என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே வேன் மோதி வாலிபர் பலி
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராஜேஷ் (வயது 27). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் திருக்கழுகுன்றம், தத்தலூர் மெயின் ரோடு சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வேனில் சிக்கிய மோட்டார் சைக்கிளுடன் சுமார் 100அடி தூரத்திற்கு ராஜேஷ் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்குதிரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தப்பி ஓட முயன்ற வேன் டிரைவரை பிடித்து திருக்கழுகுன்றம் போலீசாரிம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






