என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலெக்டர் ஆர்த்தி ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,389 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் ஆர்த்தி ஆய்வு
உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வன்னியர் சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது.
காஞ்சிபுரம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் மற்றும் பேரூராட்சிகளில் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத்தில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூரில் 18 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் உயர் நிலைப்பள்ளியிலும், குன்றத்தூர் நகராட்சியில் நகராட்சி சமுதாய கூடத்திலும், மாங்காடு நகராட்சியில் சிவசக்தி கல்யாண மண்டபத்திலும், வாலாஜாபாத் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் நடந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வன்னியர் சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது. இதில் 1,383 வாக்குச்சவாடி அலுவலர்கள் பங்கேற்று ஓட்டுப்பதிவு எந்திரங்களை கையாளுவது குறித்து பயிற்சி பெற்றனர். மாங்காட்டில் நடந்த வாக்குச்சாவடி அலுவர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாங்காடு நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமா இருந்தார்.
Next Story






