என் மலர்
ஈரோடு
- கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- இதனால் கத்திரிக்காய்களை விவசாயிகள் ரோட்டோரம் மற்றும் குப்பையில் கொட்டி வருகிறார்கள்.
தாளவாடி:
தாளவாடி மற்றும் சுற்று வட்டார கிரா மங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் விவசாயிகள் பல்வேறு விவசாய பணிகள் செய்து வருகிறார்கள்.
மேலும் மலை கிராம ங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம் , பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடு வது வழக்கம்.
இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரிக்காய்களை கொள்முதல் செய்ய பெரும்பாலான வியாபாரிகள் முன் வர வில்லை என விவசாயிகள் கூறினர்.
ஆனால் வியாபாரிகள் கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.4 மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதனால் கத்திரிக்காய்களை விவசாயிகள் ரோட்டோரம் மற்றும் குப்பையில் கொட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
4 மாத பயிரான கத்திரிக் க்காய் நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதம் முன்பு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.15 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ .3 முதல் ரூ.4 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
அதிக விளைச்சல் உள்ளது என கூறி குறை வைான விலைக்கு வியா பாரிகள் கேட்கின்றனர். வியாபாரிகள் குறைநத விலைக்கு கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்ப தில்லை என்றனர்.
மேலும் விவசாயிகள் கூறும் போது, விலை வீழ்ச்சியால் பழுத்த கத்திரிக் காய்களை பறித்து குப்பை யில் கொட்டி வரும் நிலை உருவாகி உள்ளது.
சிலர் அப்படியே செடியில் விட்டு விடுகின்ற னர். விவசா யத்தை நம்பி இருந்தால் கடன் தொல்லை யால் அவதிபட வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவ சாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி செல்லவேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
- சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர்.
- இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் லட்சுமி நகரை சேர்ந்த ரேவதி. இவர் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையத்தை சேர்ந்த நிறுவனத்திடம் கடந்த மார்ச் மாதம் ஆன்லைனில் ஆர்டர் செய்து 11.45 டன் வெங்காயம் வாங்கி உள்ளார்.
ரூ.2.17 லட்சம் மதிப்பி லான வெங்காயத்தை வாங்கி விட்டு பல மாதங்களாக பணத்தை தராமல் ரேவதி காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ஏமாற்ற மடைத்த திருப்பூர் நிறுவன உரிமையாளர் பாசல் அகமது பல முறை முயன்றும் பணத்தை பெற முடியாத நிலையில் இது குறித்து சித்தோடு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரேவதி தலைமறைவானார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார் தலைமறைவாக இருந்த ரேவதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைனில் வாங்கிய வெங்கா யத்தை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வேறொரு வியாபாரிக்கு பாதி விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் பலரிடம் தன்னை வியாபாரி என அறிமுகம் செய்து இதுபோல் மொத்தமாக பொருட்களை வாங்கி கிடைத்த விலைக்கு விற்பனை செய்து பணத்தை செலவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக இதுபோல் பல பேரிடம் சுமார் ரூ.12 லட்சம் அளவிற்கு மோசடி செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரேவதி நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பெருந்துறை போலீசார் அங்கு சென்று கண்காணித்ததில் பாரத் பகுதியில் உள்ள முள்புதர் பகுதியில் சேவல் சண்டை நடைபெற்றது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனிஷ் பர்மன் (30), அனோகேஷ் பைடியா (27), கமலேஷ் பைடியா (21), நஸ்ருதின் கைன் (23), முபாரக் பிஸ்வாஸ் (24), பெய்ஜிகாஜி (34), தன்மேஸ் மண்டல் (23), ரஹி மண்டல் (33), அபிக்ஜித் தாஸ் (26), தப்லு மகாஜன் (24), மனோப் மண்டல் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 4 சேவல்கள், பணம் ரூ. 4,720 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- கார் மற்றும் பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு:
கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்ததையடுத்து கர்நாடக எல்லையில் அமைந்து உள்ள ஈரோடு மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகிறது. கார் மற்றும் பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கார் மற்றும் பஸ் பயணிகளிடம் என்ன காரணத்துக்காக தமிழகத்துக்கு வருகிறீர்கள் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாரி மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். டிரைவர்கள் பெயர் விபரம் குறித்து கேட்டறிந்தனர்.
இதே போல் கொடுமுடி நொய்யல் சோதனை சாவடி, தாளவாடி சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, விஜயமங்கலம், பர்கூர், லட்சுமி நகர் சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் சிப்டு முறையில் வாகன சோதனை செய்யவும், பாதுகாப்பு பணி மேற்கொள்ளவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.
- போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது.
- வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா (35).
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகநாதன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தனர். அவர்கள் கையில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி யசோதா ஆகியோர் கத்தி கூச்சலிட முயன்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் பயத்தில் அமைதியானார்கள்.
பின்னர் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழனிச்சாமி படுக்கை அறையில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.
- இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
கொடிவேரியை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (39). இவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மனைவியும் ஸ்ரீசைலா என்ற மகளும் உள்ளனர் .
இந்நிலையில் பழனிச்சாமியும் அவரது மனைவியும் கோபியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
பழனிச்சாமி தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது, கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டத்தில் இருந்து உள்ளார் . சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பழனிச்சாமி ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கீதா தனது மகளை பள்ளியில் இருந்து கூட்டிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கீதா வீட்டில் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது பழனிச்சாமி படுக்கை அறையில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.
தனது கணவர் பழனிச்சாமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த கீதா சத்தம் போட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பழனிச்சாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பழனிச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.
- சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த அவல்பூந்துறை வடக்கு வெள்ளியம்பாளையம் புது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
சம்பவத்தன்று கொலாங்காட்டுவலசு பருத்திக்காரர் தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.
இதனால் வலியால் அலறி துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
- இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி செம்புளிசாம்பாளையம் நடராஜ் தோட்டத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (30). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்தார்.
சிவகுமாருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தீபா என்கிற தீபலட்சுமி என்ற மனைவியும், கிஷோர் ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு கள்ளிப்பட்டியில் வசித்துக் கொண்டு பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளார். இதில் போதிய வருமானம் இல்லாததால் சிவக்குமார் இத்தொழிலை கை விட்டுள்ளார்.
தற்பொழுது சிவக்குமார் தனது தந்தை வீட்டுக்கு பக்கத்தில் மனைவி குழந்தை–யுடன் இருந்து வசித்து வந்தார். சிவக்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படு–கிறது.
இந்நிலையில், சிவகுமாருக்கும் அவரது மனைவி தீபாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணியளவில் சிவக்குமார் வெளியில் சென்று வருவதாக மனைவி தீபாவிடம் சொல்லி விட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தார் சிவக்குமாரை தேடியுள்ளனர். இந்த நிலையில் சிவக்குமாரின் நண்பர் கள்ளிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவர் சிவக்குமாரின் உறவினர் சென்னியப்பன் என்பவருக்கு போன் செய்து சிவக்குமார் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவக்குமாரின் குடும்பத்தார் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிவக்குமார் இறந்து கிடந்ததை கண்டு உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
- டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் உமா–மகேஷ்வரன். கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி ஹேமா (22). இவர்களது மகன் தக்ஷன் (5). வீட்டிற்கு அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.
தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தக்ஷனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
- அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பெரளிமேடு பகுதியில் வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கவுண்டச்சிபாளையம் துய்யம்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (32), அவல்பூந்துறையை சேர்ந்த ஞானதண்டபாணி (43), சோலார் புதூரை சேர்ந்த செந்தில்ராஜ் (44), குயிலான்தோப்பை சேர்ந்த மாதேஷ்வரன் (38) ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
- கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.
- பவானிசாகர் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களாகவே பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.28 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 500 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.
- அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள சரளை, பொன்முடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (32). இவர் நேற்று நள்ளிரவு பெருந்துறையில் இருந்து சரளை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சிப்காட் ரவுண்டானா அருகே வந்த போது இவருக்கு முன்னால் சென்ற சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.
அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட யுவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






