search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருட்டு"

    • அன்னபாண்டி தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய அன்னபாண்டியை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இறைப்புவாரி பஞ்சாயத்துக்குட்பட்ட மாவடியில் சிவனைந்த பெருமாள் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் வளாகத்தில் மர்ம நபர் சுற்றி திரிந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

    அவரிடம் ஆக்சா பிளேடு, கத்தி ஆகியவைகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் பொதுமக்கள் கேட்ட போது அவர் தான் வள்ளியூர், பொய்காட்டான் குடியிருப்பை சேர்ந்த அன்னபாண்டி(வயது 45) என்றும், கோவிலில் திருட வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி பொதுமக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கோவிலுக்கு சென்றனர். பொதுமக்கள் அன்னபாண்டியை, போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்த போது, அவரை 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மழை பெய்ததால் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் நின்றுள்ளனர்.

    அப்போது திடீர் என அன்னபாண்டி தப்பி ஓடி விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய அன்னபாண்டியை தேடி வருகின்றனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் எல்லை யம்மன் கோவில் உள்ளது. மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

    பின்னர் அங்கி ருந்த உண்டியலை உடைத்துள்ளனர். உண்டியல் உடைக்கப் பட்டிருப்பதை கண்ட பொது மக்கள் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையில் இருந்த சுமார் ஒரு பவுன் தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கேமரா, எச்சரிக்கை மணி உடைக்கப்பட்டிருந்தன.
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 25-ந் தேதி இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவிலை அர்ச்சகர் பூட்டி கொண்டு சென்றுவிட் டார். நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க அர்ச்சகர் சென்றார்.

    அப்போது கோவிலில் பூட்டு, மூலவர் சன்னதி எதிரில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் திருட்டுப்போக வில்லை. கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன.கோவில் பூஜை அறையில் உள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஏகவள்ளி வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் செல்வி சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தார்.

    ×