என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை கோப்புப்படம்
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 500-ஐ தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 500-ஐ தாண்டியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு 5 நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களை மீண்டும் அச்சமடைய செய்து உள்ளது. எனவே கொரோனாவின் தாக்கம் மீண்டும் தலைதூக்கிவிடுமோ? என்கிற பயம் ஏற்பட தொடங்கியது.
புதிய பாதிப்பில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் அதிகபட்சமாக 17 பேர் உள்ளனர். இதில் கோணவாய்க்கால், சுக்கன் தோட்டம், கருங்கல்பாளையம், ராமமூர்த்தி நகர், ரெயில்வே காலனி, சாஸ்திரிநகர், கே.டி.கே.நகர், சூரம்பட்டி, சூளை, நேதாஜிரோடு, ஆசிரியர்காலனி அவ்வையார் வீதி, நல்லிரோடு, பி.பி.அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கோபி மொடச்சூரில் 2 பேருக்கும், தனியார் நர்சிங் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கும், பி.கரட்டுப்பாளையம் அண்ணாநகரில் 15 வயது சிறுவனுக்கும், பெருந்துறையில் 3 பேருக்கும், நம்பியூர் அருகே கெட்டிச்செவியூரில் 2 பேருக்கும், சித்தோட்டில் 2 பேருக்கும், பவானி சலங்கைபாளையம், புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 509 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 306 பேர் குணமடைந்து உள்ளனர். 195 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Next Story