என் மலர்
ஈரோடு
கோபி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடத்தூர்:
கோபி அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 42). நேற்று மதியம் வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். பின்னர் வீட்டுக்குள் வந்து மாட்டுத்தரகர் வீடு இங்கு எங்கு உள்ளது? என்று கேட்டார். விஜயலட்சுமி அதற்கு பதில் சொல்ல முயன்றபோது, அந்த நபர் வெடுக்கென்று விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார். விஜயலட்சுமி திருடன் திருடன் என்று கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். ஆனால் கொள்ளையனை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து விஜயலட்சுமி சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 14 ஆக உயர்ந்தது.
ஈரோடு:
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 14 ஆக உயர்ந்தது.
இதில் நேற்று 31 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 13 ஆயிரத்து 663 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். 205 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 146 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.
விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள ஏளுரில் இலவச ஆடு மற்றும் கறவை மாடுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் நேற்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதாரத்துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி பள்ளிகள் செயல்படும். எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதல்-அமைச்சர் கூறி உள்ளார். அதன்படி பள்ளிகள் செயல்படும்.
இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம்.
விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கட்டாய கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும் போது பெற்றோர்கள் கண்காணிக்கலாம்.
முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப்பட உள்ளது. இதற்காக 6029 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்பதை ஆய்வு செய்து திறக்கப்படும்.
ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம்.
மதிய உணவுடன் ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

பட்டா வழங்கிய இடத்தை சீரமைத்து தரக்கோரி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி சித்தோடு, நல்ல கவுண்டன்பாளையத்தில் இலவச வீடு மனை நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒதுக்கப்பட்ட இடம் பாறை, கரடு, முரடாக இருப்பதால் சமன் செய்து தரக்கோரி கடந்த நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகள் நல்ல கவுண்டன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சமன் செய்து தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு நாள் மட்டுமே எந்திர உதவியுடன் பணிகள் நடந்தது. ஆனால் அதன் பிறகு பணிகள் நடக்கவில்லை.
இந்நிலையில் நிலத்தை அளவீடு செய்து சமன் செய்து தர கோரி 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று மதியம் தொடங்கினர். தாசில்தார் பரிமளாதேவி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2.1 ஏக்கர் நிலம் முழுவதும் பாறைகளாக உள்ளது. இதனை சமன் செய்ய ரூ.15 லட்சம் வரை செலவாகும். சமன் செய்து தருகிறோம். எங்களுக்கு அவகாசம் கொடுங்கள் என்று கூறினார். ஆனால் நீங்கள் பணிகளை தொடங்கி முடிக்கும் வரை நாங்கள் இங்கேயே இருக்கிறோம். என்று மாற்றுத்திறனாளிகள் கூறிவிட்டனர்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் இரவு முழுவதும் கடும் குளிரில் கொசுக்கடியில் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பெண்கள் குழந்தைகள் மட்டும் இரவு வீட்டிற்கு சென்று விட்டனர். ஆண் மாற்றுத்திறனாளிகள் அங்கேயே போர்வை விரித்து தூங்கி விட்டனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் நடத்த இடத்திலேயே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோடு:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி நேற்று திருப்பூரில் பயணத்தை முடித்து ஈரோடு மாவட்டத்தில் பயணத்தை தொடங்கினார். கோபி, கவுந்தப்பாடி, பவானி, சித்தோடு, கனிராவுத்தர் குளம், பி.பி.அக்ரகாரம், கே.என்.கே. ரோடு மற்றும் கருங்கல்பாளையம் பகுதியில் அவர் பொதுமக்களை சந்தித்தார்.
அவர் கனிராவுத்தர் குளம் பகுதிக்கு இரவு 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இரவு 10 மணிக்கு பிறகே அவரால் அங்கு வர முடிந்தது.
அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசவில்லை. திறந்த காரில் நின்று கொண்டு புன்னகையுடன் மக்களைப்பார்த்து 2 கைகளின் கட்டை விரல்களையும் உயர்த்தி வெற்றிச்சின்னம் காட்டினார். மக்களிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியில் உள்ள இணைந்த கைகள் சின்னத்தை காட்டும் வகையிலும் கைகளை கோர்த்து செய்கையில் உணர்த்தினார். அங்கு பெண்கள் சிலர் அவர் மீது பூக்களை சொரிந்தனர். உடனடியாக பூ போட வேண்டாம் என்று மறுத்து தடுத்தார்.
பி.பி.அக்ரஹாரம் பகுதியிலும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து இருந்தனர். அங்கு ஓரிரு வார்த்தைகளை பேசிய அவர் மீண்டும் சைகை மொழியில் பேசிக்கொண்டு புறப்பட்டார். ஈரோடு கே.என்.கே. ரோடு பகுதியில் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.வி.மகாதேவன், கொடி ஏற்று விழா ஏற்பாடு செய்து இருந்தார். அங்கு வந்த அவர், மீண்டும் மக்களிடம் சைகை மொழியிலேயே உரையாடினார். கட்சிக்கொடியையும் அங்கு திரண்டு இருந்த மக்களை வைத்து ஏற்றச்செய்தார். அவரிடம் தீபம் ஒன்று வழங்கப்பட்டது. அதையும் பொதுமக்களிடமே திரும்ப அளித்து விட்டு, புன்னகையுடன் விடைபெற்றார். இரவு நேரத்திலும் வீட்டு மாடிகளில் இருந்து அவரை பார்க்க காத்திருந்த மக்களை நோக்கியும் கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பார்க்க இரவு நேரத்திலும் குவிந்து இருந்தனர். அவர்கள் மத்தியில் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
செல்லும் இடத்தில் எல்லாம் தமிழ் மக்கள் மாற்றத்துக்கு தயார் ஆகிவிட்ட சாயல் இங்கே தெரிகிறது. இளைஞர்கள் முதல் முறையாக ஓட்டுப்போடப்போகும் இளைஞர்கள், இது 2 கட்சிகளுக்கோ, 3 கட்சிகளுக்கோ நடக்கும் போட்டி அல்ல. நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டி. அதில் நீங்கள் நிற்க வேண்டிய பக்கம் நீதியின் பக்கம்தான். அதை நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு. காரணம், சாதி, மத, பேதமின்றி இங்கே கூடி இருக்கும் கூட்டம் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இவர்கள் கூடி கலையபோவதும் இல்லை.
தமிழகத்தை தலை நிமிரச்செய்யும் வட்டத்தை பார்க்கிறேன். இதில் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் எதிர்காலத்தின் நம்பிக்கை பளிச்சிடுகிறது எனக்கு. கரம் கோர்ப்போம் இளைஞர்களே, கரம் கோர்ப்போம். தமிழகத்தை சீரமைப்போம்.
உங்கள் மூத்த தலைமுறை செய்ய மறந்ததை இன்று செய்வோம். சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள். சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள். அது நமது கடமை. அகன்று நின்று வேடிக்கை பார்க்காதீர்கள். அரசியலில் உங்கள் கை பலம் தெரிய வேண்டும். அப்படி தெரிந்தால் நாளை நமதே. நான் உங்கள் ஆசிகளுடன் வெற்றிப்பாதையில் நடக்கிறேன் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
முன்னதாக கனிராவுத்தர் குளம் பகுதியிலும், கே.என்.கே. ரோடு பகுதியிலும் அவர் வார்த்தைகளால் பேசாமல் சென்றதால் ரசிகர்களும், தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர்கள் ஆனந்தம் எம்.ராஜேஸ், துரைசேவுகன், நகர செயலாளர் பரணி உள்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் சித்தோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ‘உங்கள் ஆசியுடன், உங்கள் உதவியுடன் தமிழகத்தை சீரமைப்போம். சீரமைத்த தமிழகத்தில் மீண்டும் உங்கள் அன்பில் நனைய நான் வருவேன். அதிக நாள் இல்லை. இன்னும் 3 மாதங்கள்தான் உள்ளன. நீங்கள் நல்லபடி எனக்கு வழி சொன்னால் நான் மீண்டும் இங்கே வருவேன்.
நான் போயிருந்த கூட்டத்தில் கலகம் ஏற்படுத்த ஆட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அன்பு வெள்ளத்தில் அவர்கள் மூழ்கிபோனார்கள். அவர்களை மெதுவாக அப்புறப்படுத்தினார்கள் நம் வீரர்கள். அவர்களுக்கு நன்றி. நாம் பழிபோடும் அரசியலும் அல்ல. பழிவாங்கும் அரசியலும் இல்ல. நாம் நாளைய தமிழகத்துக்கு வழிகாட்டப்போகும் அரசியல். மாற்றத்துக்கான புரட்சி தொடங்கி விட்டது. அதன் வீரர்கள் நீங்கள். அதை மறந்து விடாதீர்கள்,’ என்றார்.
இன்று 2-வது நாள் சுற்றுப்பயணத்தை கமல்ஹாசன் மேற்கொள்கிறார். பகல் 11 மணிக்கு திண்டல் அருகே உள்ள ஆலயமணி அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் லக்காபுரம், மொடக்குறிச்சி பஸ் நிலையம் மற்றும் சிவகிரியில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் முத்தூர் வழியாக காங்கேயம் செல்கிறார்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு:
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 993 ஆக உயர்ந்தது.
இதில் நேற்று 35 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 13 ஆயிரத்து 632 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். 215 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 146 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.

ஈரோட்டில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கே.கே.நகர் தெற்கு முதல்வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருடைய மனைவி புனிதவதி (வயது 57) . இவர்களுக்கு சசிதா என்ற மகளும், அபிலாஷ் என்ற மகனும் உள்ளனர். சசிதா திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். அபிலாஷ் புனேவில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக புனிதவதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 7-ந் தேதி ஞானசேகரன் பழனியில் உள்ள சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காலை அவருடைய வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, புனிதவதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த புனிதவதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து புனிதவதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
ஈரோடு:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி தனது 5-ம் கட்ட பிரச்சாரத்தை கோவையில் நேற்று தொடங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் கோபியில் பெரியார் திடலில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு அந்தியூர் தேரடிக்கு செல்லும் கமல்ஹாசன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். 7.45 மணிக்கு பவானி நகர் அந்தியூர் பிரிவில் மக்களை சந்தித்து பேசுகிறார். இரவு 8.15 மணிக்கு சித்தோடு நால்ரோட்டில் வேனில் நின்றவாறு பிரசாரம் செய்கிறார். 8.45 மணிக்கு ஈரோடு கனி ராவுத்தர் குளம், 9 மணிக்கு பி.பி. அக்ரஹாரம், 9.30 மணிக்கு கிருஷ்ணா தியேட்டர் அருகே பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். இத்துடன் ஈரோட்டில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பெருந்துறை ரோட்டில் உள்ள ஆலயமணி மஹாலில் கமல்ஹாசன் பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து 11.15 மணிக்கு லக்காபுரம், 11.30 மணிக்கு மொடக்குறிச்சி, 11:45 மணிக்கு சிவகிரியிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செல்கிறார்.

நொய்யல் அருகே மொபட்டில் மகள் வீட்டிற்கு வந்த தம்பதி கார் மோதி பரிதாபமாக இறந்தனர்.
நொய்யல்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜோடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் லிங்கப்பன் என்கிற ராமலிங்கம் (வயது 70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகள் வசந்தியின் வீடு கரூர் மாவட்டம் மேல்ஒரத்தை அருகே உள்ள ஆவரங்காட்டுப்புதூரில் உள்ளது.
இந்நிலையில் வசந்தியை பார்ப்பதற்காக ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் கொத்தமங்கலத்தில் இருந்து மொபட்டில் ஆவரங்காட்டுப்புதூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
நொய்யல் அருகே சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்காட்டுப்புதூர் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக வலதுபுறமாக ராமலிங்கம் தனது மொபட்டை திருப்பினார். அப்போது பின்னால் பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாகவந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமலிங்கம்-மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ேவலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, கார் டிரைவர் பெங்களூருவை சேர்ந்த சுதர்சன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருன்றனர்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கிராம கண்காணிப்பு அலுவலர்களாக 545 போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
காவல் துறை இயக்குனர் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 போலீசார் கிராம கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு அக்ரஹாரம் வீதியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கலந்து கொண்டு, இந்த திட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். அக்ரஹார வீதியில் ஏட்டு சிவசாமி கிராம கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கூறியதாவது:-
போலீஸ் -பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் இந்த கிராம கண்காணிப்பு அலுவலர்கள் செயல்படுவார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் பற்றிய பெயர், செல்போன் எண்கள் போன்ற விவரம் அந்தந்த பகுதியில் உள்ள பலகையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலைய செல்போன் எண்கள், உயர் அதிகாரிகள் எண்களும் அதில் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 விழிப்புணர்வு காவல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடைய முக்கிய பணி பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத்தடுப்பு தகவல்களை சேகரிக்கும் பணி ஆகும். இந்த சிறப்பு அலுவலர்கள் தினமும் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்கள்.
குடும்ப பிரச்சினை, நிலத்தகராறு, பாலியல் தொந்தரவு உள்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த சிறப்பு அலுவலரிடம் கூறலாம். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும். இது ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.

பர்கூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேகமூட்டமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு மலைப்பகுதியான தாமரைகரை, தேவர்மலை, ஈரட்டி, பெஜிலெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அதேபோல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் 30.5 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து, தற்போது 31.5 அடியாக உள்ளது.
தாமரைகரை பகுதியில் உள்ள கசிவுநீர் மற்றும் வனக்குட்டைகளிலும், கோவிலூரில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வனக்குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால், வனவிலங்குகளுக்கு போதுமான நீர் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து நேற்று காலை முதலே பர்கூர் மலைப்பகுதி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

பெருந்துறையில் உள்ள இண்டேன் கியாஸ் சேமிப்பு வளாகத்தில் கூடுதலாக 1,800 டன் கியாஸ் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு கட்டப்படுகிறது என தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் கூறினார்.
ஈரோடு:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இண்டேன் சமையல் கியாஸ் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு இண்டேன் கியாஸ் நிறுவன வாடிக்கையாளர் தினத்தையொட்டி நேற்று தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஈரோடு இண்டேன் கியாஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் கிரீஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் போது, கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளில் இருந்து சேமிப்பு கிடங்கில் உள்ள கலன்களுக்கு கியாஸ் செலுத்தும் போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை உடனடியாக அணைத்து சேதத்தில் இருந்து தப்பிப்பது குறித்த தீ விபத்து தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கியாஸ் ஆலை பாதுகாப்பு அதிகாரி சரத் தலைமையில் பணியாளர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினார்கள்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தலைமை மேலாளர் ஆர்.தாமரைச்செல்வன் கூறியதாவது:-
சமையல் கியாஸ் விற்பனை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சமையல் கியாஸ் நிறுவனம் உள்ளது. இந்தியா முழுவதும் 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது தமிழக எண்ணிக்கையில் 57.7 சதவீதமாகும்.
ஈரோடு இண்டேன் கியாஸ் சிலிண்டர் ஆலை பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது. சுமார் 61 ஏக்கர் பரப்பளவில் ஆலை உள்ளது. இதில் சுமார் 30 ஏக்கர் அளவுக்கு ஆலையும் 30 ஏக்கர் அளவுக்கு பசுமைக்காடும் உள்ளது. பெருந்துறையில் இருந்து ஈரோடு நாமக்கல் மாவட்டங்கள் முழுமையும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறது. 125 முகவர்கள் சிலிண்டர் வினியோக பணியில் உள்ளனர். இங்கிருந்து தினசரி 32 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரை சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இங்கு 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை தினசரி வினியோகம் செய்யும் வசதி இருக்கிறது. சுமார் 10 ஆயிரம் புதிய சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரம் இண்டேன் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதுதவிர 5 கிலோ கியாஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சிலிண்டர்களை பொதுமக்கள் உடனடியாக வாங்கிக்கொள்ளும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக உபயோகத்துக்கும் இந்த சிலிண்டர்கள் கிடைக்கும்.
வர்த்தக உபயோகத்துக்கு 19 கிலோ மற்றும் 47.5 கிலோ சிலிண்டர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 19 கிலோ சிலிண்டரில் கியாஸ் பயன்பாட்டு நாட்களை அதிகரிக்கும் வகையில் எக்ஸ்ட்ரா தேஜ் என்ற புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக ஆதரவை பெற்று இருக்கிறது.
பெருந்துறை கியாஸ் சேமிப்பு கிடங்கில் ஏற்கனவே 1,400 டன் மற்றும் 450 டன் கொள்ளளவு கொண்ட 2 கலன்கள் உள்ளன. இதன் மூலம் எப்போதும் 1,850 டன் கியாஸ் இருப்பில் வைக்கப்பட்டு இருக்கும். காரணம், சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் மங்களூரில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தினசரி கியாஸ் எடுத்து வரப்படுகிறது. ஏதேனும் தடங்கல்கள் காரணமாக கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாமல் இருக்க இங்கு சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கொள்ளளவை உயர்த்தும் வகையில் கூடுதலாக 1,800 டன் கொள்ளளவு கொண்ட புதிய கொள்கலன் கட்டும் பணி நடந்து வருகிறது. பணிகள் முழுமை பெற்று இந்த மாதம் (ஜனவரி) இறுதி அல்லது பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும். இந்த கிடங்கு செயல்பட தொடங்கிய பின்னர் 6 நாட்களுக்கு தேவையான கியாஸ் சேமிப்பில் இருக்கும்.
தற்போது 24 மணி நேரத்தில் பொதுமக்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறோம். இன்னும் இந்த கால அளவை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
5 கிலோ, 14.2 கிலோ அளவுகளில் வீட்டு உபயோக சிலிண்டர்கள், 19 கிலோ, 47.5 கிலோ சிலிண்டர்களும் உடனடியாக கிடைக்கிறது. விரைவில் 425 கிலோ சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழில் கூட பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகளில் இருந்து எடுத்து வரப்படும் சிலிண்டர்கள் சுத்தம் செய்வது, அவற்றில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா என்று சோதனை செய்தல், ஒரே நேரத்தில் 24 சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பும் எந்திரத்தின் செயல்பாடு, கசிவு சோதனையிடும் தானியங்கி எந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டனர். கியாஸ் நிரப்பிய சிலிண்டர்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
கியாஸ் ஆலையின் அனைத்து வகை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்ட அதிகாரிகள் கூறும்போது, எந்த ஒரு பெரிய விபத்தாக இருந்தாலும் உடனடியாக அதை கட்டுப்படுத்தும் முழு ஏற்பாடுகளும், பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட விற்பனை அதிகாரி எஸ்.சுகன்யா, மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகர் ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர்.