என் மலர்
ஈரோடு
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
- பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.
பவானி:
பவானி பழைய காவிரி ஆற்று பாலம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பிண்ணாக பதில் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது ஈரோடு லக்காபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கருவாமணி என்கிற மணிகண்டன் (24) என்பதும், பவானியில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து மோட்டார்சைக்கிள் திருடிய குற்றத்திற்காக கருவாமணி என்கிற மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் அவரிடம் இருந்த மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- நீலகிரியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது.
ஈரோடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
மேலும் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்ததால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறையினர், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நீலகிரியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3024 கனஅடி தண்ணீர்வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்காலில் 300 கனஅடியும், பவானி ஆற்றில் 2700 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து இதே போல் இருந்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 105 அடியை எட்டும்.
- சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
- பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பசுவபட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது.
பின்னர் 7-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.
13-ந் தேதி இரவு பெண்கள் கலந்து கொண்ட சென்னி ஆண்டவர் குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோவிலுக்கு உட்பட்ட திரளான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபட்டனர்.
இரவு கம்பம் பிடுங்கி கிணற்றில் விடப்பட்டது.
- பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
- ஒற்றையானை அச்சத்தை போக்க ஆசனூரில் கும்கி யானைகளுடன் வனத்துறையினர் உலா வந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பயிர்களை பாதுகாக்க இரவு நேர காவலுக்கு செல்லும் விவசாயிகளை ஒற்றை யானை தாக்குவதால் மனித விலங்கு மோதல் ஏற்படுகிறது.
அதேபோல, இந்த ஒற்றையானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் ஒற்றையானை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை தாக்கும் ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கி யானைகள் தயாராக உள்ளன. தேவைப்படும் போது கும்கி யானைகளை கொண்டு மனித விலங்குகள் மோதலை தடுக்க நடவடிக்கையாக ஒரு மாதம் ஆசனூரில் கும்கிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஒற்றையானை அச்சத்தை போக்க ஆசனூரில் கும்கி யானை களுடன் வனத்துறையினர் உலா வந்தனர். ஒற்றையானை கிராமத்தில் புகும் வழித்தடத்தில் கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து சென்றனர்.
- இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- சேலையால் தூக்கில் தொங்கியபடி வேலன் இருந்து உள்ளார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் வேலன் (40). இவரது மனைவி தாமரை. இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரவு தூங்க செல்லும் போது தனியாக ஒரு அறையில் கதவை தாழிட்டு விட்டு வேலன் தூங்க சென்றாக தெரிகிறது.
பின்னர் இன்று அதிகாலை வழக்கம் போல் வேலன் வீட்டில் இருந்தவர்கள் அவர் இருந்த அறை கதவை தட்டி உள்ளனர். அறையில் சத்தம் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சேலையால் தூக்கில் தொங்கியபடி வேலன் இருந்து உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் வேலன் மீது பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் சில திருட்டு வழக்குகள் இருந்ததாகவும், ஒருமாதம் முன்பு வேலன் கைதாகி சிறைக்கு சென்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- ஈரோடு மாவட்ட த்தில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பவானி கூடுதுறைக்கு அதிகாலை ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
ஈரோடு:
மார்கழி மாதம் பிறப்பை யொட்டி ஈரோடு மாவட்ட த்தில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத பிறப்பை யொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.
இதில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடாக மாநில பக்தர்களும் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த பச்சைமலை சுப்பிரமணியசாமி, பவளமலை முத்துகுமார சாமி, கோவில். பாரியூர் கொண்டத்து காளியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோபிசெட்டிபாளையம், சாரதா மாரியம்மன், ஆஞ்சநேயர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபுஷேகம் செய்யப் பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதணை காட்டப்பட்டது.
இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல் அந்தியூர் பேட்டை பெருமாள், அழகு ராஜ பெருமாள், செல்லீஸ்வரர், தவிட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் மற்றும் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்களில் சாமிக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் அந்தியூர், தவிட்டு பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர் கள் பலர் வந்து சாமி தரி சனம் செய்தனர்.
மேலும் பவானி சங்க மேஸ்வரர், செல்லியாண்டியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டது.
பவானி கூடுதுறைக்கு அதிகாலை ஏராளமான பக்தர்கள் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் 3 நதிகள் சங்கமிக்கும் கூடு துறையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதனால் அதிகாலையிலே யே கூடுதுறையில் பக்த ர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதே போல் சத்தியமங்க லம் மற்றும் தாளவாடி மாரியம்மன், ஈரோடு கோட்டை, பெருமாள், ஈஸ்வரன், பெரிய மாரி யம்மன், கொங்காலம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், சத்தி ரோடு எல்லை மாரியம்மன், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் ஈரோட்டில் பெண்கள் அதிகாலையில் வீட்டு வாசல்களில் கோலமிட்டு சாணியால் பிள்ளையார் செய்து பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர்.
- பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
- நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள மூன்றோடு சின்னப்பெரிச்சி பாளையத்தில் பவானி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் இந்த பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
சத்துணவு மையக் கட்டிடம் பழுதாகிய நிலையில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரியும், அதேபோல் பள்ளியின் வளாகத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு வசதி செய்து தரக்கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று கூடியிருந்த பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பள்ளியில் உள்ள கிணறு தூர் வாராமல் உள்ளது. பாதுகாப்பு வசதி குறைபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்து தர வேண்டும். சமையல் கூடம் புதுப்பித்து தர வேண்டும்.
அங்கன்வாடி மையத்தில் 104 குழந்தைகள் இருந்து வரும் நிலையில் உதவியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அதனால் கூடுதல் பணியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரி முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் கடுங்குளிரும் நிலவி வருகிறது.
- இதனால் பொதுமக்கள் உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா ஆகியவற்றை அணிந்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் கடுங்குளிரும் நிலவி வருகிறது. மாலை 4 மணிக்கு மேல் குளிர் நிலவி வருகிறது. நேரம் செல்ல, செல்ல, குளிர் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மார்கழி மாத பிறப்பையொட்டி வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகளவிலேயே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தாளவாடி, திம்பம், பர்கூர் மலை பகுதிகளிலும், அதனையொட்டி உள்ள கிராம பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இதனால் பொதுமக்கள் உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா ஆகியவற்றை அணிந்து சென்றனர். குளிரின் காரணமாக அதிகாலை நேரங்களில் பஸ்களில்குறைந்த அளவிலேயே கூட்டம் இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நிலவி வரும் பனிப்பொழிவு–மற்றும் குளிரின் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சளி, காய்ச்சல், தலை வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 774 மின்இணைப்புகள் உள்ளன. இவர்கள் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்கும்வகையில் மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் மின்சாரவாரியம் சார்பில்சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு இடங்களில் மின்வாரி ஊழியர்கள்வீடு, வீடாக சென்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இ-சேவை மையங்களிலும் இந்த பணி நடந்து வருகிறது.
ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.
இந்த பணிகளை மின்வாரிய அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து சிறப்பு மையங்கள் மற்றும்இ-ேசவை மையங்களில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க கூட்டம் அலைமோதி வருகிறது.
- மாடுகள் கந்தவேலின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.
- இந்த மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே மைக்கேல் பாளையம் ஊராட்சி பாலகுட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (50). விவசாயி. இவருக்கு 8 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாலக்குட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணத்தடி மலை அடிவார பகுதி பகுதியில் இருந்து இரவு 10-க்கும் மேற்பட்ட மலை மாடுகள் ராசு என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த கூட்டத்தை பார்த்த அவரது வளர்ப்பு நாய்கள் குறைத்தன. இதனை பார்த்து வெளியே வந்த ராசு அந்த மலை மாடுகளை அங்கிருந்து விரட்டி விட்டார்.
பின்னர் அங்கு இருந்து சென்ற மாடுகள் கந்தவேலின் தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கடித்து சேதப்படுத்தியது.
உடனடியாக ராசு மற்றும் கந்தவேல் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உதவியோடு அந்த மாடுகளை விரட்டி கந்தவேலின் தோட்டத்தில் கட்டி வைக்கப் பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்த மாடுகளை வளர்க்கும் நபர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர்.
அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் இவ்வாறு மாடுகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக பட்டியல் கட்டி வைக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிள் குறித்து தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். அந்த வகையிலே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டுள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய்பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மொத்தமாக 958 கி.மீ நீளம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 445 குளங்களுக்கு நீர் செல்ல குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவாக பணிகள் முடிக்கப்படும்.
இந்த திட்டத்தில் மெயின் குழாயின் நீளம் 106.8 கி.மீ. அதன் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு விட்டது. இதில் 6 நீரூந்து நிலையங்கள் வருகிறது.
பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டன்பா ளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் என ஆறு நீர்உந்து நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சுமார் 267.1 கி.மீ. அளவு ஆளு குழாய் (மொத்த நீளம் 267.5 கி.மீ) மற்றும் 780.8 கி.மீ. அளவு குழாய் (மொத்த நீளம் 797.8 கி.மீ) பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மின்மாற்றிகள், பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச்கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர்உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.
மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 61.35 கி.மீ. அளவு (மொத்த நீளம் 63.15 கி.மீ) பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
நிலம் பயன்பாட்டு உரிமை பெறும்பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது. சுமார் 1036 எண்கள் பொருத்தப்பட்டுள்ளது (மொத்தம் - 1045 எண்கள்). இத்திட்டமானது கொரோனா பெருந்தொற்றால் 2020-2021-ம் ஆண்டுகளில் பணிகளில் தாமதம் ஏற்பட்டு தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்கு இதுவரை ரூ.1603.66 கோடி அளவில் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, செயற்பொறியாளர் மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு-அவிநாசி திட்டம்), உதவி செயற்பொறியாளர்கள் சங்கர் (பவானி), ஜெ.வெங்டாஜலம் (பவானி), சண்முகராஜா (பெருந்துறை), விஜயகுமார் (நம்பியூர்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுதன் சேகர்தக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஒடிசா மாநிலம் மொசிந்தா பகுதியை சேர்ந்தவர் சுதன் சேகர்தக்கு (33). இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியில் தங்கி, அங்கு இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மில்லில் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மொடக்குறிச்சியில் இருந்து பூந்துறை செல்லும் வழியில் ஆலுத்து பாளையம் பிரிவு அருகே சுதன் சேகர்தக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சுதன் சேகர்தக்குவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி சுதன் சேகர்தக்கு இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






