வாய்க்காலில் மூழ்கிய வாலிபரை இன்று 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.தீயணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக வாய்க்காலில் இறங்கி பாலாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
வாய்க்காலில் மூழ்கிய வாலிபரை இன்று 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
Published on

சத்தியமங்கலம்,

மதுரை மாவட்டம் அவ னியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் கவுந்தரபாண்டி யன். இவரது மகன் பாலா (35). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் பாலா நேற்று மாலை பவானிசாக ரில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவி லை அடுத்த பாலம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.

தொடர்ந்து அவர் அந்த வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டு இருந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்ற பாலா எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை கண்ட வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பொது மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வாய்க்காலில் இறங்கி பாலாவை தேடினர். இரவு நீண்ட நேரமாகியும் அவரை கண்டு பிடிக்க வில்லை. அவர் என்ன ஆனார் என தெரிவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக வாய்க்காலில் இறங்கி பாலாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com