என் மலர்
நீங்கள் தேடியது "கடுங்குளிரில் தவித்த"
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் கடுங்குளிரும் நிலவி வருகிறது.
- இதனால் பொதுமக்கள் உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா ஆகியவற்றை அணிந்து சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவுடன் கடுங்குளிரும் நிலவி வருகிறது. மாலை 4 மணிக்கு மேல் குளிர் நிலவி வருகிறது. நேரம் செல்ல, செல்ல, குளிர் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மார்கழி மாத பிறப்பையொட்டி வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகளவிலேயே இருந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தாளவாடி, திம்பம், பர்கூர் மலை பகுதிகளிலும், அதனையொட்டி உள்ள கிராம பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
இதனால் பொதுமக்கள் உல்லன் ஆடைகள், சுவட்டர், குல்லா ஆகியவற்றை அணிந்து சென்றனர். குளிரின் காரணமாக அதிகாலை நேரங்களில் பஸ்களில்குறைந்த அளவிலேயே கூட்டம் இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நிலவி வரும் பனிப்பொழிவு–மற்றும் குளிரின் காரணமாக ஏராளமான பொதுமக்கள் சளி, காய்ச்சல், தலை வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.






