என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
புத்தாண்டு கொண்டாடிய மருந்துக்கடை அதிபர் மர்ம சாவு
பவானியில் புத்தாண்டு அன்று மனைவியுடன் வீடியோகாலில் பேசிய மருந்துகடை அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கொண்டுரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). இவர் மயிலம்பாடியில் மருந்துகடை நடத்தி வந்தார். இவரது மனைவி பிரவீனா.
சம்பவத்தன்று பிரவீனா தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக திருச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் பிரவீனா புத்தாண்டு அன்று இரவு தனது கணவர் பூபதிக்கு போன் செய்தார்.
அப்போது பூபதி தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருப்பதாக வீடியோகால் மூலம் மனைவியிடம் பேசி உள்ளார்.
இந்நிலையில் மதியம் பூபதியின் சித்தப்பா மகள் பிரவீனாவிற்கு போன் செய்து கொண்டுரெட்டிபாளையம் செட்டியார் தோட்டம் அருகில் பூபதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், அவரது உடல் பவானி மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பிரவீனா பவானி அரசு மருத்துவமனைக்கு வந்து தன் கணவரின் உடலை பார்த்து கதறிஅழுதார்.
மேலும் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






