என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Executives lay siege demanding"

    • பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
    • நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள மூன்றோடு சின்னப்பெரிச்சி பாளையத்தில் பவானி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதேபோல் இந்த பள்ளியின் வளாகத்தில் சத்துணவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    சத்துணவு மையக் கட்டிடம் பழுதாகிய நிலையில் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரியும், அதேபோல் பள்ளியின் வளாகத்தில் உள்ள கிணற்றில் பாதுகாப்பு வசதி செய்து தரக்கோரியும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று கூடியிருந்த பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பள்ளியில் உள்ள கிணறு தூர் வாராமல் உள்ளது. பாதுகாப்பு வசதி குறைபாடு உள்ளது. அதை நிவர்த்தி செய்து தர வேண்டும். சமையல் கூடம் புதுப்பித்து தர வேண்டும்.

    அங்கன்வாடி மையத்தில் 104 குழந்தைகள் இருந்து வரும் நிலையில் உதவியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அதனால் கூடுதல் பணியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரி முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    ×