ஐ.டி.கம்பெனி ஊழியர் தற்கொலை

ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.டி.கம்பெனி ஊழியர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி குமலன் ெதருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஆனந்தன் (23), என்ற மகனும் காவியா (19) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தன் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் கடந்த 1 வருடமாக வேலைப்பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 35 நாட்களாக வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.

மகன் ஆனந்தன் மட்டும் வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலை செய்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் செல்வராஜ் மதியம் தனது மகனுக்கு போன்செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஏற்கனவே ஆனந்தன் மன அழுத்தம் காரணமாக 3முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீடு உள் பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல்வழியாக பார்த்த போது ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஆனந்தன இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com