என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் தாளவாடி, கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் மானா வாரி மக்காச்சோளமும், இதர பகுதிகளில் நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தின் யூரியா 1500 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 300 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி, கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும் என்றும், குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 3991.72 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1723.275 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1264.45 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10192.503 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 867.175 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன் படுத்துவதோடு, திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்த தமிழக முதல்-அமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை இயக்குநர், மாவட்ட கலெக்டர், வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) ஆகியோர்களுக்கு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    • பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்துக்கு கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வந்து ஆய்வு செய்தார்.
    • மேலும் அனைத்து போலீஸ் அதி காரிகள் மற்றும் போலீ சாரின் குடும்ப நலன் பற்றி விசாரித்தார்.

    பவானி:

    பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்துக்கு கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி வந்து ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள அலுவலக பதிவேடு கள், வழக்கு கோப்புகள் பராமரிப்பு மற்றும் வழக்கு களின் கண்டுபிடிப்பு ஆகிய வைகள் குறித்து ஆய்வு செய்து பாராட்டினார்.

    அப்போது அவர் பேசும் போது, போலீசார் பொது மக்களின் நண்பனாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அனைத்து போலீஸ் அதி காரிகள் மற்றும் போலீ சாரின் குடும்ப நலன் பற்றி விசாரித்தார்.

    இந்த ஆய்வின் போது ஈரோடு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், சத்தியமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், கோபி டி.எஸ்.பி. சியாமளா தேவி, பவானி டி.எஸ்.பி. அமிர்த வர்ஷினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ண மூர்த்தி, சண்முகசுந்தரம், மோகன்ராஜ், முருகையா மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பொன்ன ம்மாள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    • கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
    • மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    மழை நின்றதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவுடன் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

    இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்படுகிறது. மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    • வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார்.
    • வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெருந்துறை:

    மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம், ராமேஸ்வர்பூர் பகுதியை சேர்ந்தவர் ரபியுல்ஷாஜி. இவர் தனது மனைவி தஸ்நாமா, மகள்கள் ரஷ்னாராகாதுன் (வயது 20), ரிஹானாகாதூன், ரூமானாகாதூன் ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    ரபியுல்ஷாஜி பெருந்துறை பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். மனைவி தஸ்நாமா, மூத்த மகள் ரஷ்னாராகாதுன் 2 பேரும் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் ரஷ்னாராகாதுன் 2 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவருடன் தங்கி இருந்தார். இதனையடுத்து கொஞ்சம் நாளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் குடியிருந்து வந்தார்.

    இதனையடுத்து ரபியுல்ஷாஜியின் 2 மகள்கள் மற்றும் மனைவி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று இருந்தனர். வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார். ரபியுல்ஷாஜி கட்டிட வேலைக்கு சென்ற விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்போட்டு இருந்தது.

    தட்டி பார்த்து கதவு திறக்காததால் கம்பியை வைத்து ெநம்பி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.

    உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரஷ்னாராகாதுன் இறந்து விட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு பின்னால் உள்ள இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உள்ளூர், வெளியூர் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் பலரும் அதிகாலை முதலே பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வார்கள்.

    அதேபோல், தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது இங்கு உள்ள சங்கமேஸ்வரர் சாமியை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    • ராஜேஸ்வரி புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபுவை கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காரப்பாடி அருகே செல்லம்பாளையம், வி.கே.சி. நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு (53). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ராஜேஸ்வரி (41).

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவருடன் காரில் 4 பேர் சென்றதாக அதே ஊரை சேர்ந்த ஒருவர் பாபு மனைவியிடம் கூறியுள்ளார்.

    2 நாட்கள் ஆகியும் பாபு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி ராஜேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடினார். எனினும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ராஜேஸ்வரி புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபுவை கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாபுவை அந்த கடத்தல் கும்பல் மதுரையில் இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் பாபு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று தான் காரில் சென்ற போது அடையாளம் தெரியாத 4 பேர் திடீரென எனது காரை மறித்து காருக்குள் ஏறி தன்னை அடித்து உதைத்து கடத்தி சென்றதாகவும், ஒரு நாள் முழுவதும் தன்னை மறைவான இடத்தில் அடைத்து வைத்து பணம் கேட்டு தாக்கியதாகவும், பின்னர் அந்த கும்பல் என்னை மதுரையில் இறக்கிவிட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் பாபுவை கடத்தியது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்களை பிடித்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அணையின் நீர் தேக்க பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது.
    • மேலும் நீர் தேக்க பகுதியையொட்டிய பகுதிகளில் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து வருகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாட்டங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    நீலகிரி மலை ப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். மேலும் ஊட்டி மலைப்பகுதி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் நீர் தேக்க பகுதிகளில் விவசாயிகள் பலர் வாழை உள்பட பல்வேறு பயிர்களை சாகு படி செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் கடந்த மாதம் வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது.

    அணையின் பாதுகாப்பு வழிமுறைப்படி இந்த மாதம் (நவம்பர்) 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி அணையில் 104 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கபட்டு வரு கிறது.

    இந்த நிலையில் அணையில் 100 அடிக்கு குறைவாக இருக்கும் போது போது நீர் தேக்க பகுதியை யொட்டி உள்ள மேட்டுப்பாளையம் முதல் பவானிசாகர் வரை விவசாய நிலங்களில் வாழை, தட்டைக்காய், செண்டு மல்லி ஆகியவை சாகுபடி செய்வது வழக்கம்.

    இதே போல் கடந்த ஆண்டு பவானிசாகர் அணையில் 100 அடிக்கு கீழ் தண்ணீர் இருந்தது. இதை யொட்டி ஈரோடு மாவட்ட த்துக்குட் பட்ட பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதிகளான சித்தன் குட்டை, ஜே.ஜே.நகர், கனரா மொக்கை, புதுக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் வாழைகள் சாகுபடி செய்தனர். ஒரு ஆண்டு பயிர் என்பதால் வாழை களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அணையின் நீர் தேக்க பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படி யாக உயர்ந்து அணையின் நீர் மட்டம் 104 அடிக்கு மேல் இருந்து வருகிறது.

    இதனால் நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் நீர் தேக்க பகுதியையொட்டிய பகுதிகளில் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து வருகிறது.

    இதையொட்டி சித்தன் குட்டை, புதுக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 2 லட்சம் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகிறார் கள்.

    • ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    • இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் ஜஜினா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்ப வர் மகன் பிரபு என்கிற சக்திவேல் என்பவரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    • அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
    • ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் -1 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வானது 33 மையங்களில் நடைபெற்று வருகின்றது. 92 பதவிகளு க்கான இந்த எழுத்து தேர்வை எழுத ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 115 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர்.

    தேர்வு கண்காணிக்கும் பணியில் 9 பறக்கும் படைகள், 7 நடமாடும் குழுக்கள், 34 ஒளிப்பதி வாளர்கள், 33 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

    தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 

    • அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பவானி:

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லதா மணி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று லதா மணி தனது மொபட்டில் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து லதா மணியின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடை பெறுவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் ஈரோடு-காங்கேயம் பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, பொக்லைன் எந்திரங்களை கொண்டு சாலையோரத்தில் பள்ளம் பறித்து சாலை விரிவாக்க பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சாலை விரிவாக்க பணிகள் மெத்தனமாக நடை பெறுவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் பகுதி முக்கிய நால்ரோடு சந்திப்பு சாலையாக இருப்பதாலும், ஈரோடு- காங்கேயம் பிரதான சாலையாக உள்ளது.

    மேலும் கஸ்பா பேட்டை பஸ் நிறுத்தம் அருகிலேயே பஞ்சாயத்து அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி, வங்கிகள், அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, சிவன் கோவில், பெருமாள் கோவில், மகா முனிஸ்வரர் கோவில் இருப்பதால் அப்பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் போக்குவரத்து இடையூறு அதிக அளவில் உள்ளது.

    தவிர சாலைகளை கடந்து செல்ல பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி ன்றனர். விபத்து அபாயம் அதிகரித்து காணப்படுகிறது.

    போக்குவரத்து இடையூறு தவிர்க்கவும், விபத்து அபாயம் இல்லாமல் இருக்கவும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • ஈங்கூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்பதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே உள்ள எல்லமேட்டில் சிமெண்ட் கற்கல் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் சேவலை வைத்து சூதாட்டம் நடப்ப தாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 6 பேர் 3 சேவல்களை வைத்து சண்டை நடத்தி சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மேலாளராக பணி புரியும் பெருந்துறை அருகே உள்ள கொம்பக்கோவிலை சேர்ந்த பிரகாஷ் (40), எல்லை மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34), கோவை வ. உ .சி, நகரைச் சேர்ந்த ராஜா (36), கோவை அஞ்சும் நகரைச் சேர்ந்த செல்வம் (54), கொம்ம கோவில் பகுதிைய சேர்ந்த முருகன் (48), கொம்ம கோவில் பகுதியை சேர்ந்த ரவி (38) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 3 சேவல் கள் மற்றும் ரூ.8,700-ஜ போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×