என் மலர்
நீங்கள் தேடியது "were broken into and looted"
- கோவில்களுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் முன்பகுதியில் இருந்த வேலை எடுத்து அதன் மூலம் கோவில் முன் கதவை உடைத்துள்ளனர்.
- பின்பு 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியில் வீரமாத்தி அம்மன், மருதகாளியம்மன் மற்றும் வல்ல கருப்புராயன் கோவில்கள் உள்ளன.
இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வணங்கி திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவில்களில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று கோவில்களுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் முன்பகுதியில் இருந்த வேலை எடுத்து அதன் மூலம் கோவில் முன் கதவை உடைத்துள்ளனர்.
பின்பு 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதில் கருப்பராயன் கோவில் உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கலாம் எனவும், வீரமாத்தி மற்றும் மருதகாளியம்மன் கோவில் சுமார் 4 வருடங்களாக உண்டியல் திறக்காமல் இருந்ததால் சுமார் ஒரு லட்சம் பணம் உண்டியலில் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான பேர் கோவில் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் உடைத்து கொள்ளை–யடிக்க–ப்பட்ட சம்பவம் குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






