தண்ணீரில் மூழ்கி முதியவர் சாவு

கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம்.இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தண்ணீரில் மூழ்கி முதியவர் சாவு
Published on

ஈரோடு:

கரூர் மாவட்டம் தென்னிலையை அடுத்த மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (62).

இவரது மூத்த மகன் செந்தில் குமார் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார். இளைய மகன் ராமச்சந்திரன் (33). இவர் தென்னிலை அரசு மேல் நிலைப்பள்ளியில் பகுதி நேர கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மூத்த மகன் செந்தில் குமார் இறந்ததில் இருந்து, தந்தை பழனிசாமி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று வருதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற பழனிசாமி அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோவில் அருகே பழனி சாமியை அவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியபோது பழையூர் சோளக்காளிபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஒரு உடல் கிடப்பதாகத் தெரிவி த்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த போது அது பழனிசாமி என்பது தெரியவந்தது.

கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com