என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saturday Pradosha worship"

    • கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
    • சங்கமேஸ்வரர் முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பவானி:

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து சங்கமேஸ்வரர் முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர், குமரா பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×