என் மலர்
நீங்கள் தேடியது "minister sevur ramachandran"
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில், 3-வது கட்டமாக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி ஆரணியில் தொடங்கியது.இந்த பேரணியில் அ.தி.மு.க.தொண்டர்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று அரசின் சாதனையை விளக்கினர்.
அதன் தொடர்ச்சியாக செய்யாறு தொகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் வீரம்பாக்கம் கிராமத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வி.ஏழுமலை எம்.பி., ஒன்றியக்குழு தலைவர் கோமதிரகு, ஜெ.பேரவை செயலாளர் திருமூலன், வெம்பாக்கம் ஒன்றிய துணை செயலாளர் ராஜூ,
செய்யார் முன்னாள் தொகுதி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மஞ்சுளா ராஜ்மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோழவரம் இளங்கோவன் ஆகியோர் தொண்டர்களுடன் தேத்துறை, ஆக்கூர், கூழமந்தல், மாங்கால், அழிஞ்சல்பட்டு, பெரும்புலிமேடு, பல்லி, பெருங்களத்தூர், புளியரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று, செய்யாறு நகரில் லோகநாதன் தெரு, பஸ் நிலையம், ஆரணி கூட்ரோடு வழியாக வடதண்டலம், அருகாவூர், தண்டரை, பெரும்பள்ளம், சேராம்பட்டு வழியாக ஆரணிக்கு சென்றனர்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






