என் மலர்

  நீங்கள் தேடியது "for cock fighting"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பாரத் நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்பேரில் பெருந்துறை போலீசார் அங்கு சென்று கண்காணித்ததில் பாரத் பகுதியில் உள்ள முள்புதர் பகுதியில் சேவல் சண்டை நடைபெற்றது. இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

  விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனிஷ் பர்மன் (30), அனோகேஷ் பைடியா (27), கமலேஷ் பைடியா (21), நஸ்ருதின் கைன் (23), முபாரக் பிஸ்வாஸ் (24), பெய்ஜிகாஜி (34), தன்மேஸ் மண்டல் (23), ரஹி மண்டல் (33), அபிக்ஜித் தாஸ் (26), தப்லு மகாஜன் (24), மனோப் மண்டல் (34) என்பது தெரியவந்தது.

  இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 4 சேவல்கள், பணம் ரூ. 4,720 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
  • அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பெரளிமேடு பகுதியில் வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

  இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கவுண்டச்சிபாளையம் துய்யம்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (32), அவல்பூந்துறையை சேர்ந்த ஞானதண்டபாணி (43), சோலார் புதூரை சேர்ந்த செந்தில்ராஜ் (44), குயிலான்தோப்பை சேர்ந்த மாதேஷ்வரன் (38) ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

  மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

  ×