search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
    X
    அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

    அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

    அத்திவரதர் தரிசன காலம் நீட்டிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகரம் திக்குமுக்காடுகிறது. அத்திவரதர் விழா வருகிற 16-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளதால் கடந்த ஒரு வாரமாக தினமும் பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி வருகிறது.

    இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    விழா முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் அத்திவரதர் வழிபாட்டை மேலும் நீட்டிக்க வேண்டும், அத்தி வரதர் சிலையை கோவில் குளத்துக்குள் வைக்கக்கூடாது என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த நிலையில் அத்தி வரதர் தரிசன காலம் நீடிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அத்தி வரதர்

    அத்திவரதர் தரிசனம் கடந்த காலங்களில் ஆகம விதிப்படி 48 நாட்கள் தான் நீடித்தது. அதே போல் தான் தற்போதும் 48 நாட்கள் நடக்கும். அதை நீட்டிக்க வாய்ப்பில்லை. திருச்செந்தூர் கோவிலில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்ட முதல்-அமைச்சர் கடந்த கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து ஆணை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் கட்டப்பட வேண்டும். தொல்பொருள் துறை அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    முதலில் கல் மண்டபம் தான் இருந்தது. பழமை மாறாமல் கட்ட வேண்டும் என்ற நிலைபாடு எடுக்கப்பட்டுள்ளதால் கல்லில் கட்டப்பட உள்ளது. உயர்நீதிமன்ற குழு பார்வையிட்டு ஆய்வு செய்து மதிப்பீடு, அங்கீகாரம் பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். திருச்செந்தூரில் யாத்திரி நிவாஸ் கட்டப்படும் என சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை நடத்தப்பட்டதும் அதற்கான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

    விழாவில் 45-வது நாளான இன்று அத்திவரதர் பன்னீர்நிற ரோஜா வண்ண பட்டாடை யில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று காலையும் ஏராள மான பக்தர்கள் குவிந்த னர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக் கிறது. எனவே இன்று 5 லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கூடாரங் களில் திரளான பக்தர்கள் காத்திருந்தனர். ஓய்வு கூடா ரம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    வருகிற 17-ந் தேதி அத்தி வரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்று பணி முழுவதும் முடித்து தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரி கிறது.

    Next Story
    ×