search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோர்ட்டில் சரணடைந்த முன்னாள் உதவியாளர் சிறையில் அடைப்பு
    X

    கோர்ட்டில் சரணடைந்த முன்னாள் உதவியாளர் சிறையில் அடைப்பு

    • முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
    • இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பனையம் பள்ளி- பவானிசாகர் ரோடு மல்லியம்பட்டி வனப்பகுதி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் அடுத்த அரே பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்து அவரிடம் இருந்து ரூ.1½ கோடி அபகரித்து கொண்டு விடுவித்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக மோகன், கர்ணன், பிரைட் பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    முக்கிய குற்றவாளியான அரியப்பம் பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மிலிட்டரி சரவணன் (47) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனின் உதவியாளராக இருந்தார்.

    இந்த நிலையில் மிலிட்டரி சரவணன் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து கடந்த அக்டோபர் மாதம் தனது வீடு அருகே விஷம் குடித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மீண்டும் தலைமறைவானார். இதையடுத்து முன்னாள் எம்எல்.ஏ. கடத்தல் வழக்கில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு முன் ஜாமீன் வழங்க மறுத்து ஈரோடு மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.

    இதை தொடர்ந்து சரவணன் கடந்த 17-ந் தேதி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து சரண் அடைய உத்தர விட்டார்.

    இதையடுத்து மிலிட்டரி சரவணன் ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து அவர் சத்தி யமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×