என் மலர்
நீங்கள் தேடியது "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
- மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்தது.
- இன்று 181 மனுக்கள் வந்துள்ளது. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும், மற்றொரு பகுதி மலை கிராமங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மலை பகுதிகளில் 50 குடும்பங்கள் இருந்தாலே அந்த பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
அதே போல, நமது மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தொழிற் சாலைகளில் பணியில் சேர்வதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியினை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது தனித் திறமையை வளர்த்துக் கொண்டு தமிழக அரசு மூலம் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு, பணி ஆணைகளை பெற்று பயனடைய வேண்டும்.
குழந்தை திரு மணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாரச்சந்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதும க்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 38 மனுக்களுக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. 9 மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ள நிலையில், 34 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும், இன்று 181 மனுக்கள் வந்துள்ளது. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 45 ஆயிரத்து 702 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது அஸ்லம், தோட்ட கலை துறை இணை இயக்குனர் பூபதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோதனையில் பல கடைகளில் இருந்து சர்வ சாதாரணமாக தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 300 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டது.
- மீன்களை மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்களை அளிக்கப்பட்டன
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்த பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து செல்கின்றனர்.
நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கவே சமையலின் தரமும் குறைய தொடங்கியது. இந்நிலையில் பொதுமக்களின் அடுக்கடுக்கான புகார்கள் அதிக அளவில் சென்றதால், பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் வேலுச்சாமி, ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் மற்றும் ஒகேனக்கல் மீன்வள பணியாளர்கள் நேற்று திடீரென ஒகேனக்கல் மீன் விற்பனை கூடம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல கடைகளில் இருந்து சர்வ சாதாரணமாக தரமற்ற முறையில் அழுகிய நிலையில் இருந்த 300 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டது. அந்த மீன்களை மண்ணில் குழி தோண்டி கொட்டப்பட்டு மீன்களை அளிக்கப்பட்டன.
மேலும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அலுவல ர்கள் மீன் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி மீண்டும் இது போல் அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்தனர்.
- ஈரோட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
- பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:
போனில் வந்த மிரட்டலை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் ஈரோடு பஸ் நிலையம்,ரெயில் நிலையம், மணி கூண்டு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இதேபோன்று ஈரோட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அதே நபர்தான் இந்த மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






