என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் ஏரி மாவட்டம் என பெயர் பெற்ற நிலையில், தற்போது ஏரிகள் எங்கே என தேடவேண்டிய நிலையில் உள்ளது. போலி பட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முதலாக நடக்கும் தேர்தலில், உறுதியாக மேயராக பா.ம.கவை சேர்ந்தவர் வருவார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மேயராக பா.ம.க. வெற்றி பெற்றவுடன், போடும் முதல் கையெழுத்து டாஸ்மாக் இல்லாத நகரமாக மாற்றுவது ஆகும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் நீட் வர அ.தி.மு.க. தான் காரணம் என்று என்கிறார். ஆனால் அ.தி.மு.க. நீட் வர தி.மு.க. தான் காரணம் மாறி, மாறி குறை கூறுகின்றனர். இருவரும் பொது இடத்தில் விவாதம் நடத்த தயார் என்று மாறி மாறி கூறிக் கொள்கிறார்கள். அப்படி பொது விவாதம் நடந்தால் நானும் தயார். இன்று நீட் தேர்வு இருப்பதற்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. , அ.தி.மு.க. என அனைவரும் தான்.

    காஞ்சிபுரம் ஏரி மாவட்டம் என பெயர் பெற்ற நிலையில், தற்போது ஏரிகள் எங்கே என தேடவேண்டிய நிலையில் உள்ளது. போலி பட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.

    மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க. விவாதத்திற்கு தயாரா? காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. வெற்றி பெற்று மேயரானால், காஞ்சிபுரம் நகரில் எங்கும் டாஸ்மாக் இயங்க அனுமதி வழங்க மாட்டோம். இதற்கான தீர்மானத்தில் கையெழுத்திடுவதையே முதலில் மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்... வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகள், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் 33 வாக்குச்சாவடிகள், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 384 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகள், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் 33 வாக்குச்சாவடிகள், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.கே நகராட்சி நடுநிலைப்பள்ளி, கைலாச நாதர் நகராட்சி தொடக்கப் பள்ளி, நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்.

    சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொடக்கப் பள்ளி, வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக் டர் மா.ஆர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் நாராயணன் உடன் இருந்தார்.

    வாலாஜாபாத் பஜாரில் முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத், நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் வாலாஜாபாத் ராஜ வீதி பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபருக்கும், முனுசாமிக்கும் திடீரெனதகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனுசாமியை, குத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முனுசாமியை அக்கம் பக்கத்தினர். மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக உயிர் இழந்தார்.முனுசாமியிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் யார்? எதற்காக வாக்குவாதம் செய்தார் என்று தெரியவில்லை. ஏற்கனவே முன்விரோதத்தில் அவர் கொலை செய்ப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பஜார் வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வாலாஜாபாத் போலீசார் ஆய்வு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
    பள்ளிக்கரணை 189-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வ.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.

    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை 189-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வ.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். ராஜேஷ் நகர் பகுதியில் வேட்பாளர் வ.பாபு மளிகை கடைக்கு சென்று இளைஞர்களிடம் தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். வீடு வீடாகச் சென்று பொது மக்கள் முதியவர், பெண்கள், இளைஞர்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து உங்கள் உங்களில் ஒருவராக நினைத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அந்த பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராஜேஷ் (வயது 27). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் திருக்கழுகுன்றம், தத்தலூர் மெயின் ரோடு சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    வேனில் சிக்கிய மோட்டார் சைக்கிளுடன் சுமார் 100அடி தூரத்திற்கு ராஜேஷ் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்குதிரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தப்பி ஓட முயன்ற வேன் டிரைவரை பிடித்து திருக்கழுகுன்றம் போலீசாரிம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நாளை (13-ந்தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி மாட வீதிகளில் வீதிஉலா வருகிறார்.

    5-ம் நாளான நேற்று மங்களகிரியின் மீது வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் முக்கிய வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நாளை (13-ந் தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர். தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம், ஆலத்தூர் வழியாக வரும் வாகனங்கள் கிரிவல பாதை வழியாக காலவாக்கம் சென்று ஓ.எம்.ஆர் சாலையில் இணைந்து செல்லலாம். செங்கல்பட்டு, ஆலத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் நகருக்கு வெளியே நிறுத்தி இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்.சாலையில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நகருக்கு வெளியே புதிய புறவழிச் சாலை மூலம் கோவிலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    படப்பை:

    சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42 ),‌ இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் தற்கொலை செய்த அ.தி.மு.க. வேட்பாளரின் செல்போனை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார்? யார்? யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வளத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் இவரது மகன் ஜானகிராமன் (வயது 36).

    அ.தி.மு.க சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டார். அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் உள்ள அறையில் ஜானகிராமன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலைக்கு எதிர்கட்சியினர் மிரட்டலே காரணம் என்று கூறி நேற்று போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஜானகி ராமனின் தந்தையும், தனது மகனை மாற்று கட்சியினர் மிரட்டி வந்ததாகவும், இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து ஜானகிராமன் பயன்படுத்திய செல்போனை போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அவரிடம் கடைசியாக பேசிய நபர்கள் யார்? யார்? யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் எதிர்கட்சியினர் மிரட்டலால் அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரை மிரட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்பாளர் ஜானகிராமன் இறந்ததையடுத்து காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வன்னியர் சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது.
    காஞ்சிபுரம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் மற்றும் பேரூராட்சிகளில் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத்தில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூரில் 18 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் உயர் நிலைப்பள்ளியிலும், குன்றத்தூர் நகராட்சியில் நகராட்சி சமுதாய கூடத்திலும், மாங்காடு நகராட்சியில் சிவசக்தி கல்யாண மண்டபத்திலும், வாலாஜாபாத் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் நடந்தது.

    உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வன்னியர் சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது. இதில் 1,383 வாக்குச்சவாடி அலுவலர்கள் பங்கேற்று ஓட்டுப்பதிவு எந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி பெற்றனர். மாங்காட்டில் நடந்த வாக்குச்சாவடி அலுவர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாங்காடு நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமா இருந்தார்.
    தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கவனக்குறைவாக இருந்து விட்டோம். இதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. ஆமை போல் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து வெற்றியை பெற்றது.

    தி.மு.க. ஆட்சியால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. முதலமைச்சர் தன்னை ஒரு விளம்பர பிரியர் ஆக மட்டுமே பார்க்கிறார். மக்களுக்காக எந்த ஒரு பயனும், எதுவும் செய்யவில்லை.

    ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு முடக்கி வைத்துள்ளது. அம்மா உணவகம் திட்டம். இந்தியாவில் முன்னோடி திட்டம் என்று அழைக்கப்பட்ட திட்டம் வரலாற்று சாதனை படைத்திட்ட திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

    ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதனால் இவை அனைத்தும் முடக்கப்படுகிறது. ஏழைகள் அனைவரும் அ.தி.மு.க.வின் பெயரை சொல்லி வருகிறார்கள். இதுதான் காரணம்.

    500க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவர்கள் ஆக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அ.தி.மு.க. தான் காரணம். ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க. மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று காவல் துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.

    காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நடுநிலையோடு செயல்பட வேண்டும், நானும் முதலமைச்சராக இருந்தேன். காவல் துறையை நிர்வகித்தேன். அப்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

    நீங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்.இல்லாவிட்டால் தி.மு.க. அரசு உங்களைக் காப்பாற்றாது. தி.மு.க. அரசை நம்பி இறங்கினால் உங்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும்,அப்படி வரும் போது ஜனநாயகத்துக்கு புறம்பாக எந்த காவல்துறை அதிகாரியும் அரசு அதிகாரியும் செயல்பட்டால் நிச்சயம் அதற்குண்டான பலனை அடைவார்கள்.

    முக ஸ்டாலின்

    நான் இப்போது இருக்கின்ற பொம்மை முதல்-அமைச்சர் போல் இருக்க மாட்டேன். எந்தக் காரியம் ஆனாலும் துணிச்சலோடு முடிவு எடுப்பேன். எனவே காவல்துறை அதிகாரியாக இருக்கட்டும், அரசு அதிகாரியாக இருக்கட்டும் நேர்மையுடன் செயல்படுங்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், நிர்வாகிகள் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் (வயது 35) போட்டியிட்டார். அவர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜானகிராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் ஜானகிராமன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தான் போட்டியிடும் வார்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாற்று கட்சியை சேர்ந்தவர்களிடமும் அவர் தனக்கு ஆதரவு தரும் படி கேட்டு வந்தார்.

    அவருக்கு மாற்று கட்சியை சேர்ந்த சிலரும் மறைமுகமாக ஆதரவு அளித்தது வந்துள்ளனர். நேற்று இரவு அவர் வழக்கம் போல் வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஜானகிராமன் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வேணுகோபால் சென்று பார்த்த போது அறையில் மகன் ஜானகிராமன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது கழுத்தை சுற்றி துண்டு இருந்தது. எனவே அவர் தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜானகிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜானகிராமனின் திடீர் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தேர்தல் போட்டியில் அவர் மிரட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தலைமையில் ஏராளமான கட்சியினர் திரண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்


    திடீரென அவர்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளர் ஜானகிராமனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜானகிராமன் தற்கொலை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    எனினும் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையம் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ஜானகிராமன் அ.தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதனால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜானகிராமன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

    அரசியல் போட்டியில் யாரேனும் அவருக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஜானகிராமன் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    அதனை வைத்து அவர் கடைசியாக யார்? யாரிடம் பேசினார் என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். கடைசியாக அவரை தொடர்பு கொண்ட நபர்களின் விவரத்தை சேகரித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னரே ஜானகிராமன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவரும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஜானகிராமனும் பங்கேற்றார். இதன் பின்னர் அவர் கட்சியினருடன் ஆலோசனையில் பங்கேற்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். இதன் பின்னரே நள்ளிரவில் அவர் தற்கொலை செய்து உள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 23). குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீசாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். சிறுகளத்தூர் அருகே, குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் போலீஸ்காரர் நாராயணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்தும் குன்றத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    ×