என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை- கலெக்டர் ஆய்வு

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகள், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் 33 வாக்குச்சாவடிகள், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 384 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகள், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் 33 வாக்குச்சாவடிகள், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.கே நகராட்சி நடுநிலைப்பள்ளி, கைலாச நாதர் நகராட்சி தொடக்கப் பள்ளி, நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்.

    சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொடக்கப் பள்ளி, வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக் டர் மா.ஆர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் நாராயணன் உடன் இருந்தார்.

    Next Story
    ×