என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strict action will be"

    • ஈரோட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:

    போனில் வந்த மிரட்டலை தொடர்ந்து நேற்று இரவு போலீசார் ஈரோடு பஸ் நிலையம்,ரெயில் நிலையம், மணி கூண்டு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

    முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே இதேபோன்று ஈரோட்டிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அதே நபர்தான் இந்த மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

    பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் புரளியை கிளப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×