என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotee death"

    • நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளாா்.

    ஜம்மு:

    ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட்டித் தீா்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பழைய வழித்தடத்தின் தொடக்கப் பகுதியான பான்கங்கா என்ற இடத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது.

    யாத்திரை தொடங்குமிடம் என்பதால், பக்தா்கள் மட்டுமன்றி கோவேறு கழுதைகள் மூலம் அவர்களை அழைத்துச் செல்லும் பணியாளா்களும் கூடியிருந்தனா். நிலச்சரிவில் இப்பணியாளர்களின் பதிவு அலுவலகமும், இரும்பு கட்டுமானங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 10 போ் காயமடைந்தனா்.

    சென்னையைச் சோ்ந்த பக்தா் உப்பன் ஸ்ரீவாஸ்தவா (70), அவரது மனைவி ராதா (66), அரியாணாவைச் சோ்ந்த ராஜீந்தா் பல்லா (70) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஸ்ரீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று கோவில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமாா் வைஷியா தெரிவித்தாா்.

    நிலச்சரிவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்-மந்திரி உமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளாா்.

    இக்கோவிலுக்கு செல்லும் புதிய வழித்தடத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

    • நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர்.
    • உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.

    இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை துருவம் பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது43). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    சிவா, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார்.

    நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர். 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்ற அவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனம் முடித்த பின்னர் இன்று காலை அவர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 3-வது மலையில் வந்தபோது, சிவாவுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கினார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை கீழே தூக்கி வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் அவரை பரிசோதித்தபோது, சிவா உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஞ்சியோ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த சிவா, பெங்களூருவில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். 

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப்கார், வின்ச் போன்றவற்றில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் நடந்து சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சேகர்(52) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி கோவில் படிப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர்.

    ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டது தெரியவரவே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை கீழே கொண்டுவந்து அடிவாரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது உறுதியானது. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

    தற்போது கடும் கோடைவெயில் அடித்துவரும் நிலையில் பகல் பொழுதில் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்பவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. இதனை போக்க பல்வேறு இடங்களில் தண்ணீர்பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் உயிரிழந்ததை தொடர்ந்து உச்சிகால பூஜைக்கு முன்பாக நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    ×