என் மலர்
ஈரோடு
பெருந்துறை பகுதியில் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை பேரூராட்சி செயல் அதிகாரி மோகனரங்கன் தலைமையில் பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக பெருந்துறையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்ததால் 61 பேரிடம் இருந்து தலா ரூ.50 என மொத்தம் ரூ.3 ஆயிரத்து 50 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதேபோல் பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்ததாக 99 பேருக்கு தலா ரூ.50 என மொத்தம் ரூ.4 ஆயிரத்து 950 அபராதமாக வசூல் செய்யப்பட்டது. பெருந்துறை பகுதியில் நடந்த சோதனையின் போது முககவசம் அணியாத மொத்தம் 160 பேரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள் வசூல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 500-ஐ தாண்டியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு 5 நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களை மீண்டும் அச்சமடைய செய்து உள்ளது. எனவே கொரோனாவின் தாக்கம் மீண்டும் தலைதூக்கிவிடுமோ? என்கிற பயம் ஏற்பட தொடங்கியது.
புதிய பாதிப்பில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் அதிகபட்சமாக 17 பேர் உள்ளனர். இதில் கோணவாய்க்கால், சுக்கன் தோட்டம், கருங்கல்பாளையம், ராமமூர்த்தி நகர், ரெயில்வே காலனி, சாஸ்திரிநகர், கே.டி.கே.நகர், சூரம்பட்டி, சூளை, நேதாஜிரோடு, ஆசிரியர்காலனி அவ்வையார் வீதி, நல்லிரோடு, பி.பி.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கோபி மொடச்சூரில் 2 பேருக்கும், தனியார் நர்சிங் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கும், பி.கரட்டுப்பாளையம் அண்ணாநகரில் 15 வயது சிறுவனுக்கும், பெருந்துறையில் 3 பேருக்கும், நம்பியூர் அருகே கெட்டிச்செவியூரில் 2 பேருக்கும், சித்தோட்டில் 2 பேருக்கும், பவானி சலங்கைபாளையம், புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 306 பேர் குணமடைந்து உள்ளனர். 195 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

வெள்ளோடு அருகே வீடு புகுந்து நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி சாலப்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 43). விவசாயி. மனைவி ரேவதி. பெருந்துறை எல்லைமேட்டில் உள்ள ஒர்க்ஷாப்பிலும் பாலசுப்பிரமணி வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோரும், ரேவதியும் தோட்டத்திற்கு சென்று விட்டார்கள். பாலசுப்பிரமணியமும் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் அனைவரும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பாலசுப்பிரமணி வெள்ளோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மலையம்பாளையம் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊஞ்சலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இருவரும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மலையம்பாளையத்துக்கு கரும்பு வெட்டும் கூலிவேலைக்கு வந்திருந்தார்கள். மலையம்பாளையம் அருகே உள்ள வாத்தியார் காட்டு வலசு என்ற இடத்தில் தங்கிக்கொண்டு அங்குள்ள வடிவேல் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்கள்.
ஜெய்சங்கருக்கு மதுபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அதனால் சாந்தி கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சாந்தி தூங்கிய பின்னர் எழுந்து வெளியே சென்ற ஜெய்சங்கர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி நேற்று காலை தகவல் கிடைத்ததும், மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 466 கன அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 83.58 அடியாக உள்ளது.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 105 அடிக்கு தண்ணீரை திறந்துவிட முடியும். நீலகிரி மலை பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 3,089 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அது வினாடிக்கு 466 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 83.58 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நம்பியூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.
நம்பியூர்:
நம்பியூர் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், எலத்தூர் பேரூராட்சி செயல் அதிகாரி (பொறுப்பு) சசிகலா, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து எலத்தூர் குளத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். குளத்தில் இருந்து டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது விவசாயிகளிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயிகளின் 60 ஆண்டு கனவு திட்டம். இந்த திட்டம் மூலம் விரைவில் இந்த பகுதிகளைச் சேர்ந்த குளம் குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்விற்கான வழிவகைகள் செய்யப்படும். மேலும் எலத்தூர் குளத்தை சுற்றி 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படும்‘ என்றார்.
அதன்பின்னர் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சனூர் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன், அரசு வழக்கறிஞர் கங்காதரன், செல்வம், பிரபு, நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழரசி பழனிச்சாமி உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளுக்குள் சமூக இடைவெளி 2 மீட்டர் கடைபிடிக்க வேண்டும் என்று ஆணையாளர் எம்.இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜேஷ், ஜிப்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆணையாளர் இளங்கோவன், ஈரோட்டில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறினார். இந்த நடைமுறைகளை பின்பற்றுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆலோசனையின்படி ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் செய்யப்படும் அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல, முகக்கவசம் இன்றி சாலைகளில் நடமாடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் முழுமையாக முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். எனவே வணிக நிறுவனங்கள், கடைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஈரோட்டில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகம் வைக்கப்பட வேண்டும். அந்த வாசகம் சம்பந்தப்பட்ட கடைக்கு வருபவர்களுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து கடைகள் நிறுவனங்களின் முன்பு சோப்பு தண்ணீர் பக்கெட் (தண்ணீர் வசதி) இருக்க வேண்டும். கடைகளுக்குள் செல்பவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை கண்காணிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிந்து இருப்பவர்கள் மட்டுமே கடைகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளுக்குள் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையே சமூக இடைவெளி 2 மீட்டர் இருக்க வேண்டும். இதனை அனைத்து கடைகள், நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபடும்போது இந்த நடைமுறைகளை செயல்படுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிருபர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோர் கூறும்போது, ஆணையாளரின் ஆலோசனைகளை ஏற்று அனைத்து கடைகளும் இயங்கும் என்றார்கள்.

பவானி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானியை அடுத்து உள்ள ஊராட்சிக்கோட்டை புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவருடைய மகன் கிறிஸ்டோபர் (வயது 20). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சபரிமுத்து, கிறிஸ்டோபரிடம் மது பழக்கத்தை கை விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த கிறிஸ்டோபர் தற்கொலை செய்ய முடிவெடுத்து, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டார். மேலும் தான் விஷம் குடித்து விட்டதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிறிஸ்டோபரை மீட்டு, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று ஈரோட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் கொரோனா காலத்தில் மக்கள் நலப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கீழ்பவானி கால்வாயை ரூ.985 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதி மக்களுக்கான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2020-21-ம் ஆண்டின் மேட்டூர் கால்வாயை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்பணி தொடங்கியுள்ளது. ஈரோடு நகருக்கான வெளிவட்ட சுற்றுச்சாலை விரைவில் அமைக்கப்படும். மேலும் கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திமுக போராட்டம் நடத்துகிறது. உரிய முறையில் மின்சார கணக்கீடு நடைபெறுகிறது. கொரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.
கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
இதற்கிடையே எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற தொழில்துறையினருடனான கூட்டத்தில், தமிழக அரசு கடுமையான நிதிச் சுமையில் உள்ளதாகவும், தொழில்துறையினருக்கு போதிய உதவிகளை அரசு செய்யும், ஜவுளித்துறையினரின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என்று முதலமைச்சர் பேசினார்.

ஏற்கனவே தேர்வு எழுத முடியாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் 27-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்து உள்ளன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு முடிவுகள் வெளி வந்ததால், ஏற்கனவே தேர்வு எழுத முடியாமல் இருந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். மொத்தமாக தேர்வு எழுதாத மாணவர்கள் என்று பார்த்தால் 34 ஆயிரத்து 842 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 6 தேர்வுகளில் ஒரே ஒரு தேர்வு மட்டும் எழுதியவர்களும் இதில் உள்ளனர். அவர்களும் இந்த புதிய அட்டவணைப்படி தங்கள் தேர்வுகளை எழுதலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசும், பள்ளிக்கல்வித்துறையும் செய்து இருக்கிறது.
இவர்களுக்கு தேவையான தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். 6 தேர்வுகளும் எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடவடிக்கையானது அனைத்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் முழுமையாக நிறைவடையாததால் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையில் வளர்ந்து வரும் மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், பல்வேறு வகையில் வளர்ந்து வருகிற மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது என்றார். மஞ்சள் சந்தைக்கு புகழ்பெற்றது ஈரோடு மாவட்டம் எனவும் புகழாரம் சூட்டினார். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.