லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது.
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள சரளை, பொன்முடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (32). இவர் நேற்று நள்ளிரவு பெருந்துறையில் இருந்து சரளை செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சிப்காட் ரவுண்டானா அருகே வந்த போது இவருக்கு முன்னால் சென்ற சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று இண்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென ரோட்டில் நிறுத்தப்பட்டது.

அப்போது பின்னால் வந்த யுவராஜின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட யுவராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com