என் மலர்
ஈரோடு
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு தங்கதுரை மற்றும் போலீ சார் வாய்க்கால் மேடு பகுதியில் ேசாதனை செய்து கண்காணித்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோத னை நடத்தி விசாரித்தனர். இதில் அவர்கள் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த பிரதாப் (21), பெருந்துறை பழைய பாளையம் பகுதி சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரியவந்தது.
மேலும் போலீசார் அவர்கள் வைத்து இருந்த கட்டைப் பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் ரூ.20 ஆயிரம் மதிப்பி லான 2 கிலோ கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை மெஷின் இருந்ததும், அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்தும், இவர்கள் ஈரோடு பழைய பாளையம் பகுதியை சார்ந்த நவீன் (21) என்பவரிடமிருந்து கஞ்சா வை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்த னர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, எடை மெஷின், மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து நவீனை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் ஈரோடு மணல்மேடு பகுதியை சார்ந்த கணேசன் மற்றும் ஈரோடு காந்தி கார்டன் பகுதியை சேர்ந்த பாலா (29) ஆகியோரிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக தெரி வித்தார்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன், பிரதாப், உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான கணேசன் மற்றும் பாலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 12 நாட்களாகவே பவானிசாகர் அணை 104 அடியில் நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 591 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
- சங்கமேஸ்வரர் முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பவானி:
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சங்கமேஸ்வரர் முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குமரா பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
- இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தாளவாடி:
தமிழகம் முழுவதும் தற்பொழுது கால் நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கி வருகிறது. அதேபோல தாளவாடி மலைப்பகுதியிலும் கால் நடைகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கல்மண்டி புரம், சோளகர்தொட்டி, எரகணஹள்ள, தமிழ்புரம், மாதஹள்ளி, ஜோராஒசூர், காமையன்புரம், தொட்ட காஜனூர், தர்மாபுரம் மற்றும் பசப்பன்தொட்டி கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது.
- இந்த தகவலை ஈரோடு மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 24-ந் தேதி (வியாழக்கிழமை)நடைபெற உள்ளது.
இதனால் ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி நான்கு சாலைப்பகுதி, எஸ்.கே.சி. சாலை, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம் பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம்,
பெரிய வலசு, பாப்பாத்தி காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயண வலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சக்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈ.வி.என்.சாலை, மேட்டூர் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விரிவாக்கம் இருக்காது.
இந்த தகவலை ஈரோடு மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
- சுமித்ரா தனக்கு குழந்தை பிறந்தது குறித்து பெருந்துறையில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவரது மகள் சுமித்ரா (22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியைச் சேர்ந்த சுப்ரததாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் மகளை காணாத அவர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது சுமித்ரா தனது பெற்றோருக்கு போன் செய்து தான் காதல் திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் வசித்து வருவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து அவர் பெருந்துறையில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுமித்ராவை அவரது கணவர் குடித்து விட்டு வந்து வீட்டில் அடைத்து வைத்து சூடு போட்டு சித்ரவதை செய்வதாகவும், சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுப்பதாகவும், தனது பெற்றோரிடம் வீடியோ காலில் பேசி கதறி அழுதார். மேலும் தன்னையும், குழந்தையும் மீட்க வேண்டும் என்றும் கதறினார்.
இதையடுத்து சுமித்ராவின் பெற்றோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த பெருந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த 17-ந் தேதி கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் சுமித்ராவை தேடினர். அப்போது அவர் இடத்தை கண்டுபிடித்து சுமித்ராவையும், அவரது குழந்தையையும் தனிப்படை போலீசார் மீட்டு மங்கள் கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையில் சுமித்ராவை அவரது கணவர் சுப்ரததாஸ் சித்ரவதை செய்தது உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சுமித்ரா மற்றும் அவரது குழந்தையை மீட்டு பெருந்துறைக்கு புறப்பட்டனர். அவர்கள் பெருந்துறைக்கு வந்ததும் சுமித்ரா மற்றும் அவரது குழந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சுமித்ராவின் கணவரிடம் அம்மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுகழிப்பறை கட்டிடத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் குறைகளை கியூ.ஆர். கோடு மூலம் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் இந்த கியூ.ஆர். கோடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பவானி:
உலக கழிப்பறை தினத்தை யொட்டி பவானி 23-வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டிடத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் குறைகளை கியூ.ஆர். கோடு மூலம் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்க ப்பட்டது.
பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் இந்த கியூ.ஆர். கோடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், நிறை, குறைகளையும் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்திற்கு தகவல் தெரி விக்கலாம் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.
மேலும் பவானி நகராட்சி க்கு உட்பட்ட 27 சமுதாய கழிப்பறைகள் மற்றும் 3 பொது கழிப்பறைகள் என 30 இடங்களில் இந்த கியூ.ஆர். கோடு புகார் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காணப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் ஜெகதீஷ், 23-வது வார்டு கவுன்சிலர் கவிதா மோகன் உட்பட நகராட்சி பணி யாளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கழிப்பறையை நல்ல முறை யில் சுத்தமாக வைத்திருந்த பணியை பாராட்டி அங்கு பணியாற்றிய தூய்மை பணி யாளர் கணவன்-மனைவி இருவருக்கு சால்வை அணி வித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
- கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.
- தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் அருகே உள்ள கஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ரேணுகா தேவி (38). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது தாய் வீட்டில் தங்கி தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் பாரதி (19). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி தனது நண்பரும் உறவினருமான, அதே கல்லூரியில் படித்து வரும் பரணி (19) என்பவருடன் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.
இருவரும் கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.இதனையடுத்து அவரை காப்பாற்ற முடியாமல் பரணி சத்தம் போட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டு, சத்தியங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டிரைவர் லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது வங்கி விபரங்களை பதிவிட்டு உள்ளார்.
- போலீசாரின் விசாரணையில் வடமாநில கும்பல் இவரது செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டது.
சிறிது நேரத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி உள்ளோம். அதில் உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இது குறித்து எதுவும் விசாரிக்காமல் டிரைவர் லிங்கை ஓப்பன் செய்து அதில் தனது வங்கி விபரங்களை பதிவிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் பணம் எடுக்கப்பட்ட தற்கான மெசேஜ் வந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில் வடமாநில கும்பல் இவரது செல்போனுக்கு லிங்க் அனுப்பி பணம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பஸ் டிரைவர் இழந்த ரூ.75 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் வங்கி மூலம் மீட்டுக் கொடுத்தனர். மேலும் புதிதாக வரும் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
- கோவில்களுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் முன்பகுதியில் இருந்த வேலை எடுத்து அதன் மூலம் கோவில் முன் கதவை உடைத்துள்ளனர்.
- பின்பு 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியில் வீரமாத்தி அம்மன், மருதகாளியம்மன் மற்றும் வல்ல கருப்புராயன் கோவில்கள் உள்ளன.
இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வணங்கி திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவில்களில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று கோவில்களுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் முன்பகுதியில் இருந்த வேலை எடுத்து அதன் மூலம் கோவில் முன் கதவை உடைத்துள்ளனர்.
பின்பு 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதில் கருப்பராயன் கோவில் உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கலாம் எனவும், வீரமாத்தி மற்றும் மருதகாளியம்மன் கோவில் சுமார் 4 வருடங்களாக உண்டியல் திறக்காமல் இருந்ததால் சுமார் ஒரு லட்சம் பணம் உண்டியலில் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான பேர் கோவில் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் உடைத்து கொள்ளை–யடிக்க–ப்பட்ட சம்பவம் குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
- இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பனையம் பள்ளி- பவானிசாகர் ரோடு மல்லியம்பட்டி வனப்பகுதி அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் அடுத்த அரே பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்து அவரிடம் இருந்து ரூ.1½ கோடி அபகரித்து கொண்டு விடுவித்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக மோகன், கர்ணன், பிரைட் பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான அரியப்பம் பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மிலிட்டரி சரவணன் (47) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனின் உதவியாளராக இருந்தார்.
இந்த நிலையில் மிலிட்டரி சரவணன் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து கடந்த அக்டோபர் மாதம் தனது வீடு அருகே விஷம் குடித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
அதன் பிறகு அவர் மீண்டும் தலைமறைவானார். இதையடுத்து முன்னாள் எம்எல்.ஏ. கடத்தல் வழக்கில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு முன் ஜாமீன் வழங்க மறுத்து ஈரோடு மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.
இதை தொடர்ந்து சரவணன் கடந்த 17-ந் தேதி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து சரண் அடைய உத்தர விட்டார்.
இதையடுத்து மிலிட்டரி சரவணன் ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து அவர் சத்தி யமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
- இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக வாய்க்காலில் இறங்கி பாலாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்,
மதுரை மாவட்டம் அவ னியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் கவுந்தரபாண்டி யன். இவரது மகன் பாலா (35). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பாலா நேற்று மாலை பவானிசாக ரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவி லை அடுத்த பாலம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
தொடர்ந்து அவர் அந்த வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்ற பாலா எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பொது மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க்காலில் இறங்கி பாலாவை தேடினர். இரவு நீண்ட நேரமாகியும் அவரை கண்டு பிடிக்க வில்லை. அவர் என்ன ஆனார் என தெரிவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக வாய்க்காலில் இறங்கி பாலாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.






