என் மலர்
ஈரோடு
- லோகன் வீட்டிற்கு வந்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வனசரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் வனவர் ஆறுமுகம், வனக்காப்பாளர்கள் ஹரி விக்னேஷ், கோபால் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் விளாமுண்டி மேற்கு காவல் சுற்றுக்கு உட்பட்ட ஒற்றைப்பனை மரக்காடு பகுதியில் விளாமுண்டி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கருவேல், உசில் போன்ற 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு இருப்பதும், அங்கு விவசாயம் செய்வதற்காக நிலத்தில் உழவு பணிகள் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்த போது அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் லோகன் என்பவர் மரங்களை வெட்டி அகற்றி விட்டு வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து லோகனை கைது செய்ய முயன்ற போது அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து லோகன் தப்பி ஓடி தலைமுறையாகி விட்டார்.
இந்நிலையில் லோகன் வீட்டிற்கு வந்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனசரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் வனவர் ஆறுமுகம், வனக்காப்பாளர்கள் ஹரி விக்னேஷ், கோபால் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர்.
வனத்துறையினரை கண்டதும் லோகன் தப்பியோட முயன்றார். வனத்துறையினர் லோகனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது திடீரென லோகன் வனத்துறையினரை தாக்கி தப்பியோட முயன்றார்.
ஆனால் வனத்துறையினர் லோகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
லோகன் மீது சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், காவல்துறையினரை மிரட்டியது, மான் வேட்டை ஆடியது, மீன் கடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
- ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
- அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி, 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபிகள் தினம் முன்னிட்டு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகள், அத்துடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எல் எப். 2, எப். எல். 3 மதுபான உரிமத்தலங்கள் மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் எதுவும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம்.
- இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
கரூர் மாவட்டம் தென்னிலையை அடுத்த மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (62).
இவரது மூத்த மகன் செந்தில் குமார் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார். இளைய மகன் ராமச்சந்திரன் (33). இவர் தென்னிலை அரசு மேல் நிலைப்பள்ளியில் பகுதி நேர கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மூத்த மகன் செந்தில் குமார் இறந்ததில் இருந்து, தந்தை பழனிசாமி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று வருதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற பழனிசாமி அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோவில் அருகே பழனி சாமியை அவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியபோது பழையூர் சோளக்காளிபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஒரு உடல் கிடப்பதாகத் தெரிவி த்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த போது அது பழனிசாமி என்பது தெரியவந்தது.
கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட திட்ட வீடுகளுக்கு தனியாக 12,000 ரூபாய் வழங்கி கழிப்பறை கட்ட உதவுகின்றனர்.
- பஞ்சாய த்துகளின் கோரிக்கை ஏற்று, 31 இடங்களில் சுகாதார வளாகம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தை பொது இடத்தில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட மாக மாற்றும் முயற்சியாக, அனைத்து நகரம், கிராமப்புற ங்களிலும் உள்ள வீடுகளில் தனி நபர் கழிப்பறை கட்ட அரசு சார்பில் ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது.
மாவட்டத்தில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்யப்பட்டு வரு கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் கட்டப்படும் பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட வீடுகளுக்கு தனியாக 12,000 ரூபாய் வழங்கி கழிப்பறை கட்ட உதவுகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் கிராம, நகரப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடு ப்பின்படி, 2,570 வீடுகளில் தனி நபர் கழிப்பறை இல்லை என்பதை அதிகாரி கள் உறுதி செய்தனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறிய தாவது:
தனி நபர் கழிப்பிடம் குறித்து மாநில அரசிடம் தெரிவித்து, 2,570 வீடு களிலும் தனி நபர் கழிப்பறை கட்ட தலா, 12,000 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு கோரி னோம். முதற்கட்டமாக, 1,387 வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொள்ள நிர்வாக அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.
விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று வழங்கி, கழிப்பறை கட்ட ப்படும். மீதமுள்ள வீடுகளுக்கு அடுத்த கட்டமாக நிதி பெற்று கழிப் பறை கட்ட நிதி வழங்க ப்படும்.
மேலும் பஞ்சாய த்துகளின் கோரிக்கை ஏற்று, 31 இடங்களில் சுகாதார வளாகம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 13 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. அதில், 4 பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள, 9 பணிகள் விரைவில் நிறைவு பெறும்.
தற்போது 2022–-23-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், 6 இடங்களில் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற் கான பணிகள் தொடங்க ப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பவானிசாகர் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்டி.நகர் அருகேமொ பட்டில் வந்த 2 பேர் நடுரோட்டில் டயர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
- இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புஞ்சை புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் ரோடு சந்திப்பில் கடந்த 22-ந் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பவானிசாகர் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்டி.நகர் அருகேமொ பட்டில் வந்த 2 பேர் நடுரோட்டில் டயர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அதிகாலை எஸ்.ஆர்.டி. நகர் 2-வது வீதியில் நிறுத்தப்பட்டு இருந்த பா.ஜ.க. பிரமுகர் சிவசேகருக்கு சொந்தமான கார் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்பார்வையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலமுருகன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையில் 2 வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து புஞ்சை புளியம்ப ட்டியைச் சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த கமருதீன் என்பவர் கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை புஞ்சைபுளியம்பட்டி அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் பா.ஜ.க. பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், ரோட்டில் டயர் எரித்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த அப்துல் வகாப், நியமத்துல்லா , முகமது உசைன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கைதான 4 பேரும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறை யில் அடைக்க உத்தர விட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கோபி செட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஷேக் தாவூத் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
- மாடு வியாபாரம் செய்ததில் கடன் இருந்ததாக தெரிகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடு த்துள்ள ராமபையலூரை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (53). இவரது மனைவி ஷஜாதி (38). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஷேக் தாவூத் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்துள்ளார். மாடு வியாபாரம் செய்ததில் கடன் இருந்ததாக தெரிகிறது.
கடன் கொடுத்த வர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியவி ல்லையே என அவர் மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார். கடனை திருப்பி கொடுத்து விடலாம் என அவரும் கணவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் ஷஜாதி பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டார். ஷேக்தாவூதும் வியாபாரத்துக்கு செல்வதாக கூறி சென்று விட்டார்.
இந்நிலையில் கொளு ஞ்சானூர் குளத்துமேட்டின் அருகில் ஷேக் தாவூத் மயங்கி கிடப்பதாக அப்பகு தியை சேர்ந்த ஒருவர் போன் மூலமாக ஷஜாதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து ஷேக் தாவூத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷேக் தாவூத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.
- இதேபோல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.
ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் ரோடுகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதே போல் சென்னி மலை பகுதி களிலும் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.
இந்த பகுதியில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளை நெடுஞ்சாலை துறையின் தர கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரி கோதண்ட ராமன் தலைமை யிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அவர்கள் சாலைகளை அளவீடு செய்தனர். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறையின் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோபிசெட்டிபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடை பெற்றது.
- கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை வாபஸ் பெற வேண்டியும் கையில் பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
இதனையடுத்து கவுன்சிலர்கள் 13 பேரும் கூட்ட த்தில் இருந்து வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் நின்று பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.
பின்னர் சிறுது நேரம் கழித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளே சென்ற னர். அப்போது நகர்மன்ற தலைவர் கூட்டம் முடிந்தது என்று சொன்னவுடன் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- ஈரோட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:
போனில் வந்த மிரட்டலை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் ஈரோடு பஸ் நிலையம்,ரெயில் நிலையம், மணி கூண்டு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இதேபோன்று ஈரோட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அதே நபர்தான் இந்த மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.
- ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
ஈரோடு:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு போன் அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் இன்னும் சில நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து சென்னை போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு 8 மணி அளவில் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாயுடன் ஒவ்வொரு இடமாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். பஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு ரேக்காக சென்று போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைகளிலும் சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரமாக பஸ் நிலை யத்தில் சோதனையிட்டனர்.
இதேப்போல் மணிக்கூண்டு பகுதிக்கும் நேற்று இரவு மற்றொரு போலீஸ் பிரிவினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு பகுதி வரை சாலையின் இருபுற மும் போலீசார் ஒவ்வொரு இடமாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் டவுன் டி.எஸ்பி. ஆனந்தகுமார் தலைமையான போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று அதிரடி சோதனை ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு ரெயில் நிலையத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட தொடங்கினார்.
ரெயில் நிலைய நுழை வாயில் பகுதி, பயணிகள் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடை பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனையிட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு பணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
மேலும் ஈரோடு வழியாக சென்ற அனைத்து ெரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் பயணிகள் உடைமைகளை சோதனை யிட்டனர். இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக ரெயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்ததில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.
இதனையடுத்தே போலீசார் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இதே போல் 2 முறை ஈரோடு பஸ் நிலையம், மணிக்கூண்டு, ெரயில் நிலையம் பகுதிக்கு வெடிகுண்டல் மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்து ள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சிறையில் 3 வேளையும் சாப்பாடு நல்லா கிடைக்கும் என்பதால் இது போன்ற மிரட்டல் விடு த்தேன் என்று கூறியிருந்தார்.
அந்த நபர்தான் இந்த முறையும் மிரட்டல் விடுத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.
- லட்சுமிகாந்தனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
- மனைவி புவனேஸ்வரி குளியலறைக்கு சென்று பார்த்தபோது லட்சுமிகாந்தன் வழுக்கி விழுந்த நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மலையடி புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் (56). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
லட்சுமிகாந்தனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன்பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் குளியலறைக்கு சென்ற லட்சுமிகாந்தன் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதையடுத்து அவரது மனைவி புவனேஸ்வரி குளியலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வழுக்கி விழுந்த நிலையில் லட்சுமிகாந்தன் மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு லட்சுமிகாந்தனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
- இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி தொட்டபுரத்தில் பெருந்துறையை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை சுற்றி வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க சோலார் பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலமலை கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜுக்கு, தொட்டபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி ராமன் போன் மூலமாக தொடர்பு கொண்டு சண்முகத்தின் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேட்டரி மின் வேலியில் சிக்கி சுமார் 65 முதல் 70 வயதுடைய மூதாட்டி இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜ் ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டி யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






