என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hoarding 20 liters of liquor"

    • குரும்பூர் பகுதியில் ஒருவர் சாராய ஊறல்வைத்து இருந்தது தெரியவந்தது.
    • இதுதொடர்பாகபோலீசார் கோவிந்தராய் என்ற தொழிலாளியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து சென்றனர்.

    அப்போது குரும்பூர் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் ஒருவர் சாராய ஊறல்வைத்து இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு 20 லிட்டர் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாகபோலீசார் கோவிந்தராய் என்ற தொழிலாளியை கைது செய்தனர். மேலும் சாராய ஊறலையும் அழித்தனர்.

    இதே போல் கடம்பூர் அருகே உள்ள அரிகியம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பிஓட முயன்றனர்.

    உடனே போலீசார்அவர்களை மடக்கி பிடித்து விசாரணைநடத்தி அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா போதை பொருளை கைப்பற்றினர்.

    மேலும் அவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×