என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார் தெரிவிக்கும் வசதி"

    • பொதுகழிப்பறை கட்டிடத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் குறைகளை கியூ.ஆர். கோடு மூலம் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
    • பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் இந்த கியூ.ஆர். கோடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    பவானி:

    உலக கழிப்பறை தினத்தை யொட்டி பவானி 23-வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டிடத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் குறைகளை கியூ.ஆர். கோடு மூலம் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்க ப்பட்டது.

    பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் இந்த கியூ.ஆர். கோடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், நிறை, குறைகளையும் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்திற்கு தகவல் தெரி விக்கலாம் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    மேலும் பவானி நகராட்சி க்கு உட்பட்ட 27 சமுதாய கழிப்பறைகள் மற்றும் 3 பொது கழிப்பறைகள் என 30 இடங்களில் இந்த கியூ.ஆர். கோடு புகார் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காணப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் ஜெகதீஷ், 23-வது வார்டு கவுன்சிலர் கவிதா மோகன் உட்பட நகராட்சி பணி யாளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் கழிப்பறையை நல்ல முறை யில் சுத்தமாக வைத்திருந்த பணியை பாராட்டி அங்கு பணியாற்றிய தூய்மை பணி யாளர் கணவன்-மனைவி இருவருக்கு சால்வை அணி வித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    ×