என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பல அரசு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கி இருந்தனர்.
    • குடியிருப்பில் தங்கி இருந்த அனைவரும் வாடகைக்கு வெளியில் தங்கி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் 1969-ல் கட்டப்பட்டது. இதில் ஏ.பி.சி.டி. ஆகிய பிரிவுகளில் மூன்று அடுக்குகள் கொண்ட 230 வீடுகள் உள்ளன. பின்னர் 1990-ம் சூண்டு எம்.எச்.பிரிவு குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதிலும் 3 அடுக்குகள் கொண்ட, 90 குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உட்பட பல அரசு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் தங்கி இருந்தனர்.

    தற்போது அந்த குடியிருப்பில் தங்கி இருந்த அனைவரும் வாடகைக்கு வெளியில் தங்கி உள்ளனர்.

    வீடுகள் சிதிலமடைந்து, வீட்டின் உதவுகள், ஜன்னல்கள், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. அனைத்து வீடுகளும், புதர்கள் மண்டி, விஷ பூச்சுகள் நடமாட்டம் அதிகாரித்து உள்ளது. எனவே இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளை இழந்து விட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அரசு அலுவலரிடம் கேட்டபோது, மூன்று வருடமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றார்.

    • 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் புதிய விமான நிலையத்துக்கு பரந்தூரம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே புதிய விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு வெளியிட்டது. விமான நிலைய திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக டிட்கோ எனப்படும் தமிழக தொழில்வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புதிய விமான நிலையத்திற்கு 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்களை பரந்தூரை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை கையகப்படுத்த தலா 3 டி.ஆர்.ஓ.க்கள், துணை கலெக்டர்களின் கீழ் 24 தாசில்தார்கள் உள்பட மொத்தம் 326 வருவாய்த்துறை அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.

    இந்த நிலையில் அவர்களுக்கு உதவியாக பணியாற்ற டிட்கோ மூலம் 87 உதவியாளர்கள், 58 டைப்பிஸ்டுகள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், 12 அலுவலர்கள் உள்பட மொத்தம் 237 பேர் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    • ரேஷன் கடையை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., க.செல்வம் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேவர் பிளாக் தரை சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 49-வது வார்டு சதாவரம், சின்னசாமி நகரில் ரூ. 15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., க.செல்வம் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்ட ரேஷன் கடையை மற்றும் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேவர் பிளாக் தரை சீரமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், தி.மு.க. பகுதி செயலாளர் தசரதன், கவுன்சிலர் பூங்கொடி தசரதன் மற்றும் கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது.

    முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கூறுகையில், கண் தெரியாதவனுக்கு கமலக்கண்ணன், நாக்கு தடுமாறுகிறவனுக்கு நாவுக்கரசன் என்று பெயர் வைப்பது போல் ஆட்சி, அரசு நடைமுறைகளை பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தெரிந்த ஒரே நிர்வாகம் எங்கு பணம் எடுப்பது, அதை யாரிடம் எப்படி கொடுப்பது போன்ற தரகு வேலை பார்ப்பது மட்டும் தான். கொள்ளையடித்த பணம் துபாயில் வெள்ளையாகி கொண்டிருக்கிறது. இது தான். விஞ்ஞான ஊழல் என்பார்கள். குங்கும பொட்டோடும், கும்பிட்ட கையோடும் உறவாட வந்து பகையாடிய துரோகிகளை தோலுரித்து தொங்கவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி. கசாப்புக்கடைக்காரன் காந்தியம் பேசுவது போல, இந்த அதர்மவாதிகள் எல்லாம் தர்மயுத்தம் பற்றி பேசி வருகிறார்கள். அரிசி கேட்டு எம்.ஜி.ஆரும், காவிரி நதிநீர் கேட்டு ஜெயலலிதாவும் கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக யார் வந்தார்கள்? இப்போது மத்திய அரசிடம் நிதி வாங்க நம்ம தி.மு.க.வில் உள்ள கத்துக்குட்டிகள் எடப்படி பழனிசாமியை கூப்பிடுகிறார்கள் என்றார்.

    • எல்லோரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
    • 3 வடிவமைப்புகள் தயாராகி வருகிறது.

    விடுதலை சிறுத்தைகள் மாநாடு அடுத்தடுத்து தள்ளிப்போன நிலையில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்த போது காங்கிரஸ் தலைவர் கார்கே மு.க.ஸ்டாலின் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து 'ஜனவரி 26' என்று தேதி குறித்தார்களாம். எல்லோரும் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே மாநாட்டை தேசிய அளவில் திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    மாநாட்டு மேடை, பந்தலில் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் அமர தனித்தனி இட வசதி எல்லாவற்றையும் பிரமிக்க தக்க வகையில் வடிவமைக்க சொல்லி உள்ளாராம். 3 வடிவமைப்புகள் தயாராகி வருகிறது. 2-ந் தேதிக்குள் முடிவாகி விடும் என்கிறார்கள். விரைவில் தொகுதி பங்கீடு பேச்சு நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லி தலைவர்களும் கை கோர்ப்பதால் மேலே இருப்பவர்களும் பார்த்து கொள்வார்கள் என்று உற்சாகமாக இருக்கிறாராம்.

    • நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை.
    • சுற்றி வளைத்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் சுட்டுக்கொலை.

    காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

    மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. இருவரும் ரெயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தப்பியோட முயற்சி செய்த நிலயில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

    உடனே உதவி ஆய்வாளர் சுதாகர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது குண்டு பாய்ந்து இருவரும் சரிந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.

    ரவுடி கொலையில் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

    • படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
    • பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக் கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப் போய்விட்டது.

    சென்னை போன்ற பெரு நகரங்களில் மாணவர்களின் படிக்கட்டு பயணம் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே மாறிப்போய் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுப்ப தற்கு போலீசாரும் போக்கு வரத்து அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய் தும் படிக்கட்டு பயணத்தை மாணவர்கள் கை விடுவதாக இல்லை.

    இதனால் படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    பஸ்சின் பின்பக்க வாசலில் உள்ள படிக்கட்டில் தொங்கிய படியேதான் மாணவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அருகிலுள்ள ஜன்னல் கம்பிகளை கையால் பிடித்துக் கொண்டு உயிரை பனையம் வைத்து அவர்கள் பயணம் மேற் கொள்வது வழக்கம். இதனை தடுக்கும் வகையில் படிக்கட்டு அருகில் ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாத அளவுக்கு மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி மாணவர்கள் பிடித்து தொங்கும் படிக்கட்டு அருகில் உள்ள 2 ஜன்னல் களையும் இரும்பு தகரம் கொண்டு மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான பணி களை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மண்டலத்துக்குட்பட்ட ஒரிக்கை, மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடுகின்றன. இதில் 140 பஸ்கள் மாநகர பேருந்துகளாகும். உள்ளூர்களில் இயக்கப்படும் இந்த பஸ்கள் அனைத்திலும் இரும்பு தகடுகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது வரையில் 47 பஸ்களில் முழுமையாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    மற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவ டிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

    தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதனை செயல்படுத்தி மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    • இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
    • அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 17வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிறுவனரானஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, பட்டமளிப்பு விழா தொடங்கியது.

    விழாவிற்கு தலைமை தாங்கிய மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் இடைக்கால வேந்தரான கோமதி ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் பேராசிரியருமான பத்மஸ்ரீ. டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமை வகித்தார்.

    விழாவில் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரித்து, இளங்கலை, முதுகலை மற்றும் 45 பிஎச்டி மாணவர்கள் உட்பட மொத்தம் 1158 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, அதிக சதவீதத்தோடு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த 100 மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் கழகத்தின் மதிப்பிற்குரிய ஏழு முன்னாள் மாணவர்கள் 'சிறப்புமிக்க முன்னாள் மாணவர் விருது' களைப் பெற்றனர்.

    தொடர்ந்து, உட்சுரப்பியல் மருத்துவரும் மற்றும் பொது மருத்துவரும் ஆன டாக்டர் உஷா ஸ்ரீராம் அவர்களுக்கு மகப்பேறு மருத்துவ நலன் மற்றும் பெண் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் கொடுத்த சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் "ஹானரிஸ் காசா" கவுரவ விருது வழங்கப்பட்டது. மேலும், டாக்டர். நிமல் ராகவனுக்கு சமூகப் பொறுப்பு விருது வழங்கப்பட்டது.

    • 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
    • ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    கன்னியாகுமரியில் இருந்து காசி செல்லும் காசி தமிழ்ச்சங்க விரைவு ரெயில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சியின் துணைத் தலைவர்கள் செந்தில்குமார்,ஜம்போடை சங்கர்,மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம்,தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    அந்த ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் பூசனிக்காய் சுற்றி உடைத்தும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

    • சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.
    • நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 746.18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதில் 1917.17 ஏக்கர் நிலம் மட்டுமே அரசுடையது. மற்றவை அனைத்தும் விவசாய மற்றும் பட்டா நிலங்கள் ஆகும். இவை அனைத்தும் கையகப்படுத்த வேண்டி இருக்கிறது.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள்முதலே பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த மாதம் விமான நிலைய பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

    இந்தநிலையில் நிலங்களை கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிப்பது, கிராமமக்களுடன் பேச்சுவார்த்தை, இழப்பீடு தொகை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

    விமான பணிக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பணி முடிவடைய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ×