். அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பி வந்தபோது விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை கோவிலின் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அங்கிருந்த டாக்டர் ஜான்சிராணி மற்றும் சீனியர் நர்சு யோக வள்ளி ஆகியோர் விமலாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் விமலாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 3 கிலோ எடையில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து விமலாவும், குழந்தையும் 108 ஆம்புலன்சு மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    இதற்கிடையே அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தபோது ஆண்குழந்தை பிறந்து உள்ளதால் குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என்று பெயரிட்டு உள்ளதாக விமலாவும், அவரது கணவர் அசோக்குமாரும் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அசோக்குமார் கூறும்போது, ‘செவ்வாய்க்கிழமை இரவு தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தோம். மறுநாள் (நேற்று) காலையில் தான் சாமியை வழிபட உள்ளே சென்றோம். நாங்கள் வரிசையில் நிற்கும்போது மனைவி விமலா கர்ப்பிணியாக இருந்ததை கண்டதும் விரைவாக தரிசனத்துக்கு அனுப்பினர்.

    சாமியை வழிபட்டு திரும்பியபோது விமலாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக அவளை அருகில் உள்ள மருத்துவ முகாமில் சேர்த்தோம். அங்கு ஆண் குழந்தை பிறந்தது. அத்திவரதரை வழிபட வந்தபோது சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என்று பெயர் வைக்க உள்ளோம்’ என்றார்.

    விமலாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஜான்சி ராணி, நர்சு யோகவள்ளி ஆகியோர் கூறும்போது, ‘தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தபோது குழந்தை பிறந்ததால் அத்தி வரதர் என்று பெயர் வைக்கும்படி ஏராளமான பக்தர்கள் அந்த தம்பதியிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களும் அத்திவரதர் பெயர் வைக்க உள்ளதாக கூறி இருக்கிறார்கள். 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் தரிசனத்துக்கு வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது அரிய நிகழ்வு ஆகும்’’ என்றனர்.
    அத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம் :

    108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

    நேற்று அத்திவரதர் ரோஸ் நிற பட்டாடையில் தாமரை மலர்கள், எலுமிச்சம் மாலை மற்றும் வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வருகிற 16-ந்தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கலெக்டர் பொன்னையா

    வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படும். முக்கிய நபர்களுக்கான தரிசன வாயிலும் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். நாளை (வெள்ளிக்கிழமை) முக்கிய நபர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படும்.

    பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17-ந்தேதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அத்திவரதரை குளத்தில் வைக்க அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 17-ந்தேதி மாலை ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார். 
    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை காண வரும் விஐபி தரிசனம் நாளை மறுதினம் ரத்து செய்யப்படுகிறது என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அத்திவரதரை இதுவரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் தரிசனத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது. 17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும். ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.

    அனைத்துத் துறை ஊழியர்களும் சிறப்பாக, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் காவல் துறையின் பங்களிப்பு முக்கியமானது, போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
    அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அவரும் குழந்தையும் முதல் உதவி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    நெமிலியை அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி விமலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விமலா அத்திவரதரை வழிபட விரும்பினார். இதையடுத்து அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் அத்திவரதர் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் அழைத்து வந்தனர்.

    பொது தரிசன பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்தபோது திடீரென விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 16 கால் மண்டபத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ குழுவினர் விரைந்து வந்து விமலாவை மீட்டு தங்களது முகாமுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் விமலாவுக்கு அழகான ஆண் குந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ எடை இருந்தது. குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்.

    அத்திவரதரை தரிசிக்க வந்த நேரத்தில் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக கூறி விமலாவின் கணவரும் குடும்பத்தினரும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது விமலாவும் குழந்தையும் முதல் உதவி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தால் காஞ்சிபுரம் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அத்திவரதர் தரிசன காலம் நீட்டிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகரம் திக்குமுக்காடுகிறது. அத்திவரதர் விழா வருகிற 16-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளதால் கடந்த ஒரு வாரமாக தினமும் பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி வருகிறது.

    இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    விழா முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் அத்திவரதர் வழிபாட்டை மேலும் நீட்டிக்க வேண்டும், அத்தி வரதர் சிலையை கோவில் குளத்துக்குள் வைக்கக்கூடாது என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த நிலையில் அத்தி வரதர் தரிசன காலம் நீடிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அத்தி வரதர்

    அத்திவரதர் தரிசனம் கடந்த காலங்களில் ஆகம விதிப்படி 48 நாட்கள் தான் நீடித்தது. அதே போல் தான் தற்போதும் 48 நாட்கள் நடக்கும். அதை நீட்டிக்க வாய்ப்பில்லை. திருச்செந்தூர் கோவிலில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்ட முதல்-அமைச்சர் கடந்த கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து ஆணை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் கட்டப்பட வேண்டும். தொல்பொருள் துறை அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    முதலில் கல் மண்டபம் தான் இருந்தது. பழமை மாறாமல் கட்ட வேண்டும் என்ற நிலைபாடு எடுக்கப்பட்டுள்ளதால் கல்லில் கட்டப்பட உள்ளது. உயர்நீதிமன்ற குழு பார்வையிட்டு ஆய்வு செய்து மதிப்பீடு, அங்கீகாரம் பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். திருச்செந்தூரில் யாத்திரி நிவாஸ் கட்டப்படும் என சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை நடத்தப்பட்டதும் அதற்கான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

    விழாவில் 45-வது நாளான இன்று அத்திவரதர் பன்னீர்நிற ரோஜா வண்ண பட்டாடை யில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று காலையும் ஏராள மான பக்தர்கள் குவிந்த னர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக் கிறது. எனவே இன்று 5 லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கூடாரங் களில் திரளான பக்தர்கள் காத்திருந்தனர். ஓய்வு கூடா ரம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    வருகிற 17-ந் தேதி அத்தி வரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்று பணி முழுவதும் முடித்து தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரி கிறது.

    மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு காலனியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் வேலு (வயது 30) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கிளை செயலாளராக உள்ளார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வேலு பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சூணாம்பேடு ஏரிக்கரையில் வேலு வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சூணாம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலுவை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்று தெரியவில்லை? அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வேலுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகருக்கும் தகராறு இருந்து வந்தது. இதைப்போல் வேலு அதேபகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    அங்குள்ள தொழிலாளர் சங்கத்திலும் தலைவராக இருந்தார். அங்கு யாரிடமும் விரோதம் உள்ளதா? அவர் கடைசியாக யார்-யாரிடம் பேசினார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
    காஞ்சீபுரம் :

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகி றார். கடந்த மாதம் 31 நாட்களும் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள் பாலித்து வருகிறார். வருகிற 16-ந் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவுக்கு வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    44-வது நாளான நேற்று அத்திவரதர் பச்சை நிற பட்டாடையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கிரீடம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காஞ்சீபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் காஞ்சீபுரம் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 2½ கிலோ மீட்டார் தூரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். பக்தர்கள் 7 வரிசைகளில் அனுமதிக்கப்பட்டனர். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் சக்கரநாற்காலி மூலம் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 4½ மணியளவில் காஞ்சீபுரத்தில் லேசான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    அத்திவரதரை காண வந்த கூட்டம்

    நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். இரவு 7 மணி வரை 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தனர்.

    பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் தேவையான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    அத்திவரதரை நேற்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். தமிழக அரசு கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அத்திவரதர் சிலை வருகிற 17-ந் தேதி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது.
    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.

    அதன்படி ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டார்.

    குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், சயன திருக்கோலத்திலேயே 31 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    அத்திவரதரை நிரந்தரமாக தரிசனத்திற்கு வைக்க வேண்டும், கூடுதலாக 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரின் திருவுருவம் மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீருக்குள் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னைய்யா நேற்று அறிவித்தார்.

    திருவுருவம் குளத்திற்குள் வைக்கப்படும்போது கோவிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.

    வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார்.
    ×