என் மலர்
ஈரோடு
வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் திருமணம் ஆன 40 நாளில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள குருமனைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 29). இவருக்கும், சவுமியா (26) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான ஜெகதீஸ் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதீஸ் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறையில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் இவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெகதீஸ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ஜெகதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெகதீசின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் ஹரிபிரசாத் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
மகளை திருமணம் செய்துகொடுக்க மறுத்த பெண்ணை, ஒருதலைக்காதலால் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்தவர் மேரி (வயது 56). இவருடைய கணவர் தமிழ்தாசன். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். முதல் மகள் அன்னமேரிக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்ற 4 மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை.
மேரி ரெடிமேட் ஜவுளி மற்றும் பேன்சி பொருட்களை தன்னுடைய வீட்டிற்கு முன்பாக தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்தார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோபியை அடுத்துள்ள ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் மேரி தனது 4 மகள்களுடன் குடியிருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியில் குடியிருந்த பர்கூரைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் என்பவர் மேரியின் கடைசி மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி அவர் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த முருகன் உன் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் யாரும் உயிரோடு இருக்க முடியாது என செல்போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் முருகனுக்கு பயந்து கோபி பெரியமொடச்சூர் சங்கரன் வீதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரி தனது மகள்களுடன் குடிவந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேரி தனது மருமகன் புஷ்பராஜ், மகள் அன்னமேரி ஆகியோருடன் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் முருகன் அங்கு வந்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மேரியின் அருகே சென்று, உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறாயா? என ஆவேசத்துடன் கூறி அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதைத் தடுக்க வந்த கணேசன் என்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மேரி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொடுமுடியில் சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
ஈரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் கொடுமுடி பெரியவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமியை கடந்த மாதம் 27-ந் தேதி ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் தந்தை கொடுமுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரையும், கடத்தப்பட்ட சிறுமியையும் தேடி வந்தார்கள்.
இந்த நிலையில், நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செந்தில்குமாரை கண்டுபிடித்த போலீசார், சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்கள். பின்னர் சிறுமி அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சிறுமியை கடத்தியதாக மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா போக்சோ சட்டத்தில் செந்தில்குமாரை கைது செய்தார்.
தாளவாடி அருகே யானை தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்டது பூதாளபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 10 பேர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள காரையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் பள்ளிக்கூட மாணவனான சிவமூர்த்தி, என்பவரது மகன் ஜடேருத்ராவும் (வயது 13) சென்றான்.
ஜடேருத்ரா மட்டும் தனியாக முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வந்த யானை, ஜடேருத்ராவை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியுள்ளது. பின்னர் அவனது தலையில் காலால் மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜடேருத்ரா பரிதாபமாக இறந்தான்.
இதை பார்த்த அவனுடன் வந்தவர்கள் உடனே கேர்மாளம் வனத்துறை மற்றும் ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அருகே நூதன முறையில் கேமராக்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று பெருந்துறை பழைய பஸ் நிலையம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள செல்போன் கடை அருகே கையில் கருப்பு கலர் பையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் சென்று அவர் வைத்திருந்த பையை வாங்கி திறந்து சோதனை செய்தனர். அதில் 2 வீடியோ கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ஓ.எல்.எக்ஸ். தகவல் பரிமாற்றம் மூலம், கேமராக்களை வாங்குவதாக கூறி உரிமையாளர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நைசாக திருடிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம், தாழையூத்து, வடக்கு பள்ளிவாசல் வீதியைச்சேர்ந்த முகமது அப்துல் சலீம் மகன் பீர் ரிஸ்வான் ஹாசன் (வயது 33) என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் ஈரோடு மற்றும் கோவையில் இருந்து திருடிக்கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 வீடியோ கேமராக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானி அருகே சாய்பாபா கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டையின் பின் பகுதியில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று, ஒலிநாடாவை திருடிச்சென்றுவிட்டார். அவருடைய உருவம் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து பவானி போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.
விசாரணையின் முடிவில் கோவிலில் ஒலிநாடாவை திருடியவர் பவானியை அடுத்துள்ள காடையாம்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 23) என்பவர் என்றும், இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்தார்கள். பவானி அடுத்துள்ள தொட்டியபாளையத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்திலும் ராஜா திருட முயற்சித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமணம் ஆன 9 மாதத்தில் பூட்டிய ஓட்டலுக்குள் தூக்குப்போட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஊஞ்சலூர்:
பாசூரில் இருந்து சோழசிராமணி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று ஆறு மாத காலமாக செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று ஓட்டலுக்குள் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
போலீசாரின் விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர் நாமக்கல் மாவட்டம் கந்தாம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 26) என்றும், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பெயிண்ட் கடையில் வேலை பார்த்த இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் ரேணுகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது என்பதும் தெரியவந்தது.
ஆனால் ஜீவானந்தம் ஏன் பாசூர் வந்து பூட்டப்பட்ட ஓட்டலின் பின்பகுதி வழியாக உள்ளே சென்று தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள முகாசி அனுமன்பள்ளி பஸ்நிறுத்தம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், போலீசாருடன் அங்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டு இருந்த அந்த நபரை பிடித்து சோதனை செய்தார்கள். அப்போது அவரிடம் சிறுசிறு பொட்டலமாக கட்டப்பட்டு இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர், வெள்ளோடு கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 34) என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குணசேகரனை கைது செய்து, அவர் கஞ்சா விற்று வைத்திருந்த 500 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 32 ஆயிரத்து 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்கள் மீதும், ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 32 ஆயிரத்து 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண்ணை வெடிக்கொலை செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்தாசன். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு அன்னமேரி, கஸ்தூரி, தமிழரசி, வர்ஷினி ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் இறந்து விட்டார். இதையடுத்து மேரி தள்ளுவண்டியில் ரெடிமேட் துணி மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்து வந்தார். மேரியின் மூத்த மகள் அன்னமேரிக்கு மட்டும் திருமணமாகி விட்டது. மற்ற 3 பேருக்கும் திருமணமாகவில்லை.
3 பேரும் கோபி தாசம்பாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் மில்லில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். மேரி கோபி ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தார்.
அவரது மகள்கள் அடிக்கடி மேரியை பார்க்க வந்துள்ளனர்.
இந்த நிலையில் மேரியின் பக்கத்து வீட்டைச்சேர்ந்த ராணி என்பவரது வீட்டுக்கு பர்கூரை சேர்ந்த அவரது அண்ணன் மகன் லாரி டிரைவர் முருகன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மேரியின் கடைசி மகள் வர்ஷினியை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
இது பற்றி தெரிய வந்ததும் மேரி லாரி டிரைவர் முருகனை கண்டித்தார். இதனால் முருகனுக்கு மேரி மீது கோபம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முருகன் அடிக்கடி மேரிக்கு போன் செய்து வர்ஷினியை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் நீங்கள் யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டியுள்ளார்.
இதனால் முருகனுக்கு பயந்து மேரி மொடச்சூர் சங்கரன் வீதிக்கு மகள்களுடன் வீடுமாறி சென்றுவிட்டார்.
நேற்று இரவு 7 மணியளவில் மேரி தனது வீட்டில் மூத்த மகள் அன்னமேரி அவரது கணவர் புஷ்பராஜ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு முருகன் மோட்டார் சைக்களில் வந்தார். அப்போதும் அவர் வர்ஷினியை திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்தார்.
அதற்கு மேரி மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார்.
இதைபார்த்த கணேசன் என்பவர் தடுக்க முயன்றார். அவரையும் முருகன் அரிவாளால் வெட்டினார். பின்னர் முருகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மேரி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். காயத்துடன் கணேசன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கோபி டி.எஸ்.பி.தங்கவேல், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப் -இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் முருகனை தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே கரும்பு இல்லாததால் வேனை யானை முட்டித்தள்ளியது. இச்சம்பவத்தால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரிகளில் இருந்து வீசியெறியும் கரும்பு துண்டுகளை யானைகள் சுவைத்து பழகிவிட்டன.
இதனால் தமிழக, கர்நாடக எல்லையான காராப்பள்ளம் வன சோதனைச்சாவடியில் எப்போதும் யானைகளின் நடமாட்டத்தை காணமுடியும். இவ்வாறு ரோட்டு ஓரம் சுற்றும் யானைகள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் கரும்பு பார லாரிகளை வழிமறித்து, கரும்புகளை எடுத்து தின்கின்றன.
இந்தநிலையில், நேற்று அதிகாலை காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி வந்தது. அது கரும்பு பாரம் ஏற்றிய லாரியோ? என்று நினைத்து யானை ஒன்று லாரியை மறித்தது. டிரைவர் அலறி பயந்தபடியே இருக்கையில் இருந்தார். ஆனால் லாரியில் கரும்பு இல்லை என்று தெரிந்துகொண்டதும் யானை லாரியை விட்டு நகர்ந்தது. உடனே டிரைவர் லாரியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அதன்பின்னர் சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்தது. யானை வேனையும் வழிமறித்து பார்த்தது. வேனின் மேல்பகுதியில் துதிக்கையை விட்டு தேடிப்பார்த்தது. அதிலும் கரும்புகள் இல்லாததால் ஆத்திரமடைந்து, வேனின் பின் பகுதியில் தலையால் முட்டி தள்ளியது.
பயந்து அலறிய டிரைவர் வேனில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார். இந்த காட்சியை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் ரோட்டில் அப்படியே தங்களுடைய வாகனங்களை நிறுத்திக்கொண்டார்கள்.
எந்த வாகனத்திலும் கரும்புகள் இல்லை என்று தெரிந்தபின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே போக்குவரத்து தொடங்கியது.
கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரி டிரைவர்கள் கரும்பு கட்டுகளை ரோட்டில் போட்டு யானைகளுக்கு பழக்கி விட்டனர். இதனால் ருசி கண்ட யானைகள் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து ரோட்டிலேயே சுற்றுகின்றன.
சில நேரம் கரும்புகள் இல்லாமல் வரும் லாரி, சரக்கு ஆட்டோ, வேன்களை வழிமறித்து தாக்குகின்றன. எனவே கரும்பு பாரம் ஏற்றி வருபவர்கள் ரோட்டில் கரும்பு கட்டுகளை போடுவதை தவிர்க்கவேண்டும். சோதனை சாவடி போலீசார் இதை கண்காணிக்க வேண்டும். வனத்துறையினர் ரோட்டில் சுற்றும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு அருகே வாலிபர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26). இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு திவின் (1) என்ற மகன் உள்ளான். மல்லிகா தனது மகனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பிரபாகரன் அவருடைய தாய் வாசுகியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாசுகி தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். அதனால் பிரபாகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பிரபாகரனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததால் மனம் உடைந்து இரவில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்