என் மலர்
ஈரோடு
- சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்
- வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வீரப்பம் பாளையம் பாறை கிணறு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது 2-வது மகன் நீத்தீஷ்குமார் (22). இவர் சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று சின்னதுரை தனது மனைவியுடன் வியாபாரம் தொடர்பாக திருப்பூருக்கு சென்று விட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த நீத்தீஷ்குமார் நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டின் அருகில் இருந்த ஒரு குடிசையில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
இது குறித்து அரச்சலுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது
- அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது
ஈரோடு,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடு வெனஉயர்ந்து வந்தது.
இதையடுத்து அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 104.72 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுஇருந்தது.
இதே போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தற்போது கால்வாயில் 500 கனஅடியும், பவானி ஆற்றில் 500 கனஅடியும் என மொத்தம் 1000 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு நீர்வரத்துகுறைந்ததால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.
- ஈரோட்டில் ‘ஸ்டார்’, அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது
- நண்பர்கள், உறவினர்கள், சிறுவர் சிறுமிகளுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்
ஈரோடு,
கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந்தேதி கொண் டாடப்படுகிறது.
இதையொட்டி ஈரோட்டில் 'ஸ்டார்', அலங்கார தோரணங்கள், பரிசு பொருட்கள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி ஈரோட்டில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில் அலங்காரங்கள், தோரணங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன.
இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்பட்டு உள்ளன.
வருகிற 2023-புத்தாண்டு பிறக்கும் வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசலிலும் 'ஸ்டார்கள்' அலங்கார விளக்குகள் தொங்க விடப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் வீடுகளில் வண்ண அலங்கார தோரணங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அழகிய சீரியல் விளக்குகள் பொருத்தி அழகு படுத்தி வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நண்பர்கள், உறவினர்கள், சிறுவர் சிறுமிகளுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்களை கடைகளில் வாங்கி வருகின்றனர்.
- 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்
- அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்
பு.புளியம்பட்டி,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம் சாலையில் உள்ள நேருநகர் என்ற பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 10 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முத்துநகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (33) என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார்.
அப்போது என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து விட்டனர் என்று கூறி போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று கூறியபடி தான் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் தனசேகர் மீது கொலை மிரட்டல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
கைதான தனசேகர் மீது புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- தாளவாடி பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது
- கிராம மக்கள் தலை வலி, காய்ச்சல், சாளியால் கடும் அவதி அடைந்தனர்
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் குளிர் வாட்டியது.
இந்த நிலையில் தாள வாடி பகுதியில் தற்போது மழை குைறந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதே போல் காலை 9 மணி வரை பனி மூட்டம் காண ப்படுகிறது. இதனால் விவசாய பணி கள் பாதிக்கபட்டுள்ளது.
தாளவாடி, தலமலை, ஆச னூர், கேர்மாளம், பன க்கள்ளி மற்றும் திம்பம் மலைப்பாதையிலும் பனி மூட்டம் காணப்பட்டது.
கடும் பனி மூட்டத்தால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டம் காரண மாக கிராம மக்கள் தலை வலி, காய்ச்சல், சாளியால் கடும் அவதி அடைந்தனர்.
- ராசாம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது
- மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்
கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (58). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்தில் உள்ள மாடுகளில் இருந்து பாலை கறந்து சாலைப்புதூரில் உள்ள பால் சொசைட்டிக்கு 2 சக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு அனுமதி
- கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர்
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்கவும், ரசிப்பதற்கும் தடை் விதிக்க ப்பட்டது.
இந்த நிலையில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து குைறந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. தடுப்ப ணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கடந்த 5 நாட்களுக்கு பிறகு கொடி வேரி தடுப்பணையில் இன்று முதல் பொதுமக்க ளுக்கு அனுமதி வழங்க ப்பட்டு உள்ளது.
இதையொட்டி இன்று காலை கொடிவேரி அணை க்கு குறைந்த அளவே பொதுமக்கள் வந்திருந்தினர். தொடர்ந்து அவர்கள் அணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
- துணி வியாபாரி அன்சாரிடம் மகாலட்சுமி நைசாக பேசி நீங்கள் ரூ.29 லட்சம் பணம் கொடுத்தால் நான் எனக்கு தெரிந்தவர்கள் மூலம் ரூ.6 கோடி கள்ளநோட்டு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
- ரூ.6 கோடிக்கு ஆசைப்பட்டு துணி வியாபாரி அன்சார் பணத்துடன் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பெருந்துறை:
கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்தவர் அன்சார் (35) துணி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி தனது நண்பர் அபிலாஷ் என்பவருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிக்கு வந்தார்.
பின்னர் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை சரளை என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் 4 பேர் வந்தனர். இதில் 2 பேர் போலீஸ் சீருடையிலும், மற்ற 2 பேர் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களை பெருந்துறை போலீசார் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் அன்சாரிடம் நீங்கள் கருப்பு பணம் கொண்டு வந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே உங்கள் காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து அவர்கள் அன்சார் காரில் இருந்த ரூ.29 லட்சத்தை எடுத்துக் கொண்டு பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு வந்து உரிய ஆவணங்களை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறி சென்றனர்.
இதையடுத்து அன்சார் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போதுதான் தன்னிடம் பணத்தை பறித்தது போலீஸ் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அன்சார் பெருந்துறை போலீசில் தான் கேரளாவில் துணி வியாபாரம் செய்து வருவதாகவும், பெருந்துறைக்கு ஆயத்த ஆடைகள் வாங்க ரூ.29 லட்சம் கொண்டு வந்ததாகவும், அதை போலீசார் என்று கூறி சிலர் பறித்து சென்றதாக தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல் மேற்பார்வையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன், ஏட்டுகள் பிரவீன், லோகநாதன், தாமோதரன், பாலசுப்பிரமணியம், ராஜா, ரவி மற்றும் காந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் துணி வியாபாரி அன்சாரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக கூறினார். இதனால் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் அன்சாரின் செல்போன் உரையாடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை பறித்து சென்ற கும்பல் வந்து சென்ற கார் எண் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே கேரள துணி வியாபாரி அன்சார் மகாலட்சுமி என்ற பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையடுத்து போலீசார் மகாலட்சுமியை கண்காணித்தனர். அப்போது அவர் கோவை பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மகாலட்சுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது மகாலட்சுமி மற்றும் 4 பேர் இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மகாலட்சுமியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை மீட்டனர்.
மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மதுக்கரை பாலம் அருகே காரில் நின்று கொண்டிருந்த மேலும் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் தேசம் சத்திரத்தில்புரையான் என்ற பகுதியை சேர்ந்த பஷீர் (49), கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சேகர் என்கிற ஜனார்த்தனன் (47), பாலக்காடு மேலர்கோடு சிட்லஞ்சேரி பகுதியை சேர்ந்த பாபு (40), பாலக்காடு கண்ணாடி பகுதியை சேர்ந்த சுதீர் (47) என்பது தெரிய வந்தது. இவர்கள் 5 பேர் சேர்ந்துதான் துணி வியாபாரி அன்சாரியிடம் பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் இந்த கும்பலுக்கு பஷீர் தலைவனாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து பெருந்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவை வருமாறு:-
துணி வியாபாரி அன்சாரிடம் மகாலட்சுமி நைசாக பேசி நீங்கள் ரூ.29 லட்சம் பணம் கொடுத்தால் நான் எனக்கு தெரிந்தவர்கள் மூலம் ரூ.6 கோடி கள்ளநோட்டு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து ரூ.6 கோடிக்கு ஆசைப்பட்டு துணி வியாபாரி அன்சார் பணத்துடன் தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மகாலட்சுமி மற்ற 4 பேருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் முதலில் துணி வியாபாரி அன்சாரை பழனிக்கு வரவழைத்து பணத்தை பறிக்க திட்டமிட்டனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பணத்தை பறித்தால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று கருதி பெருந்துறை பகுதிக்கு வரவழைத்து பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு இருடியம், தங்க பிஸ்கட் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப் பணம், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 7 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். துணி வாங்க வந்த இடத்தில் பணத்தை பறித்து சென்றதாக தவறான தகவல் தெரிவித்த கேரள வியாபாரி அன்சார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
- இந்த பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் மையப்பகுதியில் பஸ் நிலையம்செயல்பட்டு வருகிறது. சேலம், கோவை, திருப்பூர், பழனி மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதி மற்றும் ஈேராடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கு இருந்து தான் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒரேஇடத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டு ஈரோடு பஸ்நிலையம் போக்குவரத்து நெரிசலில்சிக்கி தவித்து வருகிறது.
இதையடுத்து தென்மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்கள் நிற்க ஈரோடு சோலார் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் தரைகள் சமன் செய்யப்பட்டு பஸ்கள் நிற்க தனிதனி ரேக்குகள், பயணிகள் அமர இருக்கைகள், கழிப்பறகைள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஊர் பெயர்கள் பொருத்தும் பணி, பயணிகள் அமரும் இருக்கை, மின்வசதி ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்த பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ்நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
- புளியம்பட்டியை சேர்ந்த ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
- அப்போது அங்கு வந்த ஒரு நபர் உல்லாசமாக இருக்க ரூ.1000 கொடுத்தால் அழைத்து செல்வேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு நபர் தன்னிடம் ஏராளமான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.1000 கொடுத்தால் அழைத்து செல்வேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் புளியம்பட்டிபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பகவதியம்மாள், ரத்தினம், மற்றும் போலீசார் விரைந்து சென்று விபசாரத்துக்கு அழைத்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இடுவட்டி,தொட்டன்னியை சேர்ந்த இளங்கோ (36) என்பதும் டிரைவர் என்றும் தெரியவந்தது.
மேலும் இவர் புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவில்அருகில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து புரோக்கர் இளங்கோவைகைது செய்தனர். மேலும் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்த அழகியை மீட்டனர்.
- மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர் உள்ளே 2 கட்டு விரியன் பாம்பு இருப்பதாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- தீயணைப்புத் துறையினர் அந்த 2 பாம்புகளையும் பிடித்து அந்தியூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை பர்கூர் சாலையில் உள்ளது.
இங்கு தினமும் அந்தியூர், தவிட்டுப் பாளையம், மைக்கேல் பாளையம், சங்கரா பாளையம், புதுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம் மற்றும் பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உள்நோயாளியாகவும் புறநோயாளியாகவும் வந்து சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர்.
இந்த நிலையில்அரசு மருத்துவமனையின் ஸ்கேன் சென்டர் உள்ளே 2 கட்டு விரியன் பாம்பு இருப்பதாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நிலைய அலுவலர் ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் அந்த 2 பாம்புகளையும் பிடித்து அந்தியூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அவர்கள் வரட்டுப் பள்ளம் மலைப்பகுதியில் உள்ள வனப் பகுதியில் கொண்டு அந்த 2 பாம்புகளையும் விட்டனர். இதனால் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
+2
- ஈரோடு சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டுகள் சதீஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படைபோலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.
- பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கோவையில் உள்ள தனது வீடு வாடகைக்கு விடப்படும் என்று இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் வீட்டிற்கு முன்பணமாக ரூ. 40 ஆயிரமும், மாத வாடகை ரூ.10 ஆயிரம் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். தங்களது தொடர்பு எண்ணையும் அதில் பதிவிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை பார்த்த ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது எனது கணவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், அவர்கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், எனவே எங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டு உள்ளார்.
மறு நாள் மீண்டும் அந்த பெண் செல்போனில் தொடர்பு கொண்டு வீடு கேட்டு இருக்கிறார். அப்போது எனது கணவர் உங்களிடம் பேச வேண்டும் என்கிறார் என்று கூறி உள்ளார்.
அப்போது பேசிய அந்த பெண்ணின் கணவர் தனது பெயர் அக்கீத் விஜய் என்று அறிமுகப்படுத்தி கொண்டு தனது அடையாள அட்டையை அனுப்பி வைத்தார்.
மேலும் தான் கோவைக்கு மாறுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அேதாடு வீடு வாடகை மற்றும் முன் பணம் ெகாடுக்க எங்களுக்கு சம்மதம் என்று தெரிவித்து உள்ளார்.
அதை தொடர்ந்து பேசிய அவர் எங்களது வங்கி கணக்கு மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் நேரடியாக நாங்கள் முதலில் உங்களுக்கு பணம் செலுத்த முடியாது.
எனவே நீங்கள் முதலில் நான் அனுப்பும் க்யூஆர் கோடுக்கு ஸ்கேன் செய்து முதலில் ரூ.1 செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி வீட்டு உரிமையாளரும் ரூ. 1 அனுப்பி உள்ளார். உடனே அவர்களுக்கு மீண்டும் ரூ. 2 திரும்பி வந்து விட்டது.
இதையடுத்து வீட்டு உரிமையாளர் மீண்டும் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து ரூ. 45 ஆயிரம் அனுப்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.
இதையடுத்து பணம் அனுப்ப சொன்னவரிடம் கேட்ட போது நீங்கள் தவறுதலாக ஏதாவது செய்து இருப்பீர்கள எனவே நீங்கள் முன்பு அனுப்பிய 1 ரூபாய் போக மீதியுள்ள 44 ஆயிரத்து 999 செலுத்துங்கள் மொத்தமாக உங்களுக்கு பணம் திரும்பி வந்து விடும் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பி மீண்டும் ரு. 44 ஆயிரத்து 999-ஐ செலுத்தினர்.
ஆனால் ரூ.90 ஆயிரமும் மீண்டும் வரவில்லை. மேலும் அவர் போனையும் எடுக்க வில்லை.
இதையடுத்து தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வீட்டு உரிமையாளர் இது குறித்து ஈரோடு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சசிமோகனை சந்தித்து புகார் செய்தார்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்த அவர் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் விசாரணையை ெதாடங்கினார். அப்போது அக்கீம் விஜய் என்பவர் அனுப்பிய போலீஸ் அதிகாரி என்ற அடையாள அட்டை போலியானது என்று தெரியவந்தது.
இணையதளத்தில் வேறு ஒரு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து அதில் படத்தை மாற்றி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
மேலும் எந்த வங்கி கணக்குக்கு இந்த பணம் அனுப்பபட்டது என்று விசாரணை நடத்திய போது அது கேரள மாநிலம் கொச்சினில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு அனுப்ப பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விசாரணை நடத்திய போது இந்த வங்கி கணக்கு அரியானா மாநிலத்தில் இருந்து ஆன்லைனின் தொடங்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் மோசடி நபர் தொடர்பு கொண்ட ஆடியோ மற்றும் செல்போன் எண்ணை கண்காணித்த போது அது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ரஷியா என்ற கிராமத்தில் சிக்னல் காட்டியது.
இதையடுத்து ஈரோடு சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ஏட்டுகள் சதீஷ், பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படைபோலீசார் ராஜஸ்தானுக்கு விரைந்தனர்.
அவர்கள் பரத்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் செல்போன் சிக்னல் உதவியுடன் மோசடி நபரின் வீட்டைகண்டு பிடித்தனர்.
ஆனால் தமிழக போலீசார் வந்ததை தெரிந்து கொண்ட மோசடி நபர் தலைமறைவாகி விட்டார். பின்னர்போலீசார்அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
மோசடி நபரின் வீட்டில் அவரது பெற்றோர் மற்றும் மனைவி மட்டுமே இருந்தனர். அவர்களிடம் மோசடி நபர் குறித்து கேட்ட போது அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது. அவரது செல்போன் எண்ணும் தெரியாது என்று கூறினர்.
இதையடுத்து ஈரோடு சைபர்கிரைம் போலீசார் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து விட்டனர்.
பின்னர் அந்தபகுதியை சேர்ந்த சிலர் ராஜஸ்தான் போலீசார் முன்னிலையில் தமிழக போலீசாரிடம் நீங்கள் தேடி வந்த நபர் மீது எந்த குற்றமும் இல்லை.
வேண்டும் என்றால் அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கூறி எப்படி பணத்தை மோசடி செய்தாரோ அதே போல் வீட்டின் உரிமையாளருக்கு அவர்கள் பணத்தை திருப்பி ெசலுத்தினர்.
ஆனாலும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர் குறித்த விபரங்களை ராஜஸ்தான் சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்து அவர் பற்றிய விபரங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
மேலும் அவரை கண்டுபிடித்து கைது செய்யவும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் இருந்த தனிப்படை போலீசாருக்கு ஈரோட்டில் இருந்தபடியே சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ெஜயசுதா, தொழில் நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் மோசடி நபரின் செல்போன் சிக்னல்களை கண்காணித்து தகவல்களை தெரிவித்தனர்.
மோசடி நபர் பற்றி எந்த தகவலும் தெரியாமலேேய செல்போன் சிக்னலை வைத்தே ஈரோடு சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தான் சென்று மோசடி நபரின் வீட்டை கண்டுபிடித்து பணத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது.
தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.






