என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு கள்ளுக்கடை மேடு ராமபக்த ஆஞ்சநேயர் செந்தூர அலங்காரத்திலும், காரைவாய்க்கால் பக
    X
    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோடு கள்ளுக்கடை மேடு ராமபக்த ஆஞ்சநேயர் செந்தூர அலங்காரத்திலும், காரைவாய்க்கால் பக

    ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

    அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி இன்று ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற வ.உ.சி.பூங்கா ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை மகாகணபதிக்கு அபிஷேகம் நடந்தது.
     ஈரோடு:

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி இன்று ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற வ.உ.சி.பூங்கா ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை மகாகணபதிக்கு அபிஷேகம் நடந்தது.

    அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை மூலவருக்கு மகாதிருமஞ்சனம் நடந்தது. 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற அபிஷேகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  

    கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில்  பொதுமக்கள் வரிசையாக வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. 

    அரசு அருங்காட்சியகம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.
     
    பக்தர்களுக்கு லட்டு, செந்தூரம், சிகப்பு கயிறு வழங்கப்பட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக  50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    14 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பொது மக்களுக்கு தரிசனம் தந்தார்.

    தொடர்ந்து மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. இதேபோல் கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவிலிலும் இன்று காலை அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

    இதைத் தொடர்ந்து பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.  ஆஞ்சநேயருக்கு செந்தூரம், கனிஅலங்கரம், காரை வாய்க்கால் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. 

    பொது மக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.
    Next Story
    ×