என் மலர்
ஈரோடு
- பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
- விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார்.
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடந்தது.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் சசிகலா வரவேற்றார். இயக்குனர் குப்புசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்து பேசினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் இது முடிவடையும். ஜனவரியில் முதல்-அமைச்சரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்-அமைச்சர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.
நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும். பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முழுக்க முழுக்க கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும்.
- வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டுமே நிறுத்தி எரியூட்டப்படும்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் ஈரோடு மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் ஆத்மா மின் மயானம் இயங்கி வருகிறது. ஈரோடு மாநகரில் இறப்பவர்களின் உடல்கள் இங்கு எரியூட்டப்பட்டு உறவினர்களுக்கு அஸ்தி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த மின் தகன மேடைக்கு இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டு வருகிறது. கிராம புறங்களில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்ட நீண்ட நேரம் ஆகும் என்பதால் இங்கு கொண்டு வரப்பட்டு விரைவில் எரியூட்டப்படுகிறது.
இதனால் தினமும் நேரம் ஒதுக்கி இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நடமாடும் தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நடமாடும் தகன மேடையை வடிவமைத்து கொண்டு வந்து உள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் இடத்துக்கே இந்த தகன மேடை வாகனம் மூலம் கொண்டு சென்று கியாஸ் மூலம் எரியூட்டலாம்.
இது குறித்து ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது-
கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் ஆத்மா மின்மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம பகுதிகளிலும் ஆத்மா மின் மயானத்தின் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். கிராம புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். மேலும் தகனம் செய்ய 8 மணி நேரம் தேவைப்படும். தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் இறந்தவரின் உடலை எரியூட்டி அஸ்தி வழங்கப்படும். நடமாடும எரியூட்டும் தகன வாகனம், ஆத்மாவின் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.
முழுக்க முழுக்க கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டுமே நிறுத்தி எரியூட்டப்படும். இந்த வாகனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.7500 மட்டும் வசூலிக்கப்படுகிறது. தற்போது 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரம் இந்த வாகனத்தை கொண்டு செல்ல முடிவு செய்து உள்ளோம்.
மேலும் இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 96557 19666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பதிவுசெய்யும் நபர்கள் உறுதி மொழி பத்திரம், அடையாள அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடமாடும் தகன மேடை தமிழகத்திலேயே ஈரோட்டில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா ஆத்மா அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் சகாதேவன், ரோட்டரி ஆளுனர் இளங்குமரன் ஆகியோர் பங்கேற்று நடமாடும் தகன வாகனத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தங்கவேலு, பொருளாளர் சரவணன், சிவானந்தம்,சத்தியமுர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பிரகாஷ்,பொருளாளர் ஞானமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமை மாடு, ஆடு போன்ற கால்நடைகள் விற்பனையாவது வழக்கம்.
இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும். இங்கு திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்று போன்ற கால்நடைகள் ரூ.85 லட்சத்திற்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சம்பவத்தன்று நந்தகோபாலுக்கு சங்கர் போன் செய்து தான் தூக்குமாட்டி சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
- இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
நாமக்கல் மாவட்டம் முனியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). திருமணம் ஆகாத இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய பெற்றோர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சங்கர் சிறு வயதாக இருக்கும் பொழுது பிரிந்து சென்று விட்டனர்.
இவருக்கு ஒரு தம்பியும், ஒரு அக்காவும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி தனியே சென்று விட்டனர். இவருடைய தம்பி பெருந்துறையில் உள்ள பவானி ரோடு, பாண்டியன் வீதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
சங்கர் கிடைக்கிற வேலைக்கு சென்று அதில் வரும் பணத்தை கொண்டு மது குடித்து விட்டு கிடைக்கிற இடத்தில் படுத்துக்கொள்வார்.
இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக சங்கர் தனது பெற்றோரை நினைத்து வேதனையில் தூக்குமாட்டி இறந்து விடுவேன் என தம்பி நந்தகோபாலிடம் அடிக்கடி கூறி இருந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை நந்தகோபால் வேலை செய்யும் கறிக்கடைக்கு சங்கர் வந்துள்ளார். கடையில் யாரும் இல்லாத போது நந்தகோபாலுக்கு சங்கர் போன் செய்து தான் தூக்குமாட்டி சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு நந்தகோபால் அவர் எப்பொழுதும் போல நடிக்கிறார் என நினைத்து போனை ஆப் செய்து விட்டார்.
பின்னர் மதியம் கறிக்கடைக்கு சென்று பார்த்த போது சங்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து நந்தகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சம்பவத்தன்று காலை சுப்பிரமணியன் வாந்தி எடுத்து உள்ளார்.
- அவரை தாமோதரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பவானி:
பவானி கோனவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் தனக்கு வாழ பிடிக்கவில்லை என அடிக்கடி மகன் தாமோதரன் இடம் கூறிவந்துள்ளார்.
தாமோதரன் தந்தைக்கு ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 4 மணிக்கு சுப்பிரமணியன் வாந்தி எடுத்து உள்ளார்.
இதையடுத்து அவரை தாமோதரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.
- இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி குமலன் ெதருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஆனந்தன் (23), என்ற மகனும் காவியா (19) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தன் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் கடந்த 1 வருடமாக வேலைப்பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 35 நாட்களாக வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.
மகன் ஆனந்தன் மட்டும் வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலை செய்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் செல்வராஜ் மதியம் தனது மகனுக்கு போன்செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஏற்கனவே ஆனந்தன் மன அழுத்தம் காரணமாக 3முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீடு உள் பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல்வழியாக பார்த்த போது ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஆனந்தன இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபிசெட்டிபாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
- இது குறித்து சார்பதிவாளர் தமிழ்செல்வி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வி (56).
இவர் நேற்று பணியில் இருந்த போது பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த்பாலாஜி, புவனா,விஜயலட்சுமி, லீலா மணி, நந்தகுமார் உள்பட 12 பேர் அத்துமீறி அலுவலகத்துக்கள் நுழைந்து பெரியாரின் படம் இந்த அலுவலகத்தில் உள்ளது.
ஏன்பிரதமர் மோடியின் படம் வைக்கவில்லை என்றும், பெரியார் படத்தை கழற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கு சார் பதிவாளர் தமிழ் செல்வி உயர்அதிகாரிகளிடம் பேசு கொள்ளுங்கள், பத்திர பதிவுக்காக டோக்கன் போட்ட பொதுமக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.
அதற்கு பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சார்பதிவாளர் தமிழ்செல்வி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் பா.ஜனதாவை சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
- இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோபி:
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.
தற்போது மழை இல்லாததால் மாவட்டம் முழுவதுமே பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சவுண்டப்பூர், பாரியூர், மொடச்சூர், வடுகப் பாளையம், நல்ல கவுண்டன் பாளையம், நஞ்ச கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
எதிரே நிற்பவர்கள் கூட தெரியவில்லை. இதனால் இந்த பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் காலை நீண்ட நேரமாகியும் வாகனங்களின முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்து சென்றது.மேலும் வயல் வெளிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு பனித்துளிகள் படிந்து இருந்தது.
இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
கிராம பகுதிகளில் பொதுமக்கள் பனிப்பொழிவு மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மொத்தத்தில் கோபி செட்டி பாளையம் சுற்றுவட்டார பகுதியே பனிப்பொழிவால் சூழ்ந்து இருந்தது.
- குரும்பூர் பகுதியில் ஒருவர் சாராய ஊறல்வைத்து இருந்தது தெரியவந்தது.
- இதுதொடர்பாகபோலீசார் கோவிந்தராய் என்ற தொழிலாளியை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து சென்றனர்.
அப்போது குரும்பூர் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் ஒருவர் சாராய ஊறல்வைத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு 20 லிட்டர் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாகபோலீசார் கோவிந்தராய் என்ற தொழிலாளியை கைது செய்தனர். மேலும் சாராய ஊறலையும் அழித்தனர்.
இதே போல் கடம்பூர் அருகே உள்ள அரிகியம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பிஓட முயன்றனர்.
உடனே போலீசார்அவர்களை மடக்கி பிடித்து விசாரணைநடத்தி அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா போதை பொருளை கைப்பற்றினர்.
மேலும் அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நூலக வளாகத்தில் சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கோபி செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் கணபதி பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தோஷ் (21). கூலி தொழிலாளி.
இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு ரேசன் கடையில் இயங்கி வரும் நூலக வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுப்பற்றி தெரிய வந்ததும் உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்து கதறி அழுதனர். மேலும் கோபி செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கடந்த சில நாட்களாக பெரியசாமி பல்வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- இதனால் விரக்தி அடைந்த பெரியசாமி எலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு மயங்கினார்.
ஈரோடு:
ஈரோடு ரங்கம் பாளையம் இரட்டை பாலி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47). இவர் சிப்ஸ் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதனால் விரக்தி அடைந்த பெரியசாமி வீட்டில் எலிதொல்லைக்காக வைத்திருந்தஎலி பேஸ்டை எடுத்து சாப்பிட்டு மயங்கினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெரிய சாமிஇறந்து விட்டார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
- மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
- இதுகுறித்து வேலுச்சாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பள்ளக்காட்டுபுதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 48).
சம்பவத்தன்று இவர் சென்னிமலை-காங்கயம் ரோட்டில் மாரியம்மன் கோவில் கட்டிடத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.
கடைக்கு முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும்.
பின்னர் இதுகுறித்து வேலுச்சாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






