பாம்பு கடித்து தொழிலாளி பலி

ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார்.
பாம்பு கடித்து தொழிலாளி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு அடுத்த அவல்பூந்துறை வடக்கு வெள்ளியம்பாளையம் புது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (65). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

சம்பவத்தன்று கொலாங்காட்டுவலசு பருத்திக்காரர் தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு துரைசாமியை கடித்து விட்டது.

இதனால் வலியால் அலறி துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி இறந்தார். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com