என் மலர்tooltip icon

    ஈரோடு

    கெட்டிசமுத்திரம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்தன.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மிதமான வெயில் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கெட்டிசமுத்திரம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பகுதியில் உள்ள ஏராளமான தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்தன.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘கரும்புகள் 10 மாத பயிராகும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரும்புகளை சாகுபடி செய்தோம். இவை இன்னும் 4 மாதத்தில் வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதற்குள் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்காற்றில் கரும்புகள் சாய்ந்தன. இது எங்களை வேதனைப்படுத்தியுள்ளது’ என்றனர். இதுபற்றி அறிந்ததும் வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று சேதமடைந்த கரும்புகளை பார்வையிட்டு சென்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வரும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை)  முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
     
    சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணியை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1,381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் 4-ந் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.   இதற்காக ரேஷன்கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று  டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள்  வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகித்து வருகின்றனர்.

    நாளொன்றுக்கு 200 பேர் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா தாக்கம் காரணமாக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

    டோக்கன்  கொடுக்கும் போதே  சம்பந்தப்பட்டவர்கள் எந்த தேதியில் வரவேண்டும் எந்த நேரத்திற்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வரும்   31-ந் தேதி வரை  ரேஷன் கடை களில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    இதையடுத்து ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு வ.உ.சி.காய்கறி பெரியமார்க்கெட்டில் வடகிழக்கு பருவமழை, பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறையத்தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி.காய்கறி பெரியமார்க்கெட்டில்  வடகிழக்கு பருவமழை,  பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறையத்தொடங்கியது.

    கடந்த சில நாட்களாக  தேவைக்கேற்ப காய்கறி விளைச்சல் இல்லாததால்  அனைத்து வகையான காய்கறி விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.  

    குறிப்பாக தக்காளி, முருங்கைக்காய் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.  இதனால் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் அவதி அடைந்துவந்தனர்.   

    தாளவாடி,  சத்தியமங்கலம் பர்கூர், அந்தியூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறிகள் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். 

    கடந்த சில நாட்களாகவே காய்கறி வரத்து குறைந்தே வந்தது.  இந்நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.  

    இதனால் கடந்த  வாரத்தில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை இந்த வாரத்தில் ரூ.10 வரை குறைந்துள்ளது.  கத்திரிக்காய் கடந்த வாரம் ரூ.100 முதல் 120 வரை விற்றது.  ஆனால் இன்று ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது. 

    இதேபோல் கடந்த வாரம் 120-க்கு விற்கப்பட்ட கருப்புபட்டை அவரை இன்று ரூ. 90-க்கு விற்பனையானது.  

    வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில்  விற்கப்பட்ட மற்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:- பீட்ரூட்-80, கேரட்-  70 முதல் 80 வரை, பீன்ஸ்-50, முட்டைக்கோஸ்-60, மிளகாய்-100, இஞ்சி-50, உருளைக்கிழங்கு-50, சேனைக்கிழங்கு-30, சுரக்காய்-20, பீர்க்கங் காய்-50, முள்ளங்கி-40, பாவக்காய்-50, முருங்கைக்காய்-250, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம்-60, காலிப்பிளவர்-40, தக்காளி-50 முதல் 60 வரை விற்பனையானது.
    ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழை இரவு வரை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 

    ஈரோடு மாநகர் பகுதிகளில்  வளர்ச்சிதிட்ட பணிகள் நடந்து வருவதால் ரோடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    கவுந்தப்பாடி பகுதியில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணி முதல் 10 மணி வரை பரவலாக மழை பெய்தது. பெருந்துறை பகுதியில் சாரல் மழைதூறி கொண்டே இருந்தது.

    இதே போல் கோபி, சத்தி, பவானி,  சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    பவானியில் புத்தாண்டு அன்று மனைவியுடன் வீடியோகாலில் பேசிய மருந்துகடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    பவானி: 

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கொண்டுரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). இவர் மயிலம்பாடியில்  மருந்துகடை நடத்தி வந்தார். இவரது மனைவி பிரவீனா. 
     
    சம்பவத்தன்று பிரவீனா தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக திருச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் பிரவீனா புத்தாண்டு அன்று இரவு தனது கணவர் பூபதிக்கு போன் செய்தார்.

    அப்போது பூபதி தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருப்பதாக வீடியோகால் மூலம் மனைவியிடம் பேசி உள்ளார்.

    இந்நிலையில் மதியம் பூபதியின் சித்தப்பா மகள் பிரவீனாவிற்கு போன் செய்து கொண்டுரெட்டிபாளையம் செட்டியார் தோட்டம் அருகில் பூபதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், அவரது உடல் பவானி மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். 

    இதையடுத்து பிரவீனா பவானி அரசு மருத்துவமனைக்கு வந்து தன் கணவரின் உடலை பார்த்து கதறிஅழுதார்.

    மேலும் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி இன்று ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற வ.உ.சி.பூங்கா ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை மகாகணபதிக்கு அபிஷேகம் நடந்தது.
     ஈரோடு:

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி இன்று ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற வ.உ.சி.பூங்கா ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை மகாகணபதிக்கு அபிஷேகம் நடந்தது.

    அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மூலவருக்கு மகாதிருமஞ்சனம் நடந்தது. 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற அபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  

    கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில்  பொதுமக்கள் வரிசையாக வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. 

    அரசு அருங்காட்சியகம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.
     
    பக்தர்களுக்கு லட்டு, செந்தூரம், சிகப்பு கயிறு வழங்கப்பட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக  50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    14 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பொது மக்களுக்கு தரிசனம் தந்தார்.

    தொடர்ந்து மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. இதேபோல் கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவிலிலும் இன்று காலை அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

    இதைத் தொடர்ந்து பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.  ஆஞ்சநேயருக்கு செந்தூரம், கனிஅலங்கரம், காரை வாய்க்கால் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. 

    பொது மக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மாநகரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மாநகரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினர்.

    ஈரோடு காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர் ரெயில் நிலையம், ஜி.எச். ரவுண்டானா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் புத்தாண்டையொட்டி ஏராளமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிலர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் வேகமாக வாகனங்களை இயக்கியவர்கள், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அவர்களுடன் புத்தாண்டையொட்டி கேக் வெட்டி கொண்டாடி அனுப்பி வைத்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். 

    இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 17&வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 543 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 

    இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    அதேபோல் 2&ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

    ஈரோடு மாநகர பகுதியில் வழக்கம் போல் 50 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி நடக் கிறது.

    இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 2172 பணியாளர்களும், 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&

    ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வரும் 3&ந் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுடையவர்களுக்கு அதாவது 2007&ம் வருடம் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முன்னதாக பிறந்தவர்களுக்கும் கோவேக்சின்  தடுப்பூசி   கல்வி நிறுவனங்களில் செலுத்தப்பட உள்ளது. 

    மேலும் தற்போது புதிதாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் தடுப்பூசி அவசியம். எனவே நாளை நடை பெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில்  மக்கள் கலந்து கொண்டு இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் அச்சமின்றி தயக்கமின்றி தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் ஆற்றுப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2  பேர் கைது செய்யப்பட்டனர். 

    கொடுமுடி பாசூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் சவுரியூர் பகுதியை சேர்ந்த முருகேஷ் (32), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளம் பகுதியை சேர்ந்த கார்த்தி (27) என தெரியவந்தது. 

    அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கருவேலம்பாளையம் காவிரி கரை பகுதியில் இருந்து  திருடி கொண்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கொடுமுடி, மலையம்பாளையம், சிவகிரி, பெருந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடி சென்றது தெரிய வந்தது.  இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
    ஈரோட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில்  கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் காக்கும் கரங்கள் அமைப்பு தொடங்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் 3625 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதன் பயனாக மாவட்டம் முழுவதும் 56 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் லேடிஸ் பர்ஸ்ட் மற்றும் ஹலோ சீனியர் உதவி மையத்தின் மூலம் பெண்கள் மற்றும் முதியவர்கள் சார்பில் பெறப்பட்ட 2,444 முறையீட்டு அழைப்புகளில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 118 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சாலைவிபத்துகளைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைவிதிமுறைகளை மீறிய 6 லட்சத்து 3 ஆயிரத்து 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 320 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 25 ஆயிரத்து 222 ஓட்டுனர்கள் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 22,151 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.விபத்து மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 587 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 23 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்தார்.
    2022 புத்தாண்டு பிறந்ததையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது.
    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். 

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் மாநகரில் இருந்து பக்தர்கள் பலர் வந்து அம்மனை வணங்கி சென்றனர். 

    ஈரோடு சின்ன மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன், பெருமாள், மாநகராட்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், கருங்கல்பாளையம் ஓங்காளியம்மன், பார்க்ரோடு எல்லைமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை  சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  

    கோபி மூலவாய்க்கால் கரிவரதராஜ பெருமாள், வேலுமணி நகர் சக்தி விநாயகர், அய்யப்பன், பச்சமலை, பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கோபி சாரதா மாரியம்மன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.

    பவானி கூடுதுறை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பழனியாண்டர், தேவபுரம் மாரியம்மன், அம்மாபேட்டை காவிரிக்கரை சொக்கநாதர்  கோவிலில் அதிகாலை சிறப்பு அங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அந்தியூர் பத்ரகாளி யம்மன், சென்னிமலை முருகன், திண்டல் வேலாயுதசாமி கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்தனர். பக்தர்கள் முககவசம் அணிந்து கைகள் கழுவிய பின்பே அனுமதிக்கப்பட் டனர்.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி  கிறிஸ்தவ தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 11.30 முதல் 1.30 வரை பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    நள்ளிரவில் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஆலயத்தின் பங்கு தந்தை ஜான்சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு  பிரார்த்தனை நடந்தது.

    முதலில் நன்றி வழிபாடும் அதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. உதவி பங்குத்தந்தை ராயப்பதாஸ், அருள்தந்தை மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயு தலைமையில் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்திலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட  100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி  இன்று சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 கடைகள் பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வரும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது.

    பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் முன்னதாகவே குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள். இதனால் விசே‌ஷ காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குடிமகன்கள் நேற்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். காலை முதல் மாலை வரை மதுபான விற்பனையும் சுமாராகவே இருந்தது. ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் குவிந்தனர். பீர், பிராந்தி, ரம் போன்ற வகைகளை அள்ளி சென்றனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். வழக்கத்தைவிட ரூ.1 கோடியே 28 லட்சத்துக்கு கூடுதலாக மதுபானம் விற்பனையாகி உள்ளது.
    ×