என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.
    • அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி ஆதிபரா சக்தி கோவில் அருகே செயல்படாமல் உள்ள தனியார் நூல்மில் குடோனில் சூதாட்டம் நடைபெறுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த இம்தியாஸ், தனசேகர், அமீர், ஜான் தேவராஜ், கண்ணன், கோகுல், ராஜேஷ்குமார், சசிகுமார் ஆகிய 8 பேர் என்பதும், இவர்களை சூதாட மில் காவலாளி பிரகாஷ் அனுமதித்ததும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், 10 செல்போன்கள், 4 மோட்டார்சைக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் ஒரு வாலிபர் புகையிலை பொரு ட்களை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காளிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வீட்டில் வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஹான்ஸ், போதை பாக்கு உள்பட 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
    • இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோவில் அண்ணா மலை கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (யது 70). இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பொன்னு சாமி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மகன் ஆனந்தராஜ் மற்றும் உறவி னர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    அப்போது அண்ணா மலை கோட்டை பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே பொன்னுசாமியின் செருப்பு மற்றும் லுங்கி கிடந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த உறவி னர்கள் இது குறித்து கொடு முடி தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது கிணற்றில் பொன்னுசாமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை அவர்கள் மீட்டனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். இதில் பொன்னுசாமி குளிக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் பொன்னுசாமி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் மோகன் என்ற மோகன் குமார் (வயது 22).

    அவர் வீட்டு மாடியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. மோகன்குமார் வேலை முடிந்து இரவு நஞ்ச கவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.

    இந்த நிலையில் மோகன் குமார் நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்க சென்றார். காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவி னர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தனர்.

    அப்போது மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
    • மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த தொண்டூர் செங்காடு பகுதி யை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 57). கூலி தொழிலாளி. இவருக்கு குடி பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரங்கசாமி கடந்த 3 நாட்களாக வேலை க்கு செல்லாமல் வீட்டிலேயே மது குடித்து வந்தார்.

    இதை தொடர்ந்து மது குடிக்க பணம் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்த தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ரங்கசாமி வீட்டில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி லட்சுமி அவரிடம் விசாரித்தார்.

    அப்போது மது குடிக்க பணம் இல்லாத தால் வாழ பிடிக்கவில்லை. எனவே மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை அடைத்து அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி பரி தாபமாக இறந்தார். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சோலார் அருகே உள்ள 46 புதூர் ஊராட்சி பிரியா பாறை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 96 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 2007-ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் சுகாதார இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை திறந்து வைத்தார்.

    இதனையடுத்து 46 புதூர் பஞ்சாயத்து முழுவதும் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த பகுதி ஊராட்சிக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனை இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் குப்பை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடிக்க பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ேநற்று மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    அப்போது நீதிமன்ற அட்வகேட் கமிஷனரிடம் ஊராட்சிக்கு வேறு பகுதியில் இடம் கொடுத்து விட்டு தற்பொழுது இயங்கும் திடக்கழிவு கூடாரத்தை இடித்து அகற்றுங்கள் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் ஊராட்சிக்கு வேறு எங்கும் குப்பை கொட்ட இடம் இல்லாததால் அதே இடத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    தவிர தற்பொழுது இயங்கும் கூடாரத்தை இடித்து அகற்றினால் ஊராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி, குப்பை கள் அகற்ற முடியாமல் குப்பை காடாக மாறிவிடும். நோய் தொற்று அதிகரிக்கும். சுகாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் பொதுமக்களின் கருத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்து சென்றார். இதனால் 46 புதூர் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

    • ஈரோடு-சேலம் ரெயில் வழித்தடத்தில் கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டி ஒன்றை கண்டறிந்தனர்.
    • மண்ணுளி பாம்பை போலீசார் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி ரெயில்வே சந்திப்பு, நடைமேடை, ரெயில் மெதுவாக செல்லும் வழித்தடங்களில் தீவிர சோதனையை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது ஈரோடு-சேலம் ரெயில் வழித்தடத்தில் கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டி ஒன்றை கண்டறிந்தனர். அதை போலீசார் மீட்டு சோதனை செய்தனர். அப்போது அதில் 3 கிலோ எடையுள்ள 4 அடி நீள மண்ணுளி பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ரெயிலில் வந்தவர்கள் யாரோ இந்த மண்ணுளி பாம்பை கடத்தி வந்திருக்கலாம் என்றும், போலீசாரின் சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக இந்த மண்ணுளி பாம்பை அவர்கள் வீசி சென்றிருக்கலாம் என்றும் தெரிய வந்தது.

    இதையடுத்து மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பை போலீசார் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

    • ராமு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செல்வியின் தலை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள 60 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு (40). இவர் ஈரோடு மாநக ராட்சி 3-வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி செல்வி (34). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் செல்வி க்கும் மற்றொரு வாலிப ருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமு அவரது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உற வினர்கள் கணவன்- மனைவிக்கு இடையே சமா தானம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் செல்வி க்கும் மற்றொருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனால் ராமு மனைவியை கண்டித்தார். இதை தொட ர்ந்து அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் 60 வேலம் பாளையம் சென்று பொருட்களை வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த ராமு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செல்வியின் தலை, கழுத்து, முதுகு, கை உள்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    இதையடுத்து ராமு அங்கு இருந்து சென்று தலைமறைவாகி விட்டார். இதில் செல்வி படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் செல்வியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கஞ்சா விற்பனை செய்த பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
    • இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது மொசல் மடுவு அருகே பள்ளத்தின் வழியாக ஒரு வாலிபர் சாக்கு பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சந்தே கம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் அவர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டி சாமியின் மகன் பிரகாஷ் (வயது 27) என தெரிய வந்தது.

    மேலும் பிரகாசின் தந்தை ஆண்டிசாமி சம்பவத்தன்று மொசல்மடுவு பகுதியில் தனது வீட்டின் பன்புறம் உள்ள புறம்போக்கு நில த்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்ததையும் போலீ சார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே ஆண்டிசாமியை கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறையில் உள்ள ஆண்டி சாமியை ஜாமீனில் எடுப்ப தற்கு பணம் இல்லாததால் ஆண்டிசாமி மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.

    அதன்படி அவரது தந்தை மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து கொண்டு விற்பனை செய்ய சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • சென்னையில் இருந்து யூரியா உரம் ெரயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி ஆய்வு செய்தார்.
    • குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பாசனத்திற்காக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை மற்றும் காளிங்கராயன் ஆகிய கால்வாய்களிலும், சம்பா பாசனத்திற்காக கீழ் பவானி மற்றும் மேட்டூர் வலது கரை ஆகிய கால்வாய் களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் சாகுபடி பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காச்சோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே உரம்" திட்டத்தின் கீழ் 2-வது முறையாக 'பாரத்" யூரியா உரம் சென்னையில் இருந்து எம்.எப்.எல் நிறுவனத்தின் மூலம் 1,060 மெட்ரிக் டன்கள் ெரயில் மூலம் ஈரோடு வந்தடை ந்ததை வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அவர் தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,765 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 1,914 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 1,205 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 10,877 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 818 மெ.டன்னும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் உரங்களின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவரங்களை விலைப் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைப்பது,

    விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொப்பம் பெற்று உரங்கள் வழங்குவது, அனைத்து விற்பனைகளையும் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது, உரிய முதன்மை ச்சான்று படிவங்களை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்முதல் செய்வது,

    உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பு வைத்திருப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற அனைத்து உர விற்பனை யாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசா யிகளுக்கு வழங்கக்கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு திண்டலில் உள்ள வேளாண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படுவதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பழனிசாமி மின் விசிறியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள திங்களூர் அடுத்த திருக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). இவருக்கு திரு மணமாகி அன்னக்கொடி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

    இவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று பழனிசாமி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவ ர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து பழனிசாமியின் மனைவி அன்னக்கொடி கோபித்து கொண்டு மகள்க ளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் பழனிசாமியின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீடு உள் பக்கமாக மூடி இருந்தது.

    வீட்டிக் கதவை தள்ளி திறந்து பார்த்த போது அங்கு பழனிசாமி மின் விசிறியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று 3-வது நாளாக ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு உள்ளன.
    • கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு கள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    அதேபோல இந்த ஒற்றையானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது.

    இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் ஒற்றையானை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று மதியம் யானைகள் அங்குள்ள ஓடைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு குளிக்க வைத்தனர்.

    பின்னர் மாலை 4 மணியளவில் 2 கும்கி யானைகளையும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ள அரேபாளையம், ஒங்கல்வாடி கிராமம் மற்றும் வனப்பகுதி சாலையில் அழைத்து சென்றனர்.

    கும்கி யானைகள் நடமாட்டம் இருந்தால் காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாளாக ஒற்றை யானையை விரட்டும் பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு உள்ளன.

    காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள கிராமப்பகுதியில் இந்த 2 கும்கி யானைகளையும் வனத்துறையினர் அழைத்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ×